தேதி: October 16, 2014
திராட்சைப் பழங்கள்
நாஸ்டூரியம் அல்லது வல்லாரை இலைகள்
V டூல் / சிறிய கத்தி
வெள்ளைச் சீனி
நீல கலரிங்
சிறிய ப்ளாஸ்டிக் பை
பேப்பர் டவல்
தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.

பையினுள் சீனியைப் போட்டு கலரிங் சில துளிகள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

திராட்சையின் நடுப்பகுதியில் V டூலை அழுத்தவும். இப்படியே சுற்றிலும் நான்கு அல்லது ஐந்து முறை குற்றி எடுக்கவும்.

V டூல் இல்லாமல் வெட்டுவதானால், சிறிய கத்தியொன்றைச் சற்று சரித்துப் பிடித்து அழுத்த வேண்டும். பழத்தின் மத்தி வரை கத்தி நுழைந்ததும் எடுத்து விட்டு மீண்டும் மறுபக்கம் சரித்துப் பிடித்து அழுத்தவும். இப்படியே சுற்றிலும் இதழ்களை வெட்டிக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பழத்திலிருந்தும் இரண்டு பூக்கள் கிடைக்கும். ஈரலிப்பை மெதுவே ஒற்றித் துடைக்கவும்.

ஒரு சிறிய தட்டில் நீல நிறச் சீனியைப் பரவி, விரும்பிய விதமாக காம்பு நீக்கிய இலைகள் மற்றும் திராட்சை அல்லிகளை வைத்து அலங்கரிக்கவும்.

Comments
இமாம்மா
அல்லிக் குளம் சிம்ப்ளி சூப்பர்... திராட்சையை வெட்டுற படம் வெகு அழகு :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
immama
Really super. allikulam. Tamil a sariya varalama enakku . Problem ellathukkum ninga sollara advise enkku roma pidicirukku. 14 years poi nan oru baby undakanuma. Enkku p onnu irukka . Payan 6yearsla irantuttan, five monthla affected brain fever. Nerves affect, 6years varkkum valarthu kadavuladiam anuppi vittan, ippa en ponnu mentally feel akira. Oru baby undakalumnu intha month try panna poranma. Avan pirathathil irunthu nan contract vaccukkala. Evana patukkanumnu payam enkku enna panrathunua puriyalama,
V for Victory
அன்பு இமா
செய்யலாம். ஆனால், அதுக்கு முன்னாடி இந்த வி கத்தி வாங்கப் போறேன்.
திராட்சை பூ ரொம்ப அழகு. இதை டூத்பிக்ல குத்தி வைக்கலாம்ல.
இமா அம்மா,
ம்ம் ஆரஞ்சு ல ஃப்ளவர் கூடை, இப்போ திராட்சை ல குளமா ... ரொம்ப அழகா இருக்கு.... சீனி ஐடியா சூப்பர்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
இமா ஆன்டி
அழகான மலா்கள் பிறந்த நாள் போன்ற விழாக்களுக்கு ஏற்றது
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
இமாம்மா
சிம்பிள் & சூப்பர் ஐடியா இமாம்மா... விருந்தினர்கள் வரும்போது செய்து வைக்க ரொம்ப சுலவா இருக்கும் மற்றும் அட்ராக்ஷனாவும் இருக்கும்...
வாழ்த்துக்கள்...
பிரேமா ஹரிபாஸ்கர்
என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்
V கத்தி
அது அவசியம் இல்லை நிகிலா. சின்னதாக கூரான கத்தி ஒன்று இருந்தால் போதும்.
//டூத்பிக்ல குத்தி// ;))))))))) அது 'என் உலகில்' பழைய கதை. :)
அறுசுவைக்கு அனுப்புவதானால் மாற்றம் இருக்க வேண்டாமா! அதனால் இப்படி.
- இமா க்றிஸ்
சுபி
//இப்போ திராட்சை ல குளமா// இன்னும் முடியல லிஸ்ட். ;) இது திராட்சைல அல்லி.
//சீனி ஐடியா// இது எல்லோரும் பண்ணுறதுதானே! இங்கு முன்னால முள்ளெலிக்கு புல்லு வைத்தேன். http://www.arusuvai.com/tamil/node/23576 இப்போ குளம். எனக்கு இந்த விஷயத்தை அறிமுகப்படுத்தினது இருபத்தேழு வருஷம் முன்னால ஊர்ல ஒரு ஆசிரியத் தோழி. அப்போ இருந்து சீனிக்குக் கலர் பண்ணுறது, பல சந்தர்ப்பங்கள்ல கை கொடுத்து இருக்கு.
- இமா க்றிஸ்
ஹசீனா
பொண்ணை சந்தோஷமா வைச்சுக்கங்க. யோசிக்காதீங்க. எல்லாம் சீக்கிரம் சரியாகும். நானும் ப்ரே பண்றேன்.
- இமா க்றிஸ்
இமாம்மா @@@
ரொம்ப ரொம்ப சூப்பர். ...அருமையாக உள்ளது. .எப்டிம்மா இப்டிலாம் வாவ் சூப்பர். ...
அன்பு தோழி. தேவி
ஹசினா
உங்களுக்காக நானும் ப்ரார்த்திக்கிறேன்.மனச ரிலாக்ஸ வச்சுக்கங்க. நல்லதே நடக்கும். ..
அன்பு தோழி. தேவி
immama
Thanks for advice.
ashvath devi
Thanksma . Pray sayunga.
அல்லிக் குளம்
கருத்துகளுக்கு என் அன்பு நன்றிகள் கனி, ஜனதுல், ப்ரேமா & தேவி.
- இமா க்றிஸ்
இமா
வித்தியாசமானது, அழகானது, எளிமையானது... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி...
சுருக்கமானது - தங்கள் கமண்ட். ;))
நன்றி வனி. ;)
- இமா க்றிஸ்
இமாம்மா
உங்கள் க்ரியேட்டிவிட்டி சூப்பர்மா... திராட்சை உங்கள் வீட்டு தோட்டத்தினுடையதா... அழகா ஒரே மாதிரி இருக்கு....
அல்லிக் குளம்
//திராட்சை உங்கள் வீட்டு தோட்டத்தினுடையதா.// இல்லை. இது வாங்கியது. தோட்டத்தில் இப்போதான் துளிர்த்து இருக்கிறது. அறுவடைக்கு பெப்ரவரி வரை காத்து இருக்கணும். முன்னைய அறுவடை இருக்கு http://www.arusuvai.com/tamil/node/25175 பாருங்க. //அழகா ஒரே மாதிரி இருக்கு.// :) நன்றி ப்ரியா.
- இமா க்றிஸ்