தோழிகளே தயவுசெய்து பதில் கூறுங்கள்..

2 1/2 வயது ஆகின்றது என் பையனுக்கு. அவனுக்கு 10 மாதமாக இருக்கும் பொழுது வயிறு வலியால் கொஞ்ச நேரம் மூச்சு விடாமல் அழுதான் முதுகை தட்டியதும் அழுகை சத்தம் வந்தது.
இன்றைக்கும் அப்படிதான் அழுதான். 3தடவை இந்த மாதிரி ஆயிடுச்சு.இன்னைக்கு நான் பயந்து கத்திட்டேன்.நான் அழுது ட்டே இருந்தேன்.
தூங்கவே கஷ்டபடுவான்.பயமுறுத்துன தூங்கிடுவான்னு பயமுறுத்தினோம் அதனால தான் அப்படி அழுதுட்டான்.இதனால் எதுவும் பாதிப்பா? பயமாக இருக்கிறது தெளிவு படுத்துங்கள் தோழிகளே தயவுசெய்து. ......

//முதுகை தட்டியதும் அழுகை சத்தம் வந்தது.// எப்போ இப்படி ஆனாலும் முதலில் இப்படியே செய்யுங்கள். நீங்கள் பதட்டப்படாமலிருப்பது முக்கியம். சில குழந்தைகள் இப்படி இருப்பார்கள். அதிக காலம் இது தொடராது.

//இன்றைக்கு... 3தடவை// இது கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. அவருக்கு என்ன பிரச்சினை!! //பயமுறுத்துன தூங்கிடுவான்னு பயமுறுத்தினோம்// கர்ர்.. என்னங்க நீங்க! குழந்தையிடம் அன்பாக இருக்க வேண்டாமா! அது ஏற்கனவே களைச்சுப் போயிருக்கும், இன்னும் சிரமப்படுத்தலாமா? இதுனாலயே திரும்ப வர சான்ஸ் இருக்கு. பக்கத்துல இருந்து அன்பாகப் பேசி தூங்க வைக்கலாம். தூங்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. அவருக்குப் பிடித்த விளையாட்டு போதும். முன்னால் சிந்தனை எங்கே இருந்ததோ அங்கிருந்து வேறு சிந்தனைக்கு மாற்றி விட்டால் போதும்.

எந்தக் காரணத்திற்காகவும் குழந்தையைப் பயமுறுத்தக் கூடாது. எங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்வது.... சுயநலம்; தவறு இது. சந்தோஷமான குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள். பயமுறுத்தலோடு வளரும் குழந்தைகளுக்கு மன அழுத்தம் காரணமான பிரச்சினைகள் வரக் கூடும். அவர்கள் வாழ்க்கை முழுவதும் இதைப் பாரமாக உள்ளே சுமந்து கொண்டு திரிய வேண்டி வரலாம். உங்க பக்கத்துல இருந்து இந்த ஐடியா கொடுத்தவங்க யாரு! சொல்லுங்க இமா திட்டினேன் என்று.

//நான் பயந்து கத்திட்டேன்.// பயம் வேண்டாம். தைரியமாக இருங்க. இதனால் எதுவும் ஆகாது. ஒருவேளை... அந்தச் சமயம் நீங்கள் மட்டும் தனியாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? நீங்கள் கத்த... அதைக் கேட்டு குழந்தை இன்னும் பயந்து போகும். நிலமை சிக்கலாகும்.

குழந்தைக்கு இப்படி ஆன சமயம் மயங்கி விழுந்த பெரியவர்களையும் பார்த்து இருக்கிறேன். குழந்தையைக் கவனித்த அதே சமயம் பெரியவரையும் அவசர அவசரமாகக் கவனிக்க, கூட ஆட்கள் இருந்ததால் சாத்தியமாயிற்று. அம்மா நீங்கள். எந்த நிலையிலும் தைரியமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அழுகை வேண்டாம் இனி. எது ஆனாலும் எதற்கு அந்தச் சமயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை யோசித்துப் பார்த்து நடந்தால் போதும். நிலமை சரியாகும்.

இப்போது முக்கியம் எதனால் குழந்தைக்கு இப்படி ஆகிறது என்பதை அறிந்து கொள்வது. அந்த விடயத்தைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் பல்லி கரப்பைப் பார்த்துப் பயந்தாரா! அல்லது அவரை விளையாட்டாகப் பயமுறுத்தும் விருந்தினர் யாராவது வந்தார்களா? குழந்தைகள் சுவாரசியமாக முழுமனதாக ஒரு வேலையில் ஈடுபட்டு இருக்கும் போது சட்டென்று தடைப்பட்டால் கூட இப்படி நடக்கலாம். உங்களால்தான் இப்படி ஆனது என்றா... நிச்சயம் இனி ஆகாமல் பார்த்துக் கொள்வீர்கள். :-)

என் இரண்டு குழந்தைகளும் இப்படி விறைத்த ஆட்கள். :-) விருந்தினரால்தான் சிக்கல் வந்திருக்கிறது எனக்கு. விளையாடுவதாக நினைத்து வாயிலிருந்து விரலைத் தட்டி விடுவார்கள். இவர் சட்டென்று விறைப்பார். 'நானே பார்த்துக் கொள்வேன்,' என்றாலும் நிம்மதியாக விட மாட்டார்கள் சிலர். :-) ஒருவருக்கு முதலுதவி செய்யும் சமயம் பக்கதில் இருப்பவர்கள் உதவியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; சிரமம் கொடுக்காமலாவது இருக்கலாம்.

//இதனால் எதுவும் பாதிப்பா?// இல்லை. இனி இப்படிப் பயமுறுத்தாதீங்க. ஏன் தூங்கணும் அவர்! உங்களுக்கு ஃரீயாக இருக்க வேண்டுமா!! குழந்தைப் பருவம் மீண்டும் வராது. இப்போதுள்ள உங்கள் குழந்தை இன்னும் இரண்டு வருடம் கழித்து வேறு ஆளாக மாறி இருப்பார். நீங்கள் ஃப்ரீயாக இருந்தாலும் போன அவரது பருவம் மீண்டும் வராது. சின்னவர் ரசனை அம்மாவிடமிருந்து விலகி இருக்கும்.

இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக்கிக் கொடுங்கள்; நீங்களும் அனுபவியுங்கள்.

‍- இமா க்றிஸ்

இதுவரைக்கும் 3தடவை நடந்திருக்கு.ராத்திரியில் 12மணி ஆகுது அவன் தூங்க. பகல் நேரங்களில் 4மணிக்கு தான் தூங்குவான்.வெளிய வீட்டுடுவோம்னு சொன்னோம் தூங்கலன்னா.அதுக்கு தான் அப்டி அழுதுட்டான். பக்கத்திலையும் தெரிந்தவர்களும்தாம்மா சொன்னாங்க.
அவன் நேரத்துக்கு தூங்குனாதான் உடம்பு நல்லாயிருக்கும்ன்னு சொன்னாங்க அந்த ஒரு காரணத்துக்கு தான்ம்மா அவனை பயமுறுத்தி தூங்க வைச்சேன்.
மற்ற நேரங்களில் அழும்போது அப்படி கிடையாது. பத்து மாதத்தில், 2வயதில், நேற்று 3 தடவை வந்திருக்கு.
நேற்று மதியம் கூட தப்பு பண்ணாண்னு ஒரு அடி அடிச்சேன் அப்பலாம் அப்படி இல்லை ம்மா.நைட் கணவர் தான் அப்டி சொன்னார் அதில்தான் அப்படி அழுதுட்டான் அவரே தட்டி சரி பண்ணார்.
இனிமேல் இப்படி பயமுறுத்த மாட்டேன் ம்மா.அவன்தான் எனக்கு எல்லாமே. .......
அம்மா ஊங்கள் பதிலுக்கு மிக்க நன்றிம்மா......பதிலி கூறுங்கள். .......

/என் இரண்டு குழந்தைகளும் விறைத்த ஆட்கள்/ புரியலம்மா......உங்கள் பசங்க ளுக்கும் இப்படி நடந்துச்சுன்னு சொல்றிங்கல. புரியலம்மா. ....

அன்பு தோழி. தேவி

ஆ...ன்னு அழுததோட அடுத்து சத்தம் வரவே லேட்டாகுது.....சத்தம் வரமா இருக்கவும் நாங்க தட்டி னோம்.அப்புறம் அழுவான் சாதாரணமா. இதுதான் விறைப்பதா?

அன்பு தோழி. தேவி

சத்தம் இல்லாமல் தொடர்ந்து விடாமல் அழுதால் சில நிமிடங்களில் உணர்வு போய் கை ,கால் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிக்கும் ,அது உங்களுக்கு தெரியுமா , பிள்ளையை எந்த காரணத்தை கொண்டும் அரட்ட கூடாது , அது மிக பெரிய்ய தவறாகி விடும் . பிள்ளை தூங்கவில்லை என்பது ஒரு பிரச்சனை இல்லை , அவன் இரவு 1 மணிக்கு தூங்கினாலும் காலை நேரம் கழித்துதானே எழுவான் . நீங்கள் இரவு 7.30 மணிக்கு சாப்பாடு வயிறு நிறைய்ய ஊட்டவேண்டும் .அதற் க்கு முன்னால் ஒருமணி நேரமாவாது ஓட விட வேண்டும் ,அதில் களைத்து விடுவான் , அதன்பின் சாபிட்டால் களைப்பில் தூக்கம் வரும் ,அப்படி வரவில்லை என்றால் மறுபடியும் ஓடி விளையாட விட வேண்டும் ,கண்டிப்பாக டீவி பார்க்க அனுமதிக்க கூடாது , களைப்பில் தூங்கிவிடுவான் ,தூங்கவேண்டும் என்பதற்காக குழந்தையை மிரட்ட கூடாது ,இது எனது எச்சரிக்கை

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அந்த மாதிரி சத்தம் இல்லாமல் அழ ஆரம்பித்தால் டக்கென்று முதுகை தட்டிக்கொண்டே அவனின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் , " "உடனே யாராவது வீட்டிற்க்கு வருவது போல , வாங்க வாங்க ,தம்பி வா கதவ தொறக்கலாம் , டிவியில் அவனுக்கு பிடித்த சேனல் போடுவது " இது மாதிரி ஏதாவது பண்ணினால் அவன் கவனம் களைந்து மாறிவிடுவான் ,எந்தகாரனத்தை கொண்டும் நீங்கள் கவலையோ ,பதட்டமோ படாமல் கையாளவேண்டும் ,அது மிகவும் முக்கியம் .முடிந்தவரை சந்தோசமாக குட்டியை வைத்திருங்கள் நல்ல வழியில்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அட கடவுளே !!! குழந்தைய பயமுறுத்தறாதா... தயவு செய்து அந்த மாதிரி பன்னாதீங்க... மாலை நேரத்தில் நல்ல ஓடியாடி விளையாட விடுங்க... இரவு நல்லா ஆகாரம் குடுத்து, தூங்குவதற்க்கு முன் ஒரு க்ளாஸ் பால் குடிக்க வச்சு தூங்க வைங்க... உடல் அலுப்போட வயிறு நிறைந்தால் தூக்கம் தானா வரும்... அப்படியும் தூங்கலைனால் பக்கதில் படுத்து பாட்டு பாடுங்க, கதைகள் சொல்லுங்க...

குழந்தை இந்த மாதிரி அழும்போது அவனை நெஞ்சோடு அனைத்து முதுகை தட்டி குடுத்து அம்மா இருக்கேன் பயப்படாதேனு சொல்லி சமாதானப் படுங்க... குழந்தை எடுக்காக அழறான்னு கேட்டு சமாதாப்படுத்துங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

அஸ்வதா அக்கா, அவனை அடிச்சதே கிடையாது சில பேர் சொன்னதை கேட்டு இந்த தவறு பண்ணிவிட்டேன்.இனிமேல் இப்படி பண்ணவே மாட்டேன்.
ஒல்லியாக இருப்பான் தூங்குனாதான் உடம்புக்கு நல்லாயிருக்கும்ன்னு சொன்னாங்க.
அதனால தான் அப்படி செய்தேன் கடந்த ஆறுமாதமாக.....
அவனை எப்பவுமே சந்தோஷமாக வைச்சிருப்பேன்.என்னைய விட்டு அவுங்க அப்பாட்ட கூட தூங்க மாட்டான், இப்ப டெலிவரி நெருங்கி ட்டே வரதால் அவுங்க அப்பா ட்டா படுக்க வைக்கிறேன் இப்பவும் என்னிடம் தான் தூங்குறான்.......
இனிமேல் இந்த தவறை பண்ணமாட்டேன்.....முன்னாடிலாம் அவன் தூங்குறவரைக்கும் முழித்து இருப்பேன். ..மாடியில் இருப்பதால் வெளியில் விளையாட முடியாது க்கா.கதவு திறந்ததும் மாடிப்படி. .வீட்டில் தான் விளையாடுவான்...

அன்பு தோழி. தேவி

அஸ்வதா, பிரேமா அக்கா மிக்க நன்றி பதில் அளித்தமைக்கு......ரொம்ப ரொம்ப நன்றி

அன்பு தோழி. தேவி

அக்கா பாட்டு பாடிதான் தூங்க வைப்பேன்.நேற்று உடம்புக்கு நல்லாவே இல்லை அதான் அப்படி பண்ணிட்டோம்.என் கணவர்க்கு காலை 6.30 கெல்லாம் கம்பெனிக்கு போயிடுவாங்க.
அவன் சாதாரணமா அழுதாக்கூட நான் அப்படி தான் சொல்லி சமாதானம் செய்வேன்.நானும் லேட்டா தூங்குவதால் எழுந்திருக்க முடியவில்லை. .மாமியார் வீட்டுக்கு போனால் இன்னும் ரொம்ப கஷ்டம். .....க்கா.

அன்பு தோழி. தேவி

மூணு வயசுக் குழந்தையை அடிக்கிறீங்களே.
யோசிச்சுப் பாருங்க‌ அவனுக்கு பதினைந்து வயசு ஆனா உங்களால‌ அவனை அடிக்க‌ முடியமா?
என்னிக்கும் அன்பாலே கட்டிப் போடுங்க‌. கட்டுப்படுவாங்க‌.
எடுத்துச் சொன்னா கேப்பாங்க‌. கவனத்தை திசை திருப்பலாம். குட்டிப் பையன் தானெ.
நீங்களே பயமுறுத்தினால் அவன் பாதுகாப்பு தேடி யாருகிட்ட‌ போவான். யோசிங்க‌ தேவி

மேலும் சில பதிவுகள்