ஈரப்பலாக்காய் கறி

தேதி: October 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

ஈரப்பலாக்காய் (சிறியது) - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பற்கள்
கறிவேப்பிலை - சிறிதளவு
பான்டன் இலை (ரம்பை) - ஒரு துண்டு
மிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
திக்கான தேங்காய்ப் பால் - ஒரு கப்
கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரைத் தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

ஈரப்பலாக்காயை அளவான துண்டுகளாக நறுக்கி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், நறுக்கிய பூண்டு, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
காய் நன்கு குழைய வெந்ததும், தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பான்டன் இலை சேர்த்து வதக்கவும்.
வதக்கிய கலவையை குழம்பில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான ஈரப்பலாக்காய் கறி (Bread Fruit Curry) தயார். சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

காயை வேக வைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இரண்டாம் தேங்காய்ப் பாலிலும் வேக வைக்கலாம். அவ்வாறு வேக வைத்தால், திக்கான தேங்காய்ப் பால் சேர்க்கும் போது கால் கப் குறைவாகவே சேர்க்கவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ரெசிபி வித்தியாசமா ரொம்ப‌ நல்லா இருக்கு... ஈரப்பலாக்காய் நா இங்க‌ கிடைக்குற‌ பலாக்காயா இல்ல‌ இந்த‌ ரெசிபிக்கு நு ஸ்பெஷலா இருக்குறதா சூப்பர் டிஷ் ..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கலர்ஃபுல் டிஷ். அடுத்த முறை இந்த காயில் ஏதாவது சமைத்தால் ஈரப்பலாக்காயையும் பட்ம் பிடித்து போடுங்க உமா.

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கு நன்றி கனி. இது சாதாரண பலாக்காய் இல்ல. பான்புகியோன்னா உங்களுக்கு தெரியுமா? வனி இதுல பல குறிப்புகள் குறிப்புகள் குடுத்துருக்காங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பான பதிவுக்கு நன்றி வாணி. வனியோட பான்புகியோ ரிஹா (http://www.arusuvai.com/tamil/node/21811) குறிப்பில் படம் இருக்கு பாருங்க. முடிஞ்சா அடுத்த தடவை நானும் படம் பிடிச்சு போடுறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பார்க்கும் போது சாப்பிட தோனுது எங்க வீட்ல ஈர பலாக்காய பொரித்து சமைப்பார்கள்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

உமா இது போன்ற குறிப்பு செய்து பார்த்ததில்லை, ஈரப்பலாக்காய் என்பது கறிப்பலாவா? அரிந்தால் பிசுபிசுப்பாக இருக்குமே, அதை ஒரே ஒருமுறை மட்டும் வாங்கி சமைத்ததுண்டு.
குறிப்பு யமி :)

ஓ சாரி மேலே நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்பு இப்பொழுதுதான் படித்தேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு உமா,

பலாப் பிஞ்சுதானே சொல்றீங்க‌? நாகர்கோவில் பக்கம், சீசன் டயத்தில் நறுக்கின‌ துண்டுகளாகவே விப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.

குறிப்பு நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஜனதுல்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கு நன்றி செல்வி. படிச்சு புரிஞ்சிருபீங்கன்னு நம்பறேன். ரெண்டும் வேறு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வருகைக்கு நன்றிம்மா. இது பலாபிஞ்சு இல்ல. கிட்டத்தட்ட பலா போலவே இருக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

fb யில் அறுசுவை விசிறிகள் பக்கத்திற் பகிர்ந்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

பார்த்தேன் அக்கா. நன்றி. தோழீஸ் நீங்களும் உடனே ஓடிப்போய் பார்த்து டபுட்ட க்ளியர் பண்ணிகோங்க. டீச்சர் பிரம்போட வெயிட்டிங். :)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நல்லா இருக்கு. மாலத்தீவில் சாப்பிட்டதோட சரி, இங்கே கிடைப்பதில்லை. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா