arusuvai groupil join panna

நான் fb arusuvai groupil join பண்ண‌ நேத்து ட்ரய் பண்ணேன். ஆனால் இன்னுவரைக்கும் பென்டிங்லதான் இருக்கு.என்ன‌ பண்ணலாம்னு சொல்லுங்க‌.ப்ளீஸ்..........

நானும் ட்ரை பண்ணேன், இன்னும் ஜாயின்ட் ஆகவில்லை

உறுப்பினர்களின் கவனத்திற்கு.

அறுசுவை ஃபேன்ஸ் க்ரூப் தொடங்கப்பட்டதின் நோக்கம் பற்றி முன்பே குறிப்பிட்டு இருந்தேன். இது முழுக்க முழுக்க அறுசுவை உறுப்பினர்கள், பார்வையாளர்களுக்கான க்ரூப். இங்கே அறுசுவை தளம் சம்பந்தமான விசயங்கள் மட்டுமே இடம்பெற வேண்டுமென்று விரும்புகின்றோம். மற்ற விசயங்களுக்கு ஏராளமான க்ரூப்ஸ் இருக்கின்றன.

இந்த க்ரூப்பில் அறுசுவையைப் பார்த்து தாங்கள் செய்த உணவுகளின் படங்கள், கைவினைப் பொருட்களின் படங்கள், அறுசுவையில் வெளியாகி உள்ள உங்களது படைப்புகளுக்கான லிங்க்ஸ் இப்படி அறுசுவை தளம் சம்பந்தமான விசயங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும். சிலர் அறுசுவைக்கு சம்பந்தம் இல்லாத விசயங்களை இங்கே போஸ்ட் செய்கின்றனர். இப்போதைக்கு அந்த பதிவுகளை நீக்கவில்லையென்றாலும், இது போன்று எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்று விரும்புகின்றோம். இந்த காரணங்களால்தான் அதனை க்ளோஸ்டு க்ரூப்பாக கொண்டு செல்கின்றோம்.

அடுத்து, இதில் உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அவர்களுடைய பேஸ்புக் டைம்லைனை பார்வையிட்டுதான் சேர்க்கின்றோம். சிலரது பக்கங்களில் எந்தப்பதிவுகளுமே இருப்பதில்லை. சிலர் எல்லா தகவல்களையும் மறைத்து வைத்திருக்கின்றார்கள். அவர்களைக் குறித்து எந்த அநுமானத்திற்கும் வருவது சிரமமாக இருக்கின்றது. அத்தகையப் பெயர்களை அந்தக் குழுவில் இணைப்பதில்லை. பெண்கள் பெயரில் வரும் ஆண்கள், ஆண்கள் பெயரில் வரும் பெண்கள் என்ற குழப்பவாதிகளையும் இணைப்பதில்லை. இவர்களால் இந்த குழுமத்திற்குப் பிரச்சனைகள் வரலாம் என்று யூகிப்பவர்களையும் குழுவில் இணைப்பதில்லை. எனவே, பேஸ்புக்கில் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள கொஞ்சம் தகவல்களையாவது வெளிப்படையாக வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களைப் பற்றி அறிந்துகொள்ள எங்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலே பதிவுகள் கொடுத்துள்ள இரண்டு சகோதரிகளில் ஒருவரது பெயரை (mohamed samad) இணைத்துள்ளோம். மற்றொருவரது (aashika) ரிக்வெஸ்ட் இப்போது இல்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. முன்பு சகோதரி வனிதா அவர்கள் சிலரது ரிக்வெஸ்ட்டை தெரியாமல் இக்னோர் கொடுத்துவிட்டார். அதைப் பற்றி இங்கே தெரிவித்து வருத்தமும் தெரிவித்து இருந்தார். அதில் உங்கள் பெயர் விட்டுப்போயிருக்க வாய்ப்புள்ளது. எனவே தாங்கள் தயவுசெய்து இன்னொரு முறை ரிக்வெஸ்ட் அனுப்பவும்.

அப்போது இக்னோர் கொடுத்தது தான் கடைசி அண்ணா... அதன் பின் ஒருவரது ரெக்வஸ்ட்டும் இக்னோர் செய்யப்படல (என் பக்கத்தில் இருந்து). ஆஷிகா உங்க பெயரும் அப்போது இக்னோர் செய்திருந்தால் மிண்டும் கொடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks admin anna.yennai groupil inaiththatharkku.......

vanakkam admin anna nan veetil erunthe fish gravy panni athai online la sale pannalam nu ninaikuren only for sundays na athai arusuvai la podalama veetil erunthe ethavathu velai seiya enaku help pannunga anna ehavathu online job ethavathu erunthalum sollunga

மேலும் சில பதிவுகள்