கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் வெஜிடபுள்ஸ்

தேதி: October 6, 2014

5
Average: 4.7 (3 votes)

 

உல்லன் நூல் - வெள்ளை, ஆரஞ்சு மற்றும் பச்சை, நிறங்கள்
கத்தரிக்கோல்
தெர்மோகோல் / ஃபோம் ஷீட்
ஃபெவிக்கால்
ப்ளேடு
விரும்பிய நிற சாட் பேப்பர்
ஆரஞ்சு நிற பெயிண்ட்

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சாட் பேப்பரை 23 செ.மீ x 21 செ.மீ என்ற அளவில் இரண்டு துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
நறுக்கிய சாட் பேப்பரில் ஒன்றை எடுத்து கோன் போல் சுருட்டி ஓரங்களை ஃபெவிக்கால் தடவி ஒட்டிவிடவும்.
பிறகு கோனின் வாய்ப்பகுதியை (சமமாக இருக்க) உள்பக்கமாக மடித்துவிடவும்.
கோனின் அடிப்பகுதியில் ஃபெவிக்கால் தடவி, ஆரஞ்சு நிற உல்லன் நூலை இடைவெளி இல்லாமல் சுற்றவும்.
இதே போல் கோன் முழுவதும் தொடர்ந்து சுற்றிவிட்டு, கடைசியாக ஃபெவிக்கால் வைத்து நூலை ஒட்டிவிடவும்.
கோனின் வாய்ப்பகுதியின் அளவிற்கு ஒரு இன்ச் உயரத்தில் தெர்மோகோல் அல்லது ஃபோம் ஷீட்டை வட்டமாக வெட்டி எடுத்து உள்ளே சொருகிவிடவும். தெர்மோகோலின் நடுவில் படத்தில் உள்ளது போல் ஒரு ஓட்டையிட்டுக் கொள்ளவும்.
பச்சை நிற உல்லன் நூலை 10 செ.மீ அளவில் 50 முறை மடக்கி மேலே முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். அதன் அடிப்பகுதியிலுள்ள நூல் தனித்தனி நூலாக இருக்கும்படி நறுக்கிக் கொள்ளவும்.
தெர்மோகோலின் நடுவிலுள்ள ஓட்டையில் உல்லன் நூலைச் சொருகவும். தெர்மோகோலின் மேல் ஆரஞ்சு நிற பெயிண்ட்டை அடிக்கவும். உல்லன் நூல் கேரட் தயார்.
இதே முறையில் ஆரஞ்சு நூலிற்கு பதிலாக வெள்ளை நூலை பயன்படுத்தி முள்ளங்கி போலச் செய்து கொள்ளவும்.
இப்போது உல்லன் நூலில் செய்த கேரட் மற்றும் முள்ளங்கி தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

;) ரொம்ப அழகா இருக்கு. ட்ரிக்ஸிக்கு எடுத்துக்கப் போறேன்.

‍- இமா க்றிஸ்

கிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் வெஜிடபுள்ஸ் சோ சோ ஈஸி அன்ட் க்யூட் எங்க‌ பக்கத்து வீட்டு வாண்டுக்கு இத‌ காமிச்சா அவரே செய்துடுவார் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஈஸியாகவும், சூப்பராகவும் இருக்கிறது

Ellam Nanmaikee