நீயே நீயே எல்லாம் நீயே… - கனிமொழி

சாதனா... இங்கவா… சாதனா… என்ன பண்ற?

என்னங்க… ஏன் இப்படி காலைலயே கத்திட்டு இருக்கீங்க?

ஹ்ம்ம்.. என்னோட கார் சாவி எங்க?

இதே வேலை உங்களுக்கு தினமும்.. என்ன கேட்டா நானா தினமும் கார்ல போறேன்…

சாவி எங்கன்னு மட்டும் தான் கேட்டேன். தெரியலன்னா தெரிலன்னு சொல்லு. தேவையில்லாம பேசாத…

நான் தேவையில்லாம பேசுறேனா???

ஆமாம் பின்ன இந்த வீட்ல வச்ச பொருள் வச்ச இடத்துல இருக்காது. இந்த சாவி வேற நேரம் காலம் தெரியாம சதி பண்ணுது.

சாவி வேறன்னா அப்போ நானும் சதி செய்யுறேன்னு சொல்லவர்றீங்களா??

இப்போ நான் அப்படி சொன்னேனா??

தினம் காலையிலும், மாலையிலும் இதே நிலைதான் ராஜேஷின் வீட்டில். தினம் ஏதோ ஒரு வகையில் இருவருக்கும் சண்டை வந்து கொண்டே தான் இருந்தது.

ராஜேஷ் ஆபிஸில் நுழைந்தவுடன்,

ஏன் ராஜேஷ் லேட்? தினம் தான் ஏதாவது காரணம் சொல்றீங்க. இன்னைக்கு மந்த் எண்ட் மீட்டிங்னு தெரியும்ல?

தெரியும் சார்...

தெரிஞ்சும் தான் லேட்டா வந்தீங்களா?

இல்லை சார்.. கார் சாவி காலைல காணல அதை தேடி எடுத்துட்டு வரதுக்குள்ள, வர வழில ப்ரேக் டவுன் வேற, ட்ராஃபிக் வேற அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு...

கொஞ்சம் லேட்டா? சார் மணி 10.30. உங்க ஆபிஸ் டைம் 9.30. நீங்க சொன்ன காரணத்தை மீட்டிங்கிற்கு வந்து இருக்குறவங்ககிட்ட சொன்னா என்ன ஆகுறது? கம்பெனி பத்தி என்ன நினைப்பாங்க. சேல்ஸ் டீம் பத்தி தான் இன்னைக்கு மீட்டிங்கே... சேல்ஸ் மேனேஜர் நீங்களே லேட்டா வந்தா என்ன அர்த்தம் ராஜேஷ்…

சார் மன்னிச்சுடுங்க.. இனி இதுமாதிரி நடக்காம பார்த்துக்கறேன்…

இனி நடக்காம இருக்குறது இரண்டாவது விஷயம். இப்போ நடந்ததுக்கு உள்ள போய் பதில் சொல்லுங்க. உங்களுக்காகத் தான் மீட்டிங்கை நிறுத்தி வச்சுருக்கோம்.

ஒரு வழியாக மீட்டிங் முடிந்து ராஜேஷ் அவன் கேபினுக்கு வர மணி மதியம் 1.

ராஜேஷ் சார்... ராஜேஷ் சார்…

ஹ்ம்ம்... சொல்லுங்க செந்தில்... (செந்தில் ராஜேஷின் ஆபிஸில் வேலை செய்யும் ஆபிஸ் உதவியாளர்).

என்ன சார் யோசனை? சார் ரொம்ப திட்டிட்டாரா?

அதெல்லாம் இல்லை... உங்களுக்கு வேலை இருந்தா போய் பாருங்க செந்தில்...

இல்ல சார்... அது வந்து…

செந்தில் போங்க.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிஞ்சா எனக்கு ஒரு கப் காஃபி கொடுங்க…

சரிங்க சார்…

ச்சே... என்ன வாழ்க்கைடா.. வீட்டுக்கு போனா அவ கூட பிரச்சனை, இங்க வந்தா சார் கூட பிரச்சனை. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டே இருந்தான் ராஜேஷ்.

சார் இந்தாங்க சார் காஃபி…

தாங்க்ஸ் செந்தில்… சாரி தப்பா எடுத்துக்காதீஙக ஏதோ சார் திட்டின கோபத்துல நானும் உங்க கிட்ட கடுமையா நடந்துக்கிட்டேன்…

சார் எதுக்கு சார் சாரியெல்லாம் விடுங்க சார். ஆமா சார், சார் கிட்ட ஏதோ கார் ப்ரேக் டவுன்னு சொல்லிகிட்டு இருந்தீங்களே என்ன விஷயம் சார்?

ஆமா செந்தில் வீட்டம்மா தான் கஷ்டபடுத்துராங்கன்னா இந்த காரும் காலைல என்ன நோகடிச்சுடுச்சு.

சார் உங்க பிரச்சனை மேடமா? இல்ல காரா?

ரெண்டும் தான் செந்தில்…

சார் ஏன் சார் இவ்வளவு அலுத்துக்கிறீங்க?

பின்ன என்ன செந்தில் நாமளே தினம் சார்கிட்ட திட்டு வாங்கிட்டு, டார்கெட் அது இதுன்னு பல பிரச்சனையை முடிச்சுட்டு வீட்டுக்கு போனா வீட்லயும் நிம்மதி இல்லன்னா ஒரு மனுஷன் என்ன தான் பண்ணுவான் சொல்லுங்க???

சார் நீங்க தப்பா நினைக்கலைன்னா சில விஷயங்கள் சொல்லவா? என்னடா நம்ம கீழ வேலை செய்யுறவன் நமக்கு என்ன சொல்ல போறான்னு தப்பா நினைக்காதீங்க.

சிச்சீ... அதெல்லாம் ஒண்ணும் நினைக்கலை. தாரளமா சொல்லுங்க. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்குறது இல்ல…

ராஜேஷ் சார் பொதுவாகவே நம்மள மாதிரி ஆம்பிளைங்க எல்லாம் வேலைக்கு போறோமென்ற பேர்ல தினம் கிளம்பி வெளில வந்து நாலு இடம் பாக்குறோம், நாலு பேருக்கூட பழகுறோம். ஆனால். வீட்டு வேலைகள் செய்துகிட்டு வீட்ட கவனிக்குறது தான் உண்மையிலேயே பெரிய வேலை.

அப்போ நம்ம கஷ்டப்படலைன்னு சொல்றீங்களா செந்தில்?

இல்ல சார்... நம்ம கஷ்டம் ஒரே இடத்துல தான். ஆனால், ஒவ்வொரு வீட்லயும் மனைவி செய்யுற வேலைகளையெல்லாம் தொடர்ந்து ஒரு 3 நாளைக்கு நாம செஞ்சு பார்த்தா தான் தெரியும் அவங்க அருமை. எதுக்கு சொல்லுறேன்னா சார் நாம மாசாமாசம் சம்பாதிக்குறோம். அதைக் கொண்டு போய் கொடுத்து ஃபேமிலிய ரன் பண்ணுன்னு ஈஸியா சொல்லிடுறோம்.

ஆனால், உண்மையில் அது தான் சார் ரொம்ப கஷ்டம். நாம் கொடுக்குற சம்பளத்த கரெக்ட்டா ப்ளான் பண்ணி வீட்டு வாடகை, கரண்ட் பில், மளிகை, பால்காரன், கேஸ் காரன், போன் பில், காய்கறி, அயனிங், ஸ்கூல் பீஸ், மருந்து மாத்திரை செலவுன்னு இப்படி ஒவ்வொன்னுத்தையும் பார்த்து பார்த்து செலவு பண்ணுறது ரொம்ப கஷ்டம் சார். அவங்க பண்ணுற இந்த வேலைல ஒண்ணுக் கூட நாம தொடர்ந்து கரெக்ட்டா பண்ண முடியாது சார்.

கல்யாணம் ஆன புதுசுல என் மனைவிக்கு இந்த ஊர் பத்தி ஒண்ணுமே தெரியாது. விலைவாசி தெரியாது. எந்த கடைக்கு போகணும்னு தெரியாது. ஆனால் நான் எல்லாம் சொல்லிக் கொடுத்த 2 மாசத்துல வீட்டுக்கு பட்ஜெட் போட ஆரம்பிச்சிட்டா... அதவிட முக்கியம் நாம அவங்ககிட்ட பேசுற விதம் நடந்துக்குறதெல்லாம் தான் சார்... நமக்கு ஒண்ணுனா துடிக்குற முதல் ஆசாமி அவங்க தான். அவங்க இல்லைனா நாம வாழ்க்கையே பெட்ரோல் இல்லாத பைக் போல சார். யூஸே இல்ல சார்.

எனக்கும் என் மனைவிக்கும் கூட சண்டை வரும். ஆனால். யாராவது ஒருத்தர் சண்டை வரும் நேரத்துல விட்டுக் கொடுத்து போனா போச்சு. பிறகு பொறுமையா சண்டை வந்ததுக்கான காரணத்தை பேசி தீர்த்துகிட்டு இனி அதுமாதிரி வராம இருக்கப் பார்த்துக்கணும் சார். நாம அவங்கக் கிட்ட சண்டை போட்டு, இல்ல கத்தி, இல்ல அதிகாரம் பண்ணி ஏதாவது சாதிக்கணும்னு நினைச்சா அது தப்பு சார்.

சண்டைப் போட்டு சாதிக்க முடியாததெல்லாம் அன்பா பேசுற ஒரு வார்த்தையால சாதிக்கலாம் சார். யோசிச்சுப் பாருங்க சார்... அவங்க இல்லன்னா வீடு வீடா இருக்குமா? அவங்க இல்லாம நாம சம்பாதிக்குறோம்னு குடும்பத்தைப் பார்த்துக்க முடியுமா? முடியவே முடியாது சார்…

உங்க சொந்த வாழ்க்கைய பத்தி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க ராஜேஷ் சார்... உங்களுக்கும் மேடத்துக்கும் என்ன பிரச்சனைன்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், நான் சொன்னதெல்லாம் மட்டும் யோசிச்சு பார்த்து நல்லதுன்னா எடுத்துக்கிட்டு, விட்டுக்கொடுத்து போங்க சார்...

அட யார் சார் அவங்க உங்க மனைவி. உங்க கிட்ட கோபப்படாம, இல்ல நீங்க அவங்க கிட்ட சண்டை போடாம வேற யார் கிட்ட போட முடியும் சொல்லுங்க? புரிதல் ஒண்ணு இருந்துச்சுன்னா போதும் சார்... அது தான் கடைசி வரை குடும்பத்தைத் தாங்கிப் பிடிக்கும். சரி சார் நான் வர்றேன். உங்க நேரத்தை வீணடிச்சுருந்தா மன்னிச்சுடுங்க சார்...

அதெல்லாம் ஒண்ணுமில்ல செந்தில்...

வரேன் சார்... என் மனைவி இன்னைக்கு எனக்கு பிடிச்ச வத்த குழம்பும், முட்டை பொரியலும் கொடுத்துருக்கா மதியத்துக்கு. நான் சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொன்னா தான் அவ நிம்மதியா இருப்பா. இல்லன்னா சாப்டிங்களா.. சாப்டிங்களான்னு போன் பண்ணிக் கேட்டுன்னே இருப்பா…

இவற்றையெல்லாம் கேட்ட ராஜேஷ் மனம் சற்று லேசானது போல் உணர்ந்தான். தன் மொபைலை எடுத்து சாதனா எண்ணை அழுத்தினான்.

ஹலோ... ஹ்ம்ம் சொல்லுங்க..

சாதனா…

ஹ்ம்ம் சொல்லுங்க…

சாப்பிட்டியா?

என்னையா கேக்குறீங்க…

ஆமாம்.. என் மனைவி சாதனா கிட்டயே தான்..

இல்லங்க... இன்னும் துணி துவைக்குற வேலை முடியல. வீடு துடைச்சிட்டு, பாத்திரம் கழுவிட்டு தான் சாப்பிடணும். நீங்க சாப்பிட்டீங்களா?

நான் சாப்பிடப் போறேன்... அந்த வேலையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதல்ல போய் சாப்பிட்டுட்டு வேலையை பாரு சரியா..

இல்லங்க அது வந்து...

நான் சொல்றேன்ல... (உடனே செந்தில் சொன்ன அதிகாரம் இல்லாத அன்பான வார்த்தை என்ற பேச்சு நினைவை எட்டியது) அதான் நான் சொல்றேன்ல.. போய் சாப்பிட்டு அந்த வேலையெல்லாம் பாரு சரியா? ஈவ்னிங் சீக்கிரமா வந்துடுவேன்... வந்து வெளில கூப்பிட்டுப் போறேன்.

அவன் அழைப்பை துண்டித்து விட்டு நிமம்தியாக சாப்பிடப் போனான். அவன் அழைப்பை துண்டித்த அடுத்த நிமிடம்...

சாதனா குடுகுடுவென்று பூஜை அறைக்கு ஒடிச்சென்று எல்லா தெய்வத்துக்கும் நன்றி சொல்லி வேண்டிக் கொண்டாள். சாமி என்னவர் எப்போவுமே என் கிட்ட இப்படியே அன்பா இருக்கணும். நானும் அவர் கிட்ட அன்பா நடந்துக்கணும். நீதான் அருள் புரியனும்னு.

வேக வேகமாக வேலைகளை முடித்து விட்டு ராஜேஷுக்கு பிடித்த பால் பணியாரம் செய்து வைத்தாள். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தான் ராஜேஷ்.

சாதனா.. சாதனா..

இதோ வந்துட்டேங்க.. ஹ்ம்ம் சொல்லுங்க ..

உன்ன ரெடியா இருக்க சொன்னேனே...

இருங்க வர்றேன் என்று கிச்சனுக்கு ஓடிச் சென்று செய்து வைத்திருந்த பால் பணியாரத்தை எடுத்து வந்து கொடுத்தாள்.

ஏய்.. பால் பணியாரமா! எவ்வளவு நாள் ஆச்சு சாப்பிட்டு... என்ன திடீர்னு...

அதெல்லாம் ஒண்ணுமில்ல... உங்களுக்கு பிடிக்குமேன்னு தான் செய்தேன்.

அப்போ இனி தினம் வீட்ல ஏதாவது ஸ்பெஷல் இருக்கும் போலயே...

கண்டிப்பா உங்களுக்கு சமைச்சு கொடுக்குறதவிட எனக்கென்ன வேலை இருக்கு சொல்லுங்க...

இந்த வார்த்தையை கேட்ட ராஜேஷ் சாதனாவின் கைகளைப் பற்றி நான் பேசுனதுக்கெல்லாம் சாரிம்மா... என் வாழ்க்கைல உன்னோட முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்காம இருந்துட்டேன் என்று கண் கலங்கினான்.

அவன் கண்ணீர் துளி வழிவதற்குள் அதை தன் முந்தானையால் துடைத்தால் சாதனா.

என்னங்க இது சின்ன குழந்தை மாதிரின்னு சொல்லிக்கொண்டே அவளும் கண் கலங்கினாள்.

நானும் உங்கள புரிஞ்சுக்காம இருந்துட்டேன். சாரிங்க... எனக்கு உங்களவிட்டா உறவுன்னு சொல்லிக்க யார் இருக்கா சொல்லுங்க என்று அவன் தோள் மேல் சாய்ந்து அழுதாள்.

சரி அழாத... நான் இருக்கேன் என்று அவளைச் சமாதானப்படுத்தினான்.

சரி... நான் பணியாரம் சாப்பிட்டு ஃப்ரெஷ் ஆகுறேன்... அதுக்குள்ள நீ ரெடியாகிட்டு வா.. நாம பீச்சுக்கு போகலாம்.

சரிங்க என்று குழந்தை துள்ளி ஓடுவது போல் ஓடினாள் சாதனா.

பீச்சில்,

ராஜேஷ் சார்.. ராஜேஷ் சார்… ஹலோ செந்தில் நீங்க எங்க இங்க?

அதுவா சார்… என் மனைவிக்கு இன்னைக்கு பிறந்த நாள். அதான் சும்மா வெளில கூப்பிட்டு போகனும்னு சொன்னா.. பீச்சுக்கு கூப்பிட்டு வந்தேன்…

ஓ... அப்படியா?

ஆமா சார்.. இவங்க?

இவங்க என் மனைவி சாதனா.

வணக்கம் மேடம்...

வணக்கம்ங்க...

ஏ... லட்சுமி..

தோ வர்றேங்க..

அவளுக்கு பீச்ல கிடைக்குற மசாலா பொரி ரொம்ப இஷ்டம் அதான் வாங்கிக் கொடுத்துட்டு இருந்தேன். உங்களைப் பார்த்ததும் ஓடி வந்தேன் …

என்னங்க கூப்டிங்களா?

ஆமாம். இவர் என் மேனேஜர். அவங்க சார் மனைவி...

வணக்கம் சார்..

வணக்கம்ங்க. நல்லா இருக்கீங்களா மேடம்?

ரொம்ப நல்லா இருக்கேங்க.

சரி செந்தில் நாங்க வர்றோம்…

சரிங்க சார்.. உங்கள மேடம் கூட பார்த்ததுல ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்.

தாங்க்ஸ் செந்தில்... வரேன் மேடம்...

சரிங்க…என்று சொல்லி விடைபெற்றனர் செந்தில் லட்சுமி தம்பதியினர்.

ஏங்க அவங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்களா இருக்காங்க இல்லங்க.

ஆமா சாதனா... ரொம்ப நல்லவங்க தான்… (ராஜேஷ் மனதுக்குள் ஆம் நல்லவன் மட்டும் அல்ல என் வாழ்க்கையில் உன் வசந்தம் வீசக் காரணமாயிருந்தவன் என்று அவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்).

சரி வா நாம போகலாம் என்று கிளம்பினான்.

அடுத்த நாள் காலையில்,

என்னங்க... இட்லி வைக்கவா, இல்ல தோசை ஊத்தவா? தேங்காய் சட்னியா, இல்ல கார சட்னியா?

உனக்கு பிடிச்சத சமை சாதனா... நான் சாப்பிடுறேன்.

ஆபிஸ் போகக் கிளம்பி அவன் ரெடி ஆகி ஹாலுக்கு வருவதற்குள் டைனிங் டேபிள் மீது தோசை ரெடியாக இருந்தது. மதிய உணவுப்பை ரெடியாக இருந்தது. அவன் ஷீ பாலிஷ் போட்டு வைக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் பார்த்து மனதுக்குள் இவளைக் கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி சொன்னான் ராஜேஷ்.

அட ராஜேஷ் சாரா.. என்ன இவ்வளவு சீக்கிரம் மணி 9 தான் ஆகுது. ஆபிஸ் டைம் 9.30 தான் சார்.

அதெல்லாம் இல்ல செந்தில்... இன்னைக்கு மீட்டிங் இருக்குல்ல அதான்...

சரிங்க சார்...

சார்... குட் மார்னிங்... மீட்டிங் ஆரம்பிச்சுடலாமா?

அட ராஜேஷ்... வந்துட்டீங்களா?

ஆமாம் சார்... இனி எப்போதுமே இப்படித் தான் சார்..

சரி நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க. நான் ஒரு போன் கால் பண்ணிட்டு வந்துடுறேன்.

ஒகே சார்...

இப்படியே மாதங்கள் பல கழிந்தன...

குட் மார்னிங் ஸ்டாஃப்ஸ்… உங்களுக்கு எல்லாம் ஒரு நல்ல செய்தி! நம்ம கம்பெனியோட இந்த வருஷம் சேல்ஸ் டார்கெட் ராஜேஷ் சக்ஸஸ் ஃபுல்லா கம்ப்ளீட் பண்ணி முடுச்சிட்டாரு. அதனால உங்க எல்லாருக்கும் இந்த தீபாவளிக்கு போனஸ் நிச்சயம் உண்டு! ராஜேஷ் கம் டூ மை ரூம்.

சார் கூப்பிட்டிங்களே…

ஆமாம் ராஜேஷ்... உட்காருங்க...

தாங்க்ஸ் சார்... உங்களோட கடந்த 8 மாச உழைப்பு, நேரம் தவறாமை, விடுப்பு இல்லாம நீங்க கஷ்ட்டபட்டதுக்கான பலன் என்ன தெரியுமா?

சார்???

யெஸ்... ராஜேஷ் நீங்க வர மாசத்துலேர்ந்து இந்த கம்பெனியோட ஜி.எம் ஆகப் போறீங்க!

சார்!!!

யெஸ் ராஜேஷ் லெட்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க டேபிளுக்கு வரும் கங்க்ராட்ஸ்…

தாங்க்யூ சார் .. தாங்க்ஸ் எ லாட்...

சாதனா…

என்னங்க இது சின்ன பிள்ளை மாதிரி கண்ணலாம் மூடிக்கிட்டு...

இதுல என்ன இருக்குன்னு சொல்லுப் பார்ப்போம்.

என்னங்க இருக்கு…

கெஸ் பண்ணு…

தெரியலைங்க... சொல்லுங்க ப்ளீஸ்…

சொல்றேன்.. சொல்றேன்… அவசரப்படாத…

நீ ரொம்ப நாளா ஒரு இடத்துக்கு போகணும்னு ஆசைப்பட்டுக்கிட்டு இருந்தியே ..

எங்கங்க… ஆஸ்திரேலியா, மெல்பர்னா!!!

ஹ்ம்ம்... அங்க தான்... நம்ம 1 மந்த் டூர் போறதுக்கான பிளைட் டிக்கெட் அண்ட் ஹோட்டல் புக்கிங் பில்…

என்னங்க சொல்றீங்க???

ஆமா சாதனா வேணா பாரு என்று கொடுத்தான். அவளால் நமபவே முடியவில்லை.

என்னங்க... திடீர்னு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குங்க..

சாதனா அதவிட முக்கியமான விஷயம் இதுல இருக்கு. இது என்னன்னு சொல்லு?

என்னங்க இது விளையாடுறீங்க.. சீக்கிரமா சொல்லுங்க…

ராஜேஷ் இப்போ மேனேஜர் மட்டும் இல்ல.. ஜெனரல் மேனேஜர்..

என்னங்க சொல்றீங்க...இப்படி சந்தோஷம் மேல சந்தோஷம் கொடுத்து திக்குமுக்காட வைக்குறீங்க...

ஆமா சாதனா உண்மை தான் எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சுருக்கு.

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

இதுக்கெல்லாம் காரணம் நீதான் சாதனா...

நானா? நான் என்ன பண்ணிணேன்… எல்லாம் உங்களோட கடின உழைப்புங்க.

இல்ல சாதனா நான் உணர்ந்துட்டேன். எவன் ஒருவனுக்கு வீட்ல நிம்மதி இல்லையோ அவன் வெளில எவ்வளவு சம்பாதிச்சாலும், பேர், புகழ்வாங்கினாலும், அவனுக்கு நிம்மதி கிடைக்காது. அதே வீட்ல ஒருத்தனுக்கு நிம்மதியான வாழ்க்கை அமைஞ்சுட்டா அவனுக்கான பேர், புகழ், பணம் எல்லாம் தானா வரும். எனக்கு அந்த நிம்மதியை தினம் கொடுக்குறவ நீதான்....

சோ தாங்க்ஸ் பொண்டாட்டி...

நீயின்றி வாழ்வேது எனக்கு..
நீயின்றி உயிரேது எனக்கு …,
நீயின்றி மகிழ்வேது எனக்கு...
நீயே நீயே எல்லாம் நீயே...
நீயே நீயே என் இரண்டாம் தாயே!!!

Comments

ரொம்ப‌ நல்ல‌ கதை. படிக்க‌ ஆசையாக‌ இருந்தது. வாழ்த்துக்கள். : )
அன்புடன்
தயூ

நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!

கதையை வெளியிட்ட‌ அட்மின் அண்ணாக்கும் டீம்க்கும் நன்றி .. எடிட்டிங் வேலை தூள் அதுக்கும் தாங்க்ஸ்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கதை ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க..
கவிதை ரொம்ப அருமைங்.
பெயர்களும், முடிவில்சொன்ன கருத்தும் ரொம்ப உண்மைங்க.
வாழ்த்துக்கள்'ங்க.

நட்புடன்
குணா

கதையை படித்து பின்னூட்டம் அளித்தமைக்கும் உங்கள் வாழ்த்துக்கும் அப்படியே உங்க‌ ஸ்மைலிக்கும் ரொம்ப‌ நன்றி... பதிலுக்கு நானும் சிரிக்கிறேன் ... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நலமா... ?

உங்கள் கருத்துக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கதை அருமை.

நிஷா

கருத்துக்கும் பதிவுக்கும் மிக்க‌ நன்றி..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ரொம்ப நல்லா இருந்துதுங்க கதை... இன்னும் நிறைய கதைகள் படைக்க வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

௧னி கதை ரொம்ப நல்லாயிருக்கு. தொடர்ந்து நிறைய கதைகள் படைத்திட வாழ்த்துக்கள் .

உங்க‌ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வாழ்த்துக்கும் பதிவுக்கும் நன்றி :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

முன்னமே படிச்சிட்டேன் ப‌திவிட‌ முடில‌,
ரொம்ப‌ நல்லா இருக்கு கதை....

கண்டிப்பா எல்லா வீட்லேயும் நடக்கும் விசயம், இவங்க‌ மாறிட்டாங்க‌ எல்லாரும் மாறினா சந்தோசம் .....
இன்னும் பல‌ கதை படைக்க‌ வாழ்த்துக்கள்.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

காலை வணக்கம்..

உங்க‌ பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி..:)

நீங்க‌ எப்.பி.ல‌ எனக்கு ரெக்குவஸ்ட் குடுத்து இருந்தீங்களா..? சுபி தீபான்ற‌ பேர் ல‌..?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

//அட யார் சார் அவங்க உங்க மனைவி. // இதே தலைப்பில் நேற்றுப் படசாலையிலும் உரையாடல் நடந்தது. மணவிலக்கு அதிகமாகி இருப்பது பற்றிப் பெசிக் கொண்டிருந்தார்கள். வேலையிடத்தில் பிரச்சினையானால் பொறுத்துப் போவோம். தேவை அது. நண்பர்கள் வட்டத்திலும் பொறுத்துப் போவோம். நட்பு இது. ஆனால் வாழ்க்கைத் துணையிடம் மட்டும் இருபாலாரும் விட்டுக் கொடுக்கவே மாட்டோம். கர்புர் தான் எப்போதும். ;))

கதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் கனி.

‍- இமா க்றிஸ்

உங்க‌ பதிவுக்கும் வாழ்த்துக்கும் மின்ன‌ நன்றி..
சமீபத்தில் மாமாவோட‌ ப்ர்ண்ட்ஸ் சைட் லயும் இதே ப்ராப்ளம் வந்து பிரியுற‌ ஸ்டேஜ் ல‌ வந்து நிக்குறாங்கன்னு மாமா பேசிக்கிட்டு இருக்கும் போது சொன்ன‌ ஒரு விஷயம் தான்ம்மா இந்த‌ கதை எழுத‌ தூண்டிச்சு..

//எவன் ஒருவனுக்கு வீட்ல நிம்மதி இல்லையோ அவன் வெளில எவ்வளவு சம்பாதிச்சாலும், பேர், புகழ்வாங்கினாலும், அவனுக்கு நிம்மதி கிடைக்காது. அதே வீட்ல ஒருத்தனுக்கு நிம்மதியான வாழ்க்கை அமைஞ்சுட்டா அவனுக்கான பேர், புகழ், பணம் எல்லாம் தானா வரும்//

தொடர்ந்து எழுதுறேன் ... நீங்க‌ சமர்த்தா தொடர்ந்து படிக்கணும் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

The story is so nice.I love it...Every gent need to know this story

உங்கள் பதிவுக்கும் வருகைக்கும் மிக்க‌ நன்றி :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு கனிமொழி,

ரொம்ப‌ அருமையா எழுதியிருக்கீங்க‌. இயல்பான‌ உரையாடல்களில் கதை முழுதும் சொல்லியிருப்பது, ரொம்பப் பிரமாதம்.

தொடர்ந்து எழுதுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

கதை ரொம்ப ரொம்ப அருமையாக சுவாரஸ்யமாக கருத்தாக இருந்ததுங்க...

க‌தை சூப்பர்.
//எவன் ஒருவனுக்கு வீட்ல நிம்மதி இல்லையோ அவன் வெளில எவ்வளவு சம்பாதிச்சாலும், பேர், புகழ்வாங்கினாலும், அவனுக்கு நிம்மதி கிடைக்காது. அதே வீட்ல ஒருத்தனுக்கு நிம்மதியான வாழ்க்கை அமைஞ்சுட்டா அவனுக்கான பேர், புகழ், பணம் எல்லாம் தானா வரும். எனக்கு அந்த நிம்மதியை தினம் கொடுக்குறவ நீதான்..//
உண்மை உண்மை
ரொம்ப‌ அருமையான‌ கதை. மையக்கருத்து ரொம்ப‌ நல்லாருக்கு.:)

உங்கள் வருகைக்கும் அன்பான‌ பதிவுக்கும் மிக்க‌ நன்றி..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்கள் பதிவுக்கு நன்றி .. :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

உங்கள் கருத்துக்கும் பதிவுக்கும் நன்றி...:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அடடே கனி கதையெல்லாம் எழுத ஆரம்ப்பிச்சாச்சா சூப்பர் கனி :) அழகான சந்தோசமான முடிவுடன் கூடிய கதை ரொம்ப நல்லாருக்கு.இன்னும் நிறைய கதைகள் எழுத என் வாழ்த்துக்கள் கனி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆமாம் அக்கா இப்போ தான் கொஞ்ச‌ நாளா எழுத‌ ஆரம்பிச்சு இருக்கேன்...

உங்களின் அன்பான‌ பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி அக்கா ... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்ல கருத்துள்ள கதை கனி :) வாழ்க!! வளர்க!! :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

உங்களின் அன்பான‌ அழகான‌ பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள்,கதை மிக‌ அருமை. ஒவ்வொரு தம்பதியருக்கும் இந்த‌ ஈகோ இல்லாத‌ புரிதல் இருந்தால் வாழ்வு ரம்யமாக‌ இருக்கும்.....மேலும் படைப்புகள் பல‌ படைக்க‌ வாழ்த்துக்கள்!

உங்களின் அன்பான பதிவுக்கும்.. படித்து வாழ்த்தியதற்க்கும் மிக்க நன்றி... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்லா இருக்கு :)