உடையார்

'உடையார்' எழுத்தாளர் பாலகுமாரனின் சரித்திர நாவல். இங்க நிச்சயம் நிறைய பாலகுமாரன் அவருடைய ரசிகைகள் இருப்பிங்க. ஆனா அவர் எழுத்தில் நான் படித்த முதல் நாவல் இதுவே. உடையார் நாவல் படிக்கிற வாய்ப்பு சமிபத்தில்தான் எனக்கு கிடைத்தது. ஆனா இதை நான் படிக்கணும்ன்னு ரொம்ப நாளகவே ஆர்வமா இருந்தேன். நான் லைப்ரரிலருந்து எடுத்து  வந்துதான் படித்தேன். அவ்வளவு சீக்கிரம் இந்த புத்தகம் எனக்கு கிடைக்கல. இப்போது ஒரே மூச்சில் படிக்கும் படி மொத்தமாக கிடைத்தது.

பொன்னியின் செல்வன் படித்த எல்லோருக்குமே இந்த நாவல் நிச்சயம் பிடிக்கும். பொன்னியின் செல்வர் ஶ்ரீராஜராஜசோழர் நம் மனதை கொள்ளை கொண்ட உண்மை கதாநாயகனின் கனவும், லட்சியமும் கொண்ட தஞ்சை பெரியகோவில் கட்டும் காலக்கட்டமே கதையின் ஓட்டம்.

இது வெறும் மன்னனின் புகழ் மட்டும் பாடவில்லை. சோழர்களின் நாகரிகம், அரசியல் என அவர்களை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இதில் ராஜேந்திரசோழரும் இருக்கிறார். நம் மனதை கொள்ளை இடுபவரோ பொன்னியின் செல்வர்தான்.

இந்நாவல் படித்ததும் தஞ்சை போகவேண்டும் என்ற என் ஆசை பல மடங்கு அதிகம் ஆகிறது. இது பாலகுமாரனின் வெற்றி. அவருடைய ஆசையும் இதுவே என அவரும் முடிக்கிறார்.

தஞ்சை போகவேண்டும், வேறு எங்கும் செல்லாமல் ஒரு நாள் முழுவதும் அந்த கோவிலில் இருக்கவேண்டும். ஶ்ரீராஜராஜதேவர் நின்ற இடம், அமர்ந்த இடம் அவர் ரசித்த இடம் என்று அந்த பிரமாண்டமான பெரியகோவிலை அணுஅணுவாக ரசிக்க வேண்டும்.

்என்னவரிடம் விண்ணப்பம் போட்டிருக்கேன் அழைத்து போறேன்னு உறுதி குடுத்துருக்கார். எப்போது என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் தஞ்சை நோக்கி செல்ல.

5
Average: 4.2 (5 votes)

Comments

இங்கு வாசிகசாலையில் காணோம். ;((

‍- இமா க்றிஸ்

இங்கு நூலகத்தில் எப்போதோ பார்த்துவிட்டேன். ஆனா முக்கியமான புத்தகப்பிரிவில் இருந்தது. நான் வாங்கும் புத்த்கத்தை சரியான தேதியில் திரும்ப கொடுக்காமல் காலதாமதம் ஆகும். அதனால் நூலகர்க்கு என் மீது நம்பிக்கை குறைவு . இந்த புத்தகத்திற்காக அவர் நம்பிக்கை பெற ஒரு வருடம் ஆனது. இப்போதே கையில் கிடைத்தது.

நீங்க PDF ல கிடைக்குமா என்று பாருங்களேன். அப்படி படிக்க பிடிக்குமா ?

Be simple be sample

ரேவதி அக்கா நானும் பாலகுமாரன் ரசிகை அவரது பல புத்தகம் படித்துள்ளேன் இன்னும் உடையார் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.முயற்சி செய்கிறேன்.உங்கள் பதிவை பார்த்ததில் ரொம்ப சந்தோஷமா இருக்கு.தஞ்சை செல்லுங்கள் உங்களுக்குள் ஒரு தேடல் ஆரம்பம் ஆகும்.

இந்த‌ மாதிரி புத்தகங்களை பற்றிய‌ பதிவை படிக்கும்போது, எனக்கு உண்டாகும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பதிவிற்கு நன்றி ரேவதி.

பொன்னியின் செல்வன், வேங்கையின் மைந்தன் & காவிரி மைந்தன்.....இந்த‌ வரிசையில், நான் படிப்பதற்காக‌ எடுத்து வைத்துள்ள‌ அடுத்த‌ புத்தகம் உடையார்.

எனக்கும் நீண்ட‌ நாட்களாகவே தஞ்சையை பார்க்கவேண்டும் என்ற‌ ஆவல். எப்பொழுது நிறைவேறும் என‌ தெரியவில்லை! பார்க்கலாம்.....

நீங்க சொன்ன புத்தகங்கள் ஏதுவும் படிச்சது இல்ல பொன்னியின் செல்வன் படிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை பாக்கலாம் ;)

வருக வருக தஞ்சை வெய்ட்டிங் :p

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சரித்திர கால நாவல்கள் ஏதும் படித்ததில்லைங்.
நீங்க புத்தகத்தை அறிமுகப்படுத்தியது படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.
முயற்சிக்கிறேன் ங்க :-)

நட்புடன்
குணா

வாய்ப்பு. கிடைக்கும்போது நிச்சயம் படிங்கப்பா. நானும் அதற்காகத்தான் காத்திருக்கேன்.

Be simple be sample

அனு உங்களூக்கு எவ்வளவு சந்தோஷம்ன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஏன்னா பொன்னியின் செல்வனில் உங்க பதிவு உங்க ஆர்வம் தெரிஞ்சுது. எப்பவும் நமக்கு பிடிச்சத பேசறது ஹாப்பிதான. நீங்க சொன்ன புக் நானும் படிக்க முயல்கிறேன். உங்க கனவும் சீக்கிரம் நிறைவேற வாழ்த்துக்கள்.

Be simple be sample

நேரம் கிடைக்கும்போது படிங்க சுவா. நானும் வெயிட்டிங்.

Be simple be sample

இது வெறும் கதை இல்லை தம்பிங். நம் தமிழர்களின் வாழ்க்கை எல்லா தலைமுறையும் கொண்டாட வேண்டியது. நேரம் கிடைக்கும்போது முயற்சி பண்ணுங். நன்றீங்.

Be simple be sample

உடையார் படித்ததில்லை. இப்பவே லைப்ரரியில‌ தேடிப் பார்க்கிறேன்.
சரித்திரக் கதைகளை விரும்பி படிக்கிறீங்க‌. குட்:)

அன்பு ரேவா,

ஜஸ்ட் லைக் தட், என்று லைட் ரீடிங் மட்டுமே இப்ப‌ ஃபாஷன் ஆகிட்டிருக்கு. நீங்க‌ உடையார் நாவலைப் பற்றி இவ்வளவு அழகாக‌ சொல்லி, ஆர்வத்தை உண்டு பண்ணியிருப்பது மகிழ்ச்சியாக‌ இருக்கு.

நானும் இந்த‌ நாவலைப் படிக்க‌ ஆவலாக‌ இருக்கிறேன். இன்னும் சந்தர்ப்பம் வரலை.

அவசியம் படிக்கணும்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஆமா நிகி. அதுஎன்னவோ சரித்திரநாவல்னா ரொம்ப பிடிக்கும் .நீங்களும் தேடிப்பாருங்க. கிடைக்கும் புக்.6வால்யும் இந்த புக் . சில இடங்கள் சிறிய தொய்வு வரும். ஆனா நல்ல நாவல்.

Be simple be sample

தான்க்யூ சோமச் சீதாம்மா . எனக்கு புக் பத்தி பதிவு போடும்போது ஒரு தயக்கம் இருந்தது. இந்த பதிவு எல்லோருக்கும் பிடிக்குமான்னு. ஆனா ஒரு சிலர்க்கு நிச்சயம். பிடிக்கும்ன்னு தோணிச்சு.அதான் இந்த பதிவு .

உடையார் படிச்சுட்டு அதை விட்டு வெளிய வரது எனக்கு ரொம்ப. கஷ்டமான விஷயமாத்தாம் இருந்தது. அதன் தாக்கம்தான் இந்த பதிவு . அவசியம் படிங்க சீதாம்மா

Be simple be sample

உடையார் நாவல் நானும் இன்னும் படித்ததில்லை. நீங்க சொல்றதைப் பார்த்தா படிக்கணும் போல இருக்கு :) வாழ்த்துக்கள் ரேவ்ஸ் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சாண்டில்யனின் எல்லா நாவல்களையும் படிச்சிட்டேன் , ரமனிச்சந்திரனின் 2012 வரை உள்ள நாவல்களை படிச்சிட்டேன் ,,,கல்கியின் வரலாற்று நாவல்களை படிச்சிட்டேன்,,,எனக்கு வரலாற்று நாவல்களின் மேல் தீராக்காதல் படிச்சதெல்லாம் ஆன்லைனில்தான் வேறு வழி இல்லை இதற்கும் பிடிஎப் தேடுகிறேன் ,,,,

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

//PDF ல// புத்தகம்.. கைல எடுத்துப் போகலாம். அங்கங்கே கார்ல வீணாகும் பொழுதுகள்ல படிப்பேன். தோட்டம், ஹால், ட்ரிக்ஸிக்கு அருகே... கட்டில்ல சரிஞ்சுட்டு என்று எப்படியும் படிக்கலாம். கூடவே புக் படிச்ச ஃபீலிங் வரும்.
PDF... எனக்கு வசதி குறைவுதான். எப்படியும் லாப்டாப்ல இருக்கிற மாதிரியேதான் இருக்கு. லாப்டாப்ல இருக்கிறதைக் குறைக்கணும் நான். கை, முதுகு, பிடரில்லாம் அதே பொஸிஷன்ல இருக்கிறது... வலிக்க ஆரம்பிச்சுட்டா!! ;(

பாலகுமாரன் ரசிகர் யாரோ எல்லா புத்தகமும் லைப்ரரிக்கு வாங்கிக் கொடுத்து இருக்காங்க. இதுவும் எப்படியாவது வந்துரும். படிச்சுருவேன்.

//திரும்ப கொடுக்காமல் காலதாமதம் ஆகும். // இங்க லேட்டானா ஃபைன் இருக்கு. நாளாக ஆக கூடிட்டே போகும். ஆனா ஆன்லைன்ல எக்ஸ்டெண்ட் பண்ற வசதியும் இருக்கு. சரியான டைமுக்கு அந்த வேலை பண்ணிட்டா போதும். வேற ஆட்கள் ரிக்வெஸ்ட் பண்ணியிருந்தா ஆன்லைன்ல தெரியும். எக்ஸ்டெண்ட் பண்ண விடாது. அப்போ கண்ணுல படுற எந்த லைப்ரரிலயாவது கொண்டு போய் ஸ்லாட்ல தள்ளிட்டு வந்தால் போதும். இதுக்கு நேர காலம் இல்லை. அர்த்தராத்திரில கூட போட்டுட்டு வந்துரலாம்.

‍- இமா க்றிஸ்

நேரம் கிடைக்கும்போது படிங்க அருள் .தான்க்யூ

Be simple be sample

சூப்பர் அஸ்வதா. சீக்கிரம் கிடைச்சா படிச்சுடுங்கபா. தான்க்யூ

Be simple be sample

எனக்கும் கையில் புத்தகம் வைத்து படிக்கதான் பிடிக்கும் இமாம்மா . உங்க ஊர் லைப்ரரில நல்ல நடைமுறை . இங்கலாம் அது வர நாளாகும். இங்கயும் லேட்டான்னா பைன் இருக்கு. ஆனா இப்பலாம் கட்டற அளவுக்கு நடந்துக்கறது இல்ல. தொகை கம்மிதான். ஆனா நம்ம நேர்மை அங்க அடிபடுதுல. அதன் இப்பலாம் தாமத படுத்தறது இல்ல.

Be simple be sample