கிட்ஸ் க்ராஃப்ட் - டிசைன்டு சீடி

தேதி: October 13, 2014

5
Average: 5 (2 votes)

 

சீடி - ஒன்று
ஃபெவிக்கால்
க்ளாஸ் லைனர் - கருப்பு நிறம்
பூ (அ) விருப்பமான படம்
க்லிட்டர் பவுடர்
மார்க்கர்
க்ளே

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
சீடியின் நடுவில் இருக்கும் துளையைச் சுற்றிலும் ஃபெவிக்கால் தடவி படத்தை ஒட்டிவிட்டு, படத்தைச் சுற்றிலும் க்ளாஸ் லைனரால் அவுட் லைன் வரையவும்.
படத்தில் உள்ளது போல் மார்க்கரால் நான்கு பூக்கள் வரைந்து, அவற்றின் மீது க்ளாஸ் லைனரால் அவுட் லைன் வரையவும்.
வரைந்த பூக்களின் மீது ஃபெவிக்கால் தடவி க்லிட்டர் பவுடரைத் தூவிவிடவும். (பூவின் இதழ்களுக்கு ஒரு நிற க்லிட்டரும், மகரந்தத்திற்கு மற்றொரு நிற க்லிட்டரும் கொடுக்கவும்). பூக்களுக்கு இடையிலுள்ள இடைவெளியில் இலைகள் வரைந்து கொள்ளவும்.
பிறகு இலைகளின் மீது ஃபெவிக்கால் தடவி பச்சை நிற க்லிட்டர் பவுடர் தூவிவிடவும்.
நன்றாகக் காய்ந்ததும் மீண்டும் ஒரு முறை எல்லாவற்றிற்கும் கருப்பு நிற க்ளாஸ் லைனரால் அவுட் லைன் வரையவும். இலையின் உள்ளே நரம்பு போல் வரைந்துவிடவும். சீடியின் பின்புறத்தில் க்ளே வைத்து சுவற்றில் அல்லது கதவில் ஒட்டிவிடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கிட்ஸ் க்ராஃப்ட் - டிசைன்டு சீடி சிம்பிளா அழகா இருக்கு ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வெகு அருமை. சின்னவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

‍- இமா க்றிஸ்

கிட்ஸ் க்ராஃப்ட் - டிசைன்டு சீடி, நல்லாயிருக்கு. பசங்களுக்கு ரொம்ப‌ பிடிக்கும்..

ரொம்ப‌ ஈஸியா செய்துடலாம் போல‌ இருக்கே அழகான‌ க்ராஃப்ட் டீம். வாழ்த்துக்கள்

சூப்பா் அசத்தலா இருக்கு

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

It is beautiful...