தேதி: October 9, 2014
மாண்டரீன் - ஒன்று
லாவண்டர் பூக்கள் & இலைகள்
சிறிய கத்தி
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.

பழத்தின் காற்பாகத்திற்குச் சற்றுக் குறைவாக (காம்பிலிருந்து சற்றுத் தள்ளி வெட்டவும்) இப்படி ஒரு துண்டை வெட்டி நீக்கவும்.

இதே போல மறுபக்கமும் வெட்டி எடுக்கவும்.

இருபுறமும் வெட்டி எடுத்ததும் இவ்வாறு இருக்கும்.

கூடை சிதைந்து விடாமல், உள்ளே இருக்கும் சதைப் பகுதியைக் கவனமாகப் பிரித்து எடுக்கவும்.

பிறகு கூடையின் உள்ளே மூன்றில் ஒரு பாகம் நீர் நிரப்பி, அளவிற்கு நறுக்கிய லாவண்டர் பூக்கள் மற்றும் இலைகளை வைத்து அலங்கரிக்கவும்.

Comments
இமா
ஃப்ரூட் கூடை பார்த்திருக்கேன். ஃப்ரூட்லயே கூடை இப்பதான் பார்க்கிறேன்.. குட்டியா, ரொம்ப க்யூட்டா இருக்கு..
கலை
ஏமாற மாட்டேன்
;)) சும்மால்லாம் சொல்லப்படாது கலை. இது எல்லோரும் பண்றதுதான். பொழுது போகல. சாப்பிடும் போது வெட்டிட்டு அப்படியே அறுசுவைக்கு அனுப்பினேன். :-)
நன்றி கலை. :-)
- இமா க்றிஸ்
இமாம்மா
மாண்டரீன் & லாவண்டர் கூடை ச்சோ கியூட் உங்களை மாதிரியே ;)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
இமாம்மா
இது தற்காலிகமானதுதானே! வீட்டுக்கு நண்பர்கள் வரும்போது செய்து வைக்கலாம் இல்லையா? ஐடியா நல்லாயிருக்கு.இதையே வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியை வைத்து செய்து, வண்ணம் பூசி உள்ளே பிளாஸ்டிக் பூக்கள் வைத்தால் நன்றாக இருக்குமோ? தெரியலை! டீச்சர்தான் சொல்லனும்.
//பொழுது போகல. சாப்பிடும் போது வெட்டிட்டு அப்படியே அறுசுவைக்கு அனுப்பினேன்.// கிராஃப்ட் டீச்சர்னா சும்மாவா? கலக்குறீங்க.:)))
இமா
இமா அம்மா ரொம்பபபப... அழகா இருக்கு.உங்களுக்கு மட்டும் எப்படி இப்படிலாம் தோணுது.
எல்லா புகழும் இறைவனுக்கே
இமா...
// ஏமாற மாட்டேன் // இமாவை ஏமாற்றவில்லையே...
// ;)) சும்மால்லாம் சொல்லப்படாது கலை. இது எல்லோரும் பண்றதுதான்.//
ஆனால் நான் பார்த்ததில்லையே.. இப்போதான் முதல் முறையாக பார்க்கிறேன்.. தாராளமா நம்பலாம்.. இமா...
கலை
கனி & ரெமு
;)) நன்றி! நன்றி! நன்றி! ;)
- இமா க்றிஸ்
அனு
//இது தற்காலிகமானதுதானே!// காயையும் காலநிலையையும் பொறுத்து மூன்று நான்கு நாட்கள் இருக்கும். நீர் மாற்ற வேண்டும். இலையையும் மாற்றலாம். லாவண்டர் பூக்கள் காய நாள் ஆகும்..
//வீட்டுக்கு நண்பர்கள் வரும்போது செய்து வைக்கலாம் இல்லையா?// எப்பெப்போதெல்லாம் தோடம்பழம் சாப்பிடுகிறீர்களோ அப்போதெல்லாம் செய்யலாம். கிடைக்கிற herbs வைக்கலாம்.
//ஐடியா நல்லாயிருக்கு.// :-) நன்றி. இது எல்லோரும் செய்வதுதான். என் யோசனை என்று உரிமை கொண்டாட முடியாது.
//இதையே வாட்டர் பாட்டிலின் அடிப்பகுதியை வைத்து செய்து, வண்ணம் பூசி உள்ளே பிளாஸ்டிக் பூக்கள் வைத்தால் நன்றாக இருக்குமோ?// இருக்கும். நல்ல யோசனையெல்லாம் கொடுக்கிறீர்கள். விரைவில் அறுசுவையில் உங்கள் கைவினைகள் வரும் என்று தோன்றுகிறது. :-) வரும் இல்லையா!
'உணவு அலங்காரம்' என்கிற கைவினைப் பிரிவின் கீழ் இந்தக் குறிப்பு வெளியாகியிருப்பதை அவதானித்திருப்பீர்கள் அனு. நோக்கம் - சமைப்பதற்கும் உண்பதற்கும் உகந்தவற்றால் சாப்பாட்டு மேசையை அலங்கரிப்பது. செயற்கைக்கு இடமில்லை.
//கிராஃப்ட் டீச்சர்// அது பார்ட் டைம். டீச்சரில்லாத இமா முழு நேர க்ராஃப்ட்டி. ;)
கருத்துகள் அனைத்திற்கும் என் அன்பு நன்றி அனு. மிக்க மகிழ்ச்சி. :-)
- இமா க்றிஸ்
கலை
ம்.. ;) லாவண்டர் வைத்தது வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.
பார்க்க வைக்கிறேன். :-)
கலை சொன்னதால் கூகுள் பண்ணிப் பார்த்தேன். பெரிதாக ஒன்றும் காணோம். ஒரு பழக் கூடை தெரிந்தது. என் கூடை அதை விட அழகாகத்தான் இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. :-)
- இமா க்றிஸ்
பொழுது போகல
என்னது ? பொழுது போகல!! ம்ம்... டீச்சர் மேடம் இந்தப் பக்கமா ஒரு விசிட் அடிக்கிறதுதானே, பொழுது எப்போ விடியுது எப்போ மறையுதுன்னே தெரிய மாட்டக்குது :-))
கிராஃப்ட் கலர் காம்பினேஷன் சூப்பர்.
பொழுது போகல என்றால்
பொழுது போகல என்றால் இமா ஜாலி மூட்ல இருக்கிறதாக அர்த்தம். போர் அடிச்சா இது எல்லாம் ட்ரை பண்ண மாட்டேன். தூங்கிருவேன். :-)
//கலர் காம்பினேஷன்// எனக்கும் பிடிச்சுது. நன்றி வாணி.
- இமா க்றிஸ்
போரடிச்சா
பொழுது போகல என்பதற்க்குள் இமாவுக்கு இப்படி ஒரு சங்கதி இருக்கா !! அது சரி போரடிச்சா
டிவி பார்க்கிறவங்களத் தெரியும்,
நெட்ல இருக்கிறவங்கள தெரியும்
ஏன்
சமைக்கிறவங்க கூட இருக்காங்க
இப்பத்தான்
தூங்குறவங்களைப் பற்றி கேள்விப் படறேன்.:-))
இமா
ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பழக் கிண்ணம். உடனே செய்யலாம். டைனிங் டேபிளுக்கு மேட்ச்.:)
மாண்டரீன் & லாவண்டர் கூடை
எனக்குப் புரியும் வகையில் நிறைய விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள். நன்றி..நன்றி..இமாம்மா.
//விரைவில் அறுசுவையில் உங்கள் கைவினைகள் வரும் என்று தோன்றுகிறது. :-) வரும் இல்லையா!// இதுவரை செய்ததெல்லாம் அறுசுவைக்கு வரும் அளவு தகுதி பெறவில்லை. தகுதி வந்தபின் வரலாம்.........
மாண்டரீன் கூடை
//போரடிச்சா... இப்பத்தான் தூங்குறவங்களைப் பற்றி கேள்விப் படறேன்.// இனிமேலும் கேள்விப்பட மாட்டீங்க வாணி. போரடிச்சா என்னால எதுவும் பண்ண முடியாது. :-))
ஹாய் நிகிலா, //உடனே செய்யலாம்.// அப்போ! செய்தே பார்த்தாச்சா! படம் ஷேர் பண்ணுவீங்கல்ல! :) நன்றி நிகிலா.
ஹாய் அனு... //தகுதி வந்தபின் வரலாம்..// அதுல்லாம் சீக்கிரம் வரும். எதிர்பார்க்கிறேன். :-)
- இமா க்றிஸ்
அழகான கூடை
கட்டாயம் செய்து பார்கிரன்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
லாவண்டர் கூடை
கருத்துச் சொன்னதோடு நின்றுவிடாமல், செய்து பார்த்து அழகாக அலங்கரித்து படத்தையும் பகிர்ந்துகொண்ட நிகிலாவுக்கு என் அன்பு நன்றிகள். :-)
மிக்க நன்றி ஜனதுல்.
- இமா க்றிஸ்
இமா
கண்டிருக்கிறேன் இது போல கூடை பல இடங்களில். ஆனால் உங்க கலர் காம்பினேஷன்... அழகு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா