யோகம் நல்ல யோகம்

விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டு இருந்தது.

மாலதிக்கு ஒரே பரபரப்பு. பின்னே ‍ பல வருடங்கள் கழித்து, தாய் நாட்டைப் பார்க்க வருகிறார். கல்யாணம் ஆகி டெல்லியில் 10 வருடம். அப்புறம் அமெரிக்காவில் 15 வருடம். நாலைந்து வருடங்களுக்கு ஒரு முறை தமிழ் நாட்டுக்கு வருவதுண்டு. நெருங்கிய உறவினரின் கல்யாணம், உறவினர் வீடுகள், கோயில், என்று விடுமுறை நாட்கள் பனிக்கட்டியாகக் கரைந்து விடும்.

இந்த முறை கூடுதல் சந்தோஷம். அவளது கல்லூரியில் பழைய மாணவிகள் சங்கத்தின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளப் போகிறாள்.

தோழிகளை அமெரிக்கா கிளம்புமுன் பார்த்தது. அப்போதே அவரவர் உத்யோகம், திருமணம், குழந்தைகள் என்று செட்டில் ஆகியிருந்தனர்.

தோழி பிரபா மாலதிக்கு ரொம்பவே நெருக்கம். சீக்கிரமே திருமணம் ஆகி விட்டிருந்தது அவளுக்கு. பிள்ளை அரவிந்தை, போன முறை பெருமையுடன் அவளுக்கு அறிமுகப் படுத்தி இருந்தாள்.

“மாலதி, அரவிந்த் ரொம்ப நல்லாப் படிக்கிறான். அவன் ஜாதகத்தில் சூரியனும் புதனும் கூடியிருக்காங்களாம், பிரபல யோகமாம், ஜோசியர் சொல்லியிருக்கார். நானும் அவரும் இவனுடைய ஃப்யூச்சர் பத்தி, ப்ரத்யேக கவனம் எடுக்கிறோம்”, என்று சொல்லியிருந்தாள், கண்களில் கனவு மின்ன.

இப்போது ‍ அரவிந்த் எப்படி இருப்பான்? டாக்டர்? இஞ்சினியர்? அல்லது அரசியல்வாதி ஆகி இருப்பானோ! பிரபல யோகம் என்று சொன்னாளே.

கண்டிப்பாக பிரபாவை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் மாலதி.

ஆண்டு விழா நாள்.

பளபளவென்று பட்டுகள், புதிய டிசைன் நகைகள், கூடுதலாக மூக்குக் கண்ணாடி, ஏறி விட்ட எடை, என்று தோழிகள் மின்னினர்.

பிரபாவிடம் அதிக மாற்றமில்லை. “மாலதி” என்று அன்போடு அணைத்துக் கொண்டாள்.

வழக்கமான விசாரிப்புக்குப் பிறகு, “பிரபா, உன் பையன் அரவிந்த் இப்ப என்ன செய்கிறான்?”. ஆர்வம் கொப்பளித்தது மாலதியின் குரலில்.

“நல்லா இருக்கான், இப்ப அவன் எவ்வளவு பிரபலம் தெரியுமா? பெரிய, பொறுப்பான வேலையில் இருக்கான்”, என்றாள் பிரபா உற்சாகத்துடன்.

”ரொம்ப சந்தோஷம்” என்றாள் மாலதி. தன் பெண் சுபாவுக்குத் தகுந்த வரன்தான் என்ற தன் எண்ணத்துக்கு, தானே சபாஷ் போட்டுக் கொண்டாள்.

“பிரபா, உன் மொபைல் நம்பர் கொடு, நான் சாவகாசமா உன்கிட்டப் பேசறேன்”, என்று நம்பர் வாங்கிக் கொண்டாள்.

“ராத்திரி ஏழு மணிக்கு மேல ஃபோன் பண்ணு”, என்று விடை பெற்றுக் கொண்டாள் பிரபா.

இரவு ஃபோனில் பேசும்போது சுற்றி வளைக்காமல் நேரடியாகவேக் கேட்டு விட்டாள் மாலதி, “ என் பெண்ணை மருமகளாக்கிக் கொள்வாயா?” என்று.

பிரபாவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. “நானே நினைச்சேன், நீ கேட்டுட்ட” என்று பூரித்தாள்.

“அது சரி, உன் பையன் ஃபோட்டோ வேணுமே, எப்படி இருப்பான் இப்ப? பாக்கலாமா?” என்றாள் மாலதி ஆர்வத்துடன்.

“அப்படியே டி.வி.யப் போடு, இப்ப வருவான் பாரு” என்றாள் பிரபா.

என்னது??!! சின்னத்திரை நடிகனா, இதைத்தானா ஜோசியர் பிரபல யோகம் என்றார்?!

எண்ணமிட்டுக் கொண்டே டி.வி.யை ஆன் செய்தாள் மாலதி, ஃபோனில் பேசியவாறே.

“நியூஸ் அல்லவா ஓடுகிறது”, என்றாள் தோழியிடம் திகைப்புடன்.

“ஆமா, வானிலை நிலையத்தின் முக்கிய அதிகாரியா அங்க வேலை பார்க்கிறான் அரவிந்த். இப்ப எல்லாம் மற்ற எல்லா முக்கியஸ்தர்களை விட இவன்தான் டி.வி.யில் தினம் வர்றான். பின்னே, சூரியனும் புதனும் கூடியி
ருந்தா சும்மாவா!” என்று சிரித்தாள் பிரபா.

5
Average: 5 (2 votes)

Comments

கதை அருமை..அருமை...

///என்னது??!! சின்னத்திரை நடிகனா, இதைத்தானா ஜோசியர் பிரபல யோகம் என்றார்?!// பணம், விளம்பரம் மற்றும் பிடிச்சவிஷயத்தை வேலையா செய்யறது. இதுவும் யோகந்தான் இல்லையா? :)))

2 வது ஃபோட்டோவைப்பார்க்கும்போது, காஸ்ட்லியான‌ விளங்கு மாட்டியிருக்காங்களோன்னு தோனுது....:))

யோகம் நல்ல யோகம் ரொம்ப‌ அழகான‌ குட்டியான‌ கதை :) படிக்க‌ சுவாரசியமா இருந்தது ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கதை அருமை.
//விடுமுறை பனிக்கட்டியாகக் கரைந்தது// இந்த‌ உவமை ஜில்லுனு ரொம்ப‌ அழகு.
ம் எனக்கும் உடன் படித்த‌ மாணவ‌ தோழிகளைக் காண‌ ஆசை தான்.
அந்த‌ நகங்களும் விரலும் சோ க்யூட்
இனி பிரபாவும் மாலதியும் உறவுக்காரங்க‌. அந்த‌ யோகக்கார‌ அரவிந்த் எந்த‌ சானல்ல‌ வருகிறார்னு சொல்லவே இல்லியே :)

சும்மா... எல்லாரையும் போல கூப்பிட்டு பார்க்கலாம்னு தான்... கதை நல்லா இருக்கு சீதா. :) என் கதையை நானே படிச்ச மாதிரி... பெரிய ஆளா வருவேன்னு சொன்னாங்களாம் ஜோசியர்... :) ஆயிட்டேன் தானே?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல இன்ட்ரஸ்டிங்கா இருந்தது கடைசி வரை... சூப்பர்மா....

சமீபமாக உங்கள் வலைபதிவுகள் அதிகம் வருவதில்லையே.. Come back

நானும் அரவிந்த் என்னவா இருப்பான்னு சீக்கிரம் படிச்சேன். ஒரு வேளை அவனே பெரிய ஜோசியரோன்னு :P. சூப்பர்

Be simple be sample

// “அப்படியே டி.வி.யப் போடு, இப்ப வருவான்
பாரு” என்றாள் பிரபா. // செம ட்விஸ்ட். கதை சூப்பர் சீதாம்மா. :)

All is well

சிம்ப்ளி சுப்பர்ப் சீதா. ரசித்துப் படித்தேன். :-)

இரண்டு நாட்களாக டைட் ஷெட்யூல். அறுசுவை வந்து... சீதாவின் சூரியனும், புதனும், நிகிலாவோட ஆரஞ்சும் படித்து ரிலாக்ஸாகி தூங்கப் போறேன். :-) உங்களுக்கும் இன்றைய நாள் இனிமையானதாக அமையட்டும்.

‍- இமா க்றிஸ்

கதை ரொம்ப சுவாரஸ்யமா, நல்லாயிருக்குங்க :-)
ரொம்ப அருமைங்.

நட்புடன்
குணா

உடலும் உள்ளமும் ஒத்துழைக்க மறுக்கிறது... கொஞ்சம் விடுப்பு தேவை போலும். தேடி பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :) வருவேன் மீண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு அனு,

சின்னத்திரை வாய்ப்பு நிஜமாவே சந்தோஷமான‌, யோகமான‌ வேலைதான். இன்னிக்கு பெரிய‌ திரை வாய்ப்பு கிடைக்கிறதுக்கு சின்னத் திரை ரொம்பவே பயன்படுது.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கனிமொழி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நிகிலா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

வானிலை அதிகாரி ரமணனைப் பற்றி, 'பிரதமர், முதலமைச்சர் இவங்கல்லாம் டி.வி.ல‌ வராங்களோ இல்லையோ, இவர் அவசியம் வந்தாகணும் தினமும்' அப்படின்னு பேசிட்டிருப்போம். அதை வச்சு, இந்தக் கதையை எழுதினேன்.

வானிலை அறிக்கை எல்லா நியூஸ் சானலிலும் வந்தாகணுமே. இப்ப‌ புயல் வேற‌ அடிச்சுதா, டைமிங் கரெக்டா இருந்தது.:)

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

அறுசுவையில் உங்களுக்கு இருக்கும் நற்பெயரும் நற்புகழும் என்னிக்கும் நிலைச்சு இருக்கும். இணையத்தில் எழுதுவது கல்வெட்டில் பதிந்தாற்போல‌. ஜோசியர் கரெக்டாத்தான் சொல்லியிருக்கார்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ப்ரியா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேவதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சஜன்யா

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இமா,

அரட்டையில் ஜெயந்திக்கு ஸ்ட்ரெஸ் ரிலாக்ஸ் பண்ணிக்க‌, பீரோவை அடுக்கச் சொன்னேனா, சரி, நாமும் பழைய‌ ஃபைல்கள் எல்லாம் க்ளீன் பண்ணலாம் என்று எடுத்தேன், எப்பவோ எழுதி வச்சிருந்த‌ இந்தக் கதை இருந்தது. டக்குன்னு போஸ்ட் பண்ணிட்டேன்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு குணாங்,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

சின்ன‌ கதை ரொம்ப‌ நல்லா இருந்தது.

\\பின்னே, சூரியனும் புதனும் கூடியிருந்தா சும்மாவா!”
என்று சிரித்தாள் பிரபா.\\ இதை படித்ததும் களவானி படத்துல‌ ஆடி போயி ஆவணி வந்தா நம்ம‌ பையன் டாப்பா வருவான் ற‌ சரண்யா காமெடி தான் நியாபகம் வந்தது.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

கதைநடையும், கதை கருவும் மிக அருமை..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.