சாமை அரிசி முறுக்கு

தேதி: October 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

சாமை அரிசி - ஒரு கப்
பொட்டுக்கடலை - கால் கப்
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
வரமிளகாய் - 6
சீரகம் - ஒரு தேக்கரண்டி
எள் - ஒரு மேசைக்கரண்டி
ஓமம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


 

சாமை அரிசியை 4 மணி நேரம் ஊறவிடவும். மிக்ஸியில் பொட்டுக்கடலையைப் போட்டு பொடித்து சலித்து வைக்கவும். வரமிளகாயை சுடுநீரில் அரை மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
சாமை அரிசி ஊறியதும் க்ரைண்டரில் போட்டு நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் சலித்த பொட்டுக்கடலை, சீரகம், ஓமம் (கைகளினால் நன்கு தேய்த்து போட வேண்டும்) சுத்தம் செய்து கழுவிய எள், தேவையான அளவு உப்பு மற்றும் வெண்ணெயைச் சேர்க்கவும்.
பிறகு அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு முறுக்குகளாக பிழிந்துவிடவும். தீயை சீராக எரியவிட்டு, முறுக்கு வெந்தவுடன் எடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான சாமை அரிசி முறுக்கு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ஹெல்தி முறுக்கு... நாங்க இதே முறையில் தான் இட்லி அரிசியில் செய்தோம்

மிக்க நன்றி ப்ரியா:) எப்பவும் செய்யும் முறைதான் இதுவும் , சுவை அதைவிட அதிகம்னே சொல்லலாம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

எனது குறிப்பினை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரொம்ப‌ ஈஸியான கிறிஸ்பியான முறுக்கு செய்ய‌ டிப்ஸ் சொல்லி இருக்கீங்க‌, சூப்பர். சாமை அரிசி இது சிறு தானியமா அக்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சத்தான‌ சிறு தானிய‌ ரெசிப்பி. வாழ்த்துக்கள்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

பார்க்கவே அருமையா இருக்குங்க‌. இப்ப‌ தான் ஊரில் இருந்து நிறைய‌ முறுக்கு வந்திருக்கு... முடியட்டும், செய்துட்டு சொல்றேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாமை அரிசி இதுவரை நான் உபயோகித்தது இல்லை.நானும் பொட்டுக்கடலை சேர்த்து செய்தது உண்டு.இந்த அரிசியில் செய்திருப்பது வித்தியாசம் தான்.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சுபி மிக்க நன்றி :) ஆமாம்பா இது சிறுதானியம்தான், மளிகைகடைகளில் கிடைக்கும்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மஞ்சு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வனி இந்த வகை முறுக்கு ரொம்பவே நல்லா இருக்கு, செய்துபார்த்துட்டு சொல்லுங்க மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அப்ஸரா இந்த வகை அரிசி இப்பலாம் பெருவாரியான இடங்களில் உபயோகிக்க தொடங்கிட்டாங்க. கருத்திற்கு மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சாமை அரிசி முறுக்கு ஹெல்தி வெர்ஷன் ல‌ சூப்பர் கிரிஸ்பி அன்ட் ஈஸி முறுக்கு .. மம்மாவ‌ செய்ய‌ சொல்ல போறேன்.. :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சத்தான முறுக்கு சூப்பர் அருளு :) சாமை அரிசி நான் பாத்ததே இல்ல வாங்கி செய்து பார்க்கனும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கனி கண்டிப்பா செய்ய சொல்லுங்க, நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுவா இப்ப ஓரளவு எல்லா இடங்களிலும் கிடைக்குதுப்பா, வாங்கி செய்து பாருங்க :)
மிக்க நன்றி சுவா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அரிசில முறுக்கு ட்ரை பண்ணிருக்கேன். அதை கூட சத்தா குடுத்திருக்கீங்க. முறுக்கு செம பக்குவமா வந்திருக்கு போல. லாஸ்ட் படம் சூப்பர். குறிப்புக்கு நன்றி சிஸ்டர்.

உன்னை போல் பிறரை நேசி.