மருதாணி

அனைவருக்கும் இனிமை பொங்கும் தீபாவளியாக அமைய
எனது நல்வாழ்த்துக்கள் :) _()_ :).

இருள் அகன்று ஒளிவீசிட
நலம் நிறைந்து நன்மை விளைந்திட
நாடெங்கிலும் நற்குணம் பெருகி
நறுமணம் வீசிட வேண்டுவோம் இறைவனை!

மருதாணி பொதுவா எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மருதோன்றி என்பதும் இதன் பெயரே. இதனோட காய்கள் பார்க்கிறதுக்கு மரு சைஸ்லதான் இருக்கும். கொத்து கொத்தா இருக்கும்.

சின்ன வயசிலிருந்தே மருதாணினா கொள்ள பிரியம். மாலை நேரத்தில் ஆட்டுக்கல் என்கிற ஆட்டாங்கல் என்கிற செக்குல போட்டு ஆட்டி எடுத்து தேங்கா சிரட்டை என்ற தேங்கா தொட்டில வெச்சு, இரவு சாப்பிட்டு முடிச்சு எப்படா கைகளுக்கு போடுவோம்னு ஒரே பறபறப்பா இருக்கும்.

காலைல எழுந்து பார்த்தா போர்வைல பாதி ஒட்டிஇருக்கும். கைல மீதி இருப்பது நல்லா காஞ்சு போய் இருக்கும். அதனை ஊறவெச்சு கழுவும் போது, வரும் வாசனை ரொம்ப பிடிக்கும்.

ஒரு வாரத்திற்கு மருதாணி வாசனை கையைவிட்டு அகலவே அகலாது. விரல் நகங்களில் பிடித்திருக்கும் சிவப்பு நிறம், நகம் வளரும் வரை போகவே போகாது.

அப்ப எங்க வீட்ல செடி இல்ல, செடி இருக்கிற வீட்ல கெஞ்சாத குறையா கேட்டு வாங்கி அரைச்சு வெச்சதுண்டு. செடி எவ்வளவு முறை நட்டு வெச்சும், வளரவேயில்லை.

அப்புறம் கொஞ்சகாலம் கழிச்சு தானே ஒரு செடி வளர்ந்து பெரிசாகிடுச்சு. ஆனா பாருங்க அப்பலாம் மருதாணி அரைச்சு வெக்கிற ஆசை போய், பொடி வாங்கி கலக்கி, அதற்குனு விக்கிற ப்ளாஸ்டிக் அச்சு வாங்கி அதன் மேல அந்த கலவைய பூசி வெக்கிறதுண்டு. கல்லூரி காலங்களின் போது மெஹந்தி கோன் ரொம்ப பிரபலமாகிடுச்சு.

சிட்டி கேர்ல்ஸ் எல்லாம் பால் கவர்ல கோன் செய்து அசத்தலா போட்டுட்டு வருவாங்க. நம்ம வீட்லதான் பால் கவர்லாம் கிடையாதே. கவ் மில்க் அன்டு பஃப்லோ மில்க் இருந்ததால, பால் பாகெட் கவர்க்கு, இந்த சினிமா தியேட்டர்ல சோடா மூடி தேடுற சின்ன பசங்களாட்டம், எங்கியாச்சும் பால்கவர் கிடைக்காதானு கல்லூரி கேண்டீன் பக்கத்துல எல்லாம் தேடியதுண்டு.
ஆனா அங்கியும் டைரக்டா கவ், பஃப்லோ மில்க் யூஸ் பண்ணியதால, பால் கவர்க்கு பஞ்சம் ஏற்பட்டுப்போச்சு.

கொஞ்சம் கூட மனம் தளராத புத்திசாலி மூளை, வீட்டில பொட்டுக்கடலை வாங்கின பேப்பர், துணி எடுத்தாந்த

(நாங்களாம் துணி வாங்குறதுனு சொல்லமாட்டோம், எடுக்கிறதுனுதான் சொல்வோம். கல்யாணத்திற்கு ஜவுளி எடுத்தாச்சா? தீபாவளிக்கு துணி எடுத்தாச்சா? யூனிஃபாம் எடுத்து கொடுத்து தெச்சாச்சா? ஆனா நகை வாங்கியாச்சானுதான் கேட்போம், சரீங்க அடைப்புக்குள்ள ஒரு மெஹா பதிவு ரேஞ்சுக்கு எழுதுனா கோச்சுப்பீங்களோனு இத்தோட இதை நிறுத்திக்கிறேன்)

கெட்டிக்கவர் இதெல்லாத்தையும் போட்டு வெட்டு வெட்டுனு வெட்டி கோன் தயாரிக்கிற முயற்சில ஈடுபட்டேன்.
ஆனா அந்த கோன்ல இருந்து மருதாணி வெளிய வராம அழிச்சாட்டியம் பண்ணும்.
இருந்தாலும் போராடி போடுறதுண்டு.

மருதாணி சின்ன குழந்தைங்களுக்கு கை கால்க்கு வெச்சா ரொம்ப அழகா சிவக்கும். என் மகன் நான்கு, ஐந்து, மாத குழந்தையா இருக்கும் போது உள்ளங்கை, உள்ளங்கால்னு வெச்சுவிடுவதுண்டு. அப்ப நல்லா வெயில் கால்ம் கூட அதுனால சளி பிடிக்கல.

அதே போல என் மகளுக்கு ரொம்ப குட்டியா இருக்கும் போது வெச்சதும், அவங்க முகம் போன போக்கு இன்னும் ஞாபகம் இருக்கு.

செய்முறை:

மருதாணி இலைகள்.... 1கப்
வெட்டுப்பாக்கு........1 துண்டு ( சாமி கும்பிட வெற்றிலை பாக்கு வாங்கினா எடுத்து பத்திரப்படுத்துவது வழக்கம்)
எலுமிச்சை....... 1/2 மூடி

செய்முறை:
மருதாணி இலைகளை மிக்ஸியில் சின்ன ஜாரில் போடவும்.
வெட்டு பாக்கினை லேசாக உடைத்து அதனையும் உடன் போடவும்.
நீர் விடாமல் அரைக்கவும்.
இரண்டு மூன்று சுற்றுகள் அரைத்த பின்பு 1/2 ஸ்பூன் நீர்விடவும்.
நைஸாக அரைத்தெடுக்கவும்.
அரைத்தவற்றை ஸ்பூனாலோ, கைக்கு கிளவுஸ் அணிந்தோ எடுக்கவும்.
ஜாரிலிருந்து நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் எடுத்ததிற்கே சிவந்து விட்டது.
பின்னர் எலுமிச்சையை சாறு பிழிந்து கலக்கவும்.

இந்த கலவையினை டூத் பிக் உதவியால் கைகளுக்கு வேண்டிய டிசைன் போட்டுக்கொள்ளலாம்.

இப்பதான் டூத் பிக்லாம், நான் சிறு வயதில் தென்னோலை குச்சி பயன்படுத்திதான் போட்டிருக்கிறேன்.
இவ்வளவுதாங்க மருதாணி செய்முறை.

இயற்கை விந்தைகளில் மருதாணி எனக்கு எப்பவுமே வியப்பூட்டும் தாவரமாகவே தெரிகிறது.
இந்த தீபாவளிக்கு நீங்களும் இது போல் அரைச்சு வெச்சு பாருங்களேன்.

நன்றி!! வணக்கம்:) _()_ :)

4
Average: 4 (4 votes)

Comments

தமிழ் மலரும் நினைவுகளா? நடக்கட்டும் நடக்கட்டும் :) முதன்முறையாக தங்களிடம் பேசுகிறேன், மிக்க மகிழ்ச்சி & நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுவா முதல்ல தலைப்பே "மருதாணி வெச்ச புள்ள இவதா"னு யோசிட்டு விட்டுட்டேன். இப்ப நீங்க பாடியிருக்கும் பாட்டு, அந்த தலைப்பையே வெச்சிருக்கலாமோனு நினைக்க வெக்கிது :)) ஆமாம் சுவா எனக்கும் மருதாணி வாசனை ரொம்ப பிடிக்கும்.

//எத்தனை விதமான ஹென்னா பொடி வந்தாலும் இதன் பக்கத்தில் நிக்க முடியாதுல்ல :)// முடியாது முடியாது :)). மிக்க நன்றி சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனக்கு மருதாணி கைக்கு வைக்க‌ சந்தர்ப்பம் கூட‌ கிடைக்கல‌ படிக்கிறப்போ ஸ்கூல்ல‌ விடமாட்டாங்க‌ அம்மா வைப்பாங்க‌ அரைச்சு.
14 வயசு இருக்கிறப்போ நெருப்புக் காய்ச்சல் வந்து முடி எல்லாம் கொட்டிரு
அப்போ நிறைய‌ எண்ணை எல்லாம் வைச்சும் பலன் இல்லை கடைசியா தேங்காய் எண்ணைல‌ மருதாணிய‌ ஊற‌ வைச்சு வைச்சேன் கொஞ்சம் மணமா இருக்கும் தலைல‌ வைக்கிறப்போ ஆனா நல்ல‌ அடர்தியா கறுப்பா நீட்டா வளர்ந்திசு என் முடியின் ரகசியம் என்ன‌ என்ற‌ மருதாணி என்பேன்.. அக்கறை இல்லாதல‌ இப்போ கொட்டிரு

இப்போ தான் முதல் முறையா ரிப் வாங்கி ஆசைல‌ கைல போட்டேன் ..

முதலில் தாமதமான நன்றிக்கு மன்னியுங்கள்!

நீங்கள் கூறியிருப்பது பலருக்கும் பயனுள்ள விசயமாக இருக்கிறது.
நெருப்புக்காய்ச்சல் என்றால் என்ன? டைஃபாய்டு வந்தால் எவ்வளவு அடர்த்தியான கூந்தலும் கொட்டிவிடும் எனக் கேள்விப்பட்டிருக்கிறென். நீங்கள் கூறுவது டைஃஃபாய்டாக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கின்றது.
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தர்ஷா :).

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.