தயவுசெய்து உதவுங்கள்

ஹலோ தோழிகளே

எனக்கு ஜனவரி மாதம் குழந்தை பிறந்தது. 40 நாட்கள் period ஆனது. அதன் பிறகு எந்த மாதமும் period ஆகவில்லை. டாக்டரிடம் கேட்டோம் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார்கள். இது எதனால்? நான் வேலைக்கு செல்கிறேன் காலையிலும் இரவிலும் மட்டும் தான் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன். நான் இப்பொழுது முன்பை விட மிகவும் மெலிந்து விட்டேன் இது எதனால்? எனக்கு period ஆகி 8 மாதங்கள் ஆகிறது. குழந்தை பிறந்த 6 மாதத்திற்கு பிறகு வாரம் ஒரு முறை மட்டும் உறவில் ஈடுபடுவோம். குழந்தைக்கு 2 வயது வரை பால் கொடுக்க முடிவெடுத்துள்ளேன். ஆனால் என் மாமியார் பால் கொடுபதால் தான் உடல் இளைகிறது என்கிறார்கள் இது உண்மையா? தயவுசெய்து உதவுங்கள்

//முன்பை விட மிகவும் மெலிந்து விட்டேன்// //பால் கொடுபதால் தான் உடல் இளைகிறது// இராது. நீங்கள் எதையோ தவற விடுகிறீர்கள். நீங்கதான் யோசிச்சுப் பார்க்கணும். ஒழுங்காக சாப்பிடுறீங்களா? ஆரோக்கியமான உணவாக எடுக்கிறீர்களா?

//அதன் பிறகு எந்த மாதமும் period ஆகவில்லை. டாக்டரிடம் கேட்டோம் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார்கள். இது எதனால்?// அப்படித்தான் பலருக்கும். பிரச்சினை இல்லை அது.

//குழந்தை பிறந்த 6 மாதத்திற்கு பிறகு வாரம் ஒரு முறை மட்டும் உறவில் ஈடுபடுவோம்.// கருத்தடை முறைகள் எதையாவது பயன்படுத்துகிறீர்களா? நாட் கணக்கு, பாலூட்டுவதையெல்லாம் நம்ப முடியாது. மாதவிலக்கு மீண்டும் சரியான ஒழுங்குக்கு வருவதற்கு முன்பாகவே மீண்டும் குழந்தை தங்கலாம். இருக்கும் குழந்தை ஓரளவு வளரும் வரை திரும்பக் கருத்தரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

நாங்கள் கருத்தடை முறை பயன் படுத்துகிறொம் எனக்கு அம்மா இல்லை அதனால் என்ன‌ சாப்பிட‌ வென்டும் சாப்பிட‌ கூடாதென்ட்ரு தெரிய‌ வில்லை. மதியம் மட்டும் தான் கொஞ்சம் நிரய‌ சாபிடுவென் காலையிலும் மாலயிலும் கொஞ்சமாக‌ தான் சாப்பிடுவேன்

நாங்கள் கருத்தடை முறை பயன் படுத்துகிறொம் எனக்கு அம்மா இல்லை அதனால் என்ன‌ சாப்பிட‌ வென்டும் சாப்பிட‌ கூடாதென்ட்ரு தெரிய‌ வில்லை.

பாலூட்டும் போது சத்தான உணவு மிக அவசியம். பருப்பு, காய், கீரை, பழம் என எல்லாமே சாப்பிடலாம். சில குழந்தைகளுக்கு மாம்பழம், மாங்காய், வேர்கடலை, தேங்காய் உணவில் சேர்த்தால் ஆகாது. என் பிள்ளைகளுக்கு வேர்கடலை, தேன்காய் உணவில் இருந்தால் வாந்தி வரும். ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் எடுத்தால் காய்ச்சல் வரும் ;( ஆனால் இந்த ஒவ்வாமை என் தங்கை பிள்ளைக்கு இல்லை. இது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். உங்கள் குழந்தைக்கு எது சேரவில்லை என்பதை நீங்கள் தான் கவனிக்க வேண்டும். மற்றபடி எல்லாமே சாப்பிடலாம்.

கீரை தினமும் சாப்பிடுங்க... பூண்டு நிறைய சேருங்க கீரை சமைக்கும் போது. பால் கிடைக்கும் குழந்தைக்கு.

அம்மா இல்லை?? இந்த வார்த்தை எல்லாம் அறுசுவைக்கு வந்துட்டு சொல்லக்கூடாது... இத்தனை பேர் இருக்கோமே உங்களுக்கு உதவ :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மா இல்லை?? இந்த வார்த்தை எல்லாம் அறுசுவைக்கு வந்துட்டு சொல்லக்கூடாது... இத்தனை பேர் இருக்கோமே உங்களுக்கு உதவ :)// நன்றி வனிதா ரொம்ப‌ ஆறுதலா இருக்கு உங்கள் வார்தைகள்

நல்ல சத்தான உணவு மட்டுமில்லை, நேரத்துக்கு சாப்பிடுறதும், தூங்குறதும் கூட ரொம்ப முக்கியம். இதெல்லாம் கூட நாம எடை குறைய காரணம். கடந்த சில வாரங்களில் நான் 4 கிலோ குறைஞ்சிருக்கேன். சாப்பிடத்தான் செய்யறேன், ஆனால் சரியான தூக்கம் இல்லை, அது தான் காரணம். அது போல நீங்க என்ன தப்பு பண்றீங்கன்னு கவனிங்க. வேலைக்கு வேற போறதா சொல்லிருக்கீங்க... அதுக்கு ஏற்றபடி ஓய்வும் வேணும் இல்லையா. உடம்பை பார்த்துக்கங்க சங்கீதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்