அறுசுவையின் கைவினைப் பகுதி எப்பவும் எனக்குப் பிடித்த பகுதியாகும். இணையத்தில் நான் அதிகம் தேடுவதில் கைவினையும் ஒன்று.
இமாவின் ஆரஞ்சு பழக் கூடையைப் பார்த்ததும் உடனே செய்யலாம் என தோன்றியது. தேவையான பொருட்கள் எல்லோர் வீட்டிலும் இருப்பதே.
http://www.arusuvai.com/tamil/node/29569
வீட்டிலேயே பழம் இருந்தது, எடுத்தேன் கத்தியை. சும்மா வலதுபக்கம் ஒரு வெட்டு; இடதுபக்கம் ஒரு வெட்டு. கூடை ரெடி. ஆனால், கூடை நிறைய இருந்த சுளைகள் என்னைப் பார்த்து கண்சிமிட்டின.
ஸ்பூனை எடுத்து அப்படியே ஸ்வாஹா பண்ணினேன். குட்டீஸ்லாம் ஜூஸ் தான் வேணும்னு அடம் பண்ணுவாங்க. நான் நார்ச்சத்துடன் சாப்பிட்டேன்.
அறுசுவையில் போடணுமே. அப்படியே 'க்ளிக்'கினேன். கூடை காலியா இருக்கே. அதனை தண்ணீரால் நிரப்பினேன்.
உள்ளே வைக்க பூ வேண்டுமே. வீட்டைச் சுற்றி வந்தேன். எங்க வீட்டு மரங்கள் எல்லாம் குட்டியாக இருந்தன.
முன்பக்க கார்டனில் ஒரு காட்டுச் செடி வித்தியாசமாக படர்ந்து 'வா' என அழைத்தது.
வாடாமல்லிப் பூ பூத்துக் குலுங்கி நானும் ரெடி என்றது.
ஏதோ கிடைத்ததைக் கொண்டு எனக்குத் தெரிந்தமட்டும் அடுக்கினேன். பூக்கூடை ரெடி.
இமா டீச்சர், எனக்கு உங்களைப் போல விதவிதமா பூக்கள் கிடைக்கலை. இருந்ததைக் கொண்டு செய்திருக்கிறேன்.
எப்படி இருக்கு? நீங்க தான் சொல்லணும்.
சரி இதை எங்கே வைக்கலாம்? கூடையின் கைப்பிடியை லாவகமாக தூக்கிக் கொண்டு வீட்டினுள் உலா வந்தேன். உள் முற்றத்தில் உள்ள மாடம் பொருத்தமான இடமாகப் பட்டது.
துணைக்கு அங்கே ஏற்கனவே இருந்த ரெட்டை பாட்டில் செடிகளை அருகே வைத்தேன்.
மீண்டும் ஒரு க்ளிக்.
பாட்டில் செடிகளைப் பற்றி சொல்லவில்லையே. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்க. வயிற்றுப் பக்கம் ரெண்டா வெட்டுங்க. மேலே உள்ள பாகத்தை தலைகீழா வைத்து மண்ணை அள்ளிப் போட்டு அடிப்பாகம் மீது வைக்கணும் அம்புட்டுதான்.
இதிலே வெள்ளைச் சோளம் விதைத்திருக்கிறேன். இது ஒரு மாதம் வளர்ந்த செடியாக்கும்.
பாட்டிலில் விடும் அதிகப்படியான தண்ணீர் வெளியே வடிந்து சுவரைப் பாழாக்காமல் அடியில் உள்ள பாகத்தில் தங்கி விடும். இதுவே இதன் ஸ்பெஷாலிட்டி.
நேற்று வாங்கிய அன்னாசிப் பழத்தை அப்படியே கிரீடத்தை கழட்டி ஒரு டம்ளர்ல தண்ணீர் நிரப்பி அதில போட்டு வச்சிருக்கேன். இவங்க ரொம்ப நாள் அப்படியே சிரிச்சிகிட்டே இருப்பாங்க. முகம் வாடவே மாட்டாங்க.
எல்லாமே நல்லாருக்குன்னு என் பிள்ளைங்க சொல்லியாச்சு. நீங்க என்ன சொல்றீங்க? பிடிச்சிருக்கானு சொல்லிட்டுப் போங்க தோழீஸ்,:)
Comments
நிகிலா
மூன்றுமே கொள்ளை அழகு... வீட்டு மாடங்களும் அழகு.... வாட்டர் பாட்டில் சோளம் நல்ல ஐடியா
அழகு
எல்லாமே அழகு. அன்னாசி கொண்டையும் சூப்பர். என் கிச்சன் ஜன்னலில் வைக்க ஒரு புது ஐடியா. உங்கள் கிரியேட்டிவிட்டியை வர்ணிக்க வார்த்தையில்லை!! வாடா மல்லி கலர் காம்பினேஷன் அருமை. சோளம் நல்ல ஐடியா. முழு சோளத்தை அப்படியே விதைக்கப் போட்டிட்டீங்களா நிகிலா, சம்மர்ல நானும் டிரை பண்ணனும் அதுக்குத்தான் கேட்கிறேன். பாராட்டுக்கள :-))
நிகி
நிகிஎல்லாமே நல்லாருக்கு. சிம்பிளா கிரியேட்டிவா அழகுப்படுத்திடிங்க.
Be simple be sample
அழகோ அழகு
நிக்கி அத்தனையும் அழகோ அழகு ... :)
All is well
நிகி
நிகி சூப்பரா இருக்கு. நல்ல சிந்தனை. நானும் இப்போ புது வீட்டில் தோட்டம் போடலான்னு இருக்கேன். இதை ட்ரை பண்ணி பார்க்குறேன்.. சூப்பர் நிகி
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
நிகிலா
சூப்பர்! மிக்க நன்றி. எழுதிய விதம் அருமை. ரசிச்சு எழுதி இருக்கீங்க என்று நல்லாவே தெரியுது. :-)
// விதவிதமா பூக்கள்// இங்கயும் இப்போ லாவண்டர் தவிர வேறு எதுவும் இல்லை.
//கிடைத்ததைக் கொண்டு// ;))) இங்க விசிறி வைச்சு இருக்கீங்க. :-)
பாட்டில் தொட்டி... சூப்பர் ஐடியா. நானும் செய்யப் போறேன்.
அன்னாசி - அழகா இருக்கு. வேர் வர ஆரம்பிச்சதும் தொட்டில நடலாம்.
- இமா க்றிஸ்
Hi Nikila,
Superb...
நிகிலா
பார்ப்பவர் மனதை பரவசப்படுத்தும் விதமா அட்டகாசமாக இருக்குங்க.
எல்லா புகழும் இறைவனுக்கே
நிகிலா
நல்லா இருக்கு பா :)
super.. semma creativity...
super.. semma creativity...
நிகிலாக்கா
ரஞ்சுப் பூக் கூடை சோ சோ சோ பிரிட்டி :) அந்த பிங்க் கல்ர் பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
பிரியா
//மூன்றுமே கொள்ளை அழகு... வீட்டு மாடங்களும் அழகு.... வாட்டர் பாட்டில் சோளம் நல்ல ஐடியா//
உங்களோட முதல் பதிவுக்கு மிக்க நன்றி பிரியா:)
வாணி
//எல்லாமே அழகு.// நன்றி.வாணி
//முழு சோளத்தை அப்படியே விதைக்கப் போட்டிட்டீங்களா// ஆம் வாணி வெள்ளை சோளம்.... புல்லு மாதிரி வரணும்னு நினைத்துப் போட்டேன்.
நீங்களும் போடுங்க. நிறைய பாட்டிலை அடுக்கினால் சூப்பரா இருக்கும்:)
ரேவா
சிம்பிளா நீங்களும் முயற்சி பண்ணுங்க ரேவா
மிக்க நன்றி.:)
சஜன்
//அழகோ அழகு//
நன்றியோ நன்றி சஜன்:)
ரேவ்
//நானும் இப்போ புது வீட்டில் தோட்டம் போடலான்னு இருக்கேன். இதை ட்ரை பண்ணி பார்க்குறேன்..//
நீங்களும் புது வீடா? நானும் தான். இங்கே கார்டன் வேலை நடந்துட்டு இருக்கு:)
அசத்துங்க ரேவ்.
இமா
//ரசிச்சு எழுதி இருக்கீங்க// ஆமா, கொஞ்சம் வித்தியாசமா எழுதினாப்ல தான் இருக்கு.
//கூடையின் கைப்பிடியை லாவகமாக தூக்கிக் கொண்டு வீட்டினுள் உலா வந்தேன். உள் முற்றத்தில் உள்ள மாடம் பொருத்தமான இடமாகப் பட்டது//
இதை எழுதும் போது உங்க ஸ்டைல் மாதிரி தோணுச்சு இமா:).
//இங்க விசிறி வைச்சு இருக்கீங்க.// ம்ஹூம் எனக்குப் புரியவேயில்லை.
பாட்டில் தொட்டி தண்ணிர் வடியாது.வரிசையா அடுக்கலாம்.
அன்னாசி, //வேர் வர ஆரம்பிச்சதும்// தரையில் நட நினைச்சிருக்கேன்
மிக்க நன்றி இமா:)
சங்கீதா
ரொம்ப நன்றி சங்கீ:)
ரேமு
//அட்டகாசமாக இருக்குங்க.//
ரொம்பவும் நன்றிங்க:)
வித்யா
ரொம்ப நன்றி பா:)
சித்ரா
மிக்க நன்றி தோழி:)
கல்யாணப் பெண்ணே கனி
//ஆரஞ்சுப் பூக் கூடை சோ சோ சோ பிரிட்டி :) அந்த பிங்க் கல்ர் பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் :)//
பிடிக்கும்னா அது கனிக்கு தான். எடுத்துக்க கனி.
உனக்கு ஒரு மெசேஜ் போட்டேன் பார்த்தாயா கனி.:)
மிக்க நன்றி கனி
நிகி
மூன்றுமே சூப்பரா இருக்கு...
சோளச்செடி ஐடியா கண்டிப்பாக டிரை பன்னனும்...
இந்த அன்னாசிப்பூ ஐடியாவை இதற்குமுன் எங்கோ பார்த்திருக்கிறேன், அதில் வேர்கூட வந்திருந்தது...நல்ல ஐடியா நாமும் டிரைப்பன்னனும்னு நினச்சிட்டிருந்தேன்...உங்க வீட்டு மாடங்களும் அழகு....நல்ல பொருத்தமான இடத்தில், அழகான ஐடியாஸ்....சூப்பர்ப் நிகி...
நிகிலா அக்கா
வேணாம் வலிக்குது.... அழுதுடுவேன்.. அம்மே
அக்கா இப்படி எல்லாரும் ஒரேடியா ரவுண்ட் கட்டி கல்யாணப் பொண்ணு நு கூப்பிட்டா நான் என்ன செய்ய... ஆனா ஒன்னு கூப்பிட்டா எல்லாரும் கல்யாணத்துக்கு வரலனா தான் இருக்கு...
எனக்கு தெரியும் என் சமத்து நிகி அக்கா கண்டிப்பா வருவீங்கன்னு ...)
இல்லயே அக்கா எந்த மெசேஜ் முகநூல் ல யா எதும் வரலயே ... :)
அப்படியே நா கேட்ட மொபைல் பவுச் ஒன்னு அனுப்பிடுஙக் என் பவுச் அ யாரோ ஆட்டய போஒட்டுடாங்க ட்ரைன் ல நல்ல வேலை பவுச் தான் போச்சு போன் போகலை ..:)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
super ha eruku madam
super ha eruku madam
நிகிலா அக்காங்
மூன்றும் ஒவ்வொரு அழகுடன் ரொம்ப நல்லாயிருக்குங்க.
அருமைங்& வாழ்த்துக்கள்ங்க :-)
நட்புடன்
குணா
அனு
//சோளச்செடி ஐடியா கண்டிப்பாக டிரை பன்னனும்...//
சோளம் மட்டுமல்ல.கோதுமை, ராகி கூட போடலாம்.ஏதோ ஒரு தானியம், புல்லு மாதிரி வரணும். அவ்வளவே.:)
//அழகான ஐடியாஸ்// நன்றி அனு
நிகிலா
அழகா இருக்கு எல்லாமே. பைனாப்பிள் நானும் இது போல செய்து கொஞ்ச நாள் கிசன் ஜன்னலில் வைத்திருந்தேன். 15 நாட்களில் தேவையான அளவு வேர் வந்ததும் எடுத்து தொட்டியில் நட்டு வெச்சிருக்கேன். நல்லாவே வளர்ந்து வருது. சோளமும் என் தோட்டத்தில் போட்டிருக்கேன். மழைக்கு தான் அடிக்கடி சாய்ந்து போறாங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கனி
//அக்கா இப்படி எல்லாரும் ஒரேடியா ரவுண்ட் கட்டி கல்யாணப் பொண்ணு நு கூப்பிட்டா நான் என்ன செய்ய... // கல்யாணப் பொண்ணை அப்படி கூப்பிடாம வேறு எப்படி கூப்பிடுவதாம்?
மெசேஜ் இருக்கு பார் கனி.
பவுச் கட்டாயம் அனுப்பறேன், அட்ரஸ் தரணும் அம்புட்டு தான் கனி.:)
நல்ல வேளை போன் தப்பிச்சுதே. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல. இனி கவனம் கனி.
உமா
மிக்க நன்றி உமா:)