டிஷ்யூ பேப்பர் ஃப்ளவர்

தேதி: October 20, 2014

4
Average: 4 (3 votes)

 

டிஷ்யூ பேப்பர்
ஸ்டாப்ளர்
ஃபெவிக்கால்
ஃபேப்பரிக் பெயிண்ட் - ஆரஞ்ச் மற்றும் பச்சை நிறங்களில்
ப்ரஷ்

 

டிஷ்யூ பேப்பர் ஃப்ளவர் செய்வதற்கு தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு டிஷ்யூ பேப்பரை சரிசமமான நான்கு துண்டுகளாக நறுக்கவும். அதனை ஒன்றாக அடுக்கி, அதன் எதிரெதிர் ஓரங்களை ஜிக் ஜாக் வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அதனை விசிறி போல் மடிக்கவும்.
முழுவதும் மடித்த பிறகு நடுவில் ஸ்டாப்ளர் பின் போட்டுக் கொள்ளவும்.
இப்போது படத்தில் உள்ளது போல் டிஷ்யூ பேப்பரை ஒவ்வொரு லேயராக விரித்துவிடவும்.
இரு பக்கங்களிலும் முதல் மூன்று லேயரை மட்டும் விரித்துவிடவும். படத்தில் உள்ளது போல் இரு பக்கத்திலும் உள்ள பேப்பரை ஃபெவிக்கால் தடவி இடைவெளி தெரியாதவாறு ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு ஒவ்வொரு இதழின் ஓரங்களிலும் ஆரஞ்ச் நிற ஃபேப்பரிக் பெயிண்ட்டை அடித்துவிடவும்.
அடிப்பகுதியில் உள்ள இதழ்களுக்கு பச்சை நிற ஃபேப்பரிக் பெயிண்ட்டை அடிக்கவும். அழகான டிஷ்யூ பேப்பர் ஃப்ளவர் ரெடி. இதே போல் நான்கு, ஐந்து பூக்கள் தயார் செய்து பூக்கூடையில் வைத்து அலங்கரிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகு. சுலபமாகவும் தெரிகிறது. நிச்சயம் முயன்று பார்க்கிறேன்.
இது... வெள்ளை பேப்பர் சர்வியட்டா! படத்தில் சாதாரண டிஷ்யூ போல தெரியவில்லையே!

‍- இமா க்றிஸ்

டிஷ்யூ பேப்பர் ஃப்ளவர் சிம்பிளா அழகா இருக்கு :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

அருமையா இருக்கு.

ரொம்ப‌ அழகா சிம்பிளா இருக்கு... சூப்பர்.........

சூப்பர்...

அழகா இருக்கு

Humanity is the speciality of good human being.