குழந்தைக்கு பசும்பால்

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்தால் சளி கட்டும் என்பது உண்மையா? தோழிகள் தெளிவுபடுத்தவும்

பாலை நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து ஆறியதும் கொடுத்தால் கிருமியினால் உண்டாகும் நோய்கள் வருவதில்லை. குழந்தைக்கு எத்தனை வயசு ?

என் குழந்தைக்கு 5 மாதம் முடிந்துள்ளது,

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

5 மாதம் குழந்தைக்கு தாய் பால் தருவது தான் நல்லது.

5 மாதம் என்றால் மிகவும் சிறிய குழந்தை. இங்கு ஒரு வருடம் வரை குழந்தைக்கு பசும் பால் கொடுக்க அனுமதி இல்லை. தாய்ப் பால் போதவில்லையா? அப்படியெனில் குழந்தைக்கு மில்க் அலர்ஜி ஏதும் இல்லையெனில் உங்கள் குழந்தை மருத்துவரிடம் கேட்டு ஃபார்முலா பால் கொடுக்கலாம். பசும் பால் இப்போது தருவது நல்லதல்ல. வயிற்றுப் போக்கு உண்டாக்கும். குழந்தைக்கு எப்போதும் ஏதாவது புதிதாக மாற்றும் போதும் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

மேலும் சில பதிவுகள்