வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்!!

வாங்க!! வணக்கோ_()_ :)

எல்லாரும் சௌக்கியந்தானுங், ஊர்ல நல்ல மழையாட்டம் இருக்குங்.. டேம்ல தண்ணி வரத்து நல்லா இருக்கும்போல தெரிதுங். இந்த முறை நடவுக்கு தண்ணி பஞ்சம் இருக்காது இல்லிங்களா? இப்படியாகப்பட்ட பேச்சைத்தான் ஊரில் மழைக்காலங்களில்அதிகம் கேட்டதுண்டு.

ஆனால் நகர்புறத்திலோ மழையினால் ஏற்பட்ட பாதிப்பு இதோ.. வீரபாண்டிய கட்டபொமன் இருந்திருந்தால் இப்படித்தான் சீறி இருப்பார்.

" வானம் பொத்துக்கிச்சு
பூமி பிச்சுக்கிச்சு
உனக்கேன் கொடுக்கணும் வரி
எங்களுடன் சாக்கடை நீரில் நடந்தாயா?
வேலைக்குச் செல்லும் எங்கள் குல பெண்களுக்கு
குடைதான் பிடித்தாயா?
யாரைக் கேட்கிறாய் வரி
எதற்கு கேட்கிறாய் வரி

நோட் திஸ் பாயிண்ட் ஆல் பீப்பிள், நாஞ் சொல்லல இந்த வசனத்தை நம்ம வீரு இருந்திருந்தா இப்படிலாம் சொல்லி இருப்பார்னு சொல்ல வாரேன்.

ஃபேஸ்புக்ல எதுக்கு லைக் போடணும், எதுக்கு கம்னு வரணும்னு யோசிக்கிற மூளை இப்படிலாம் வீர வசனம் பேச வெக்கும்னு நினைக்கிறீங்க.

சரி அதெல்லாம் விட்டுத்தள்ளுங்க, இப்ப இந்த படத்தில இருக்கும் வடைய, சாரிங்க கட்லெட் ( எண்ணைய்ல போட்டு பொரிப்பவை எல்லாமே எங்கள பொறுத்தவரை வடைதானுங்கோ, அதுனாலதான் லேசா டங் ஸ்லிப் ஆகிடுச்சு) எப்படி செய்வதுனு சொல்லிக் கொடுக்கப் போறேன்.

எதாச்சி வேலையா இருந்தீங்கனா போட்டது போட்டாப்பில அப்பிடியே ஓடியாங்கோ!! இந்த அரிய வாய்ப்பு போனா வராது!!

இதுக்கு மூலப்பொருள் சோயா சங்க் (சோயா புண்ணாக்குதானுங், நிசமாவே அதுதான் திட்டறேனு நினைக்கப்படாது), இஞ்சி சிறு துண்டு, பூண்டு 10 பல்லு, பச்சைமிளகாய் 2 (அவியவிய காரத்துக்கேத்தாப்பில போட்டுக்கோங்க).
வழக்கம் போல சோயா உருண்டைய எப்படி குளிப்பாட்டுவீங்களோ அப்பிடியே செய்துடுங்க. முதல்ல சுடுநீர்க்குளிய, பொறவு ரெண்டு தடவ பச்ச தண்ணில முக்கி எடுங்க. அப்பரமா சுத்தமா தண்ணி இல்லாம புழிஞ்சு எடுத்து வைங்க.
மேலே சொல்லி இருக்கு எல்லாத்தையும் மிக்ஸில போட்டு நல்லா அரைச்சுடுங்க.

அரைச்ச கலவையோட பொடியா நறுக்கிய பெரியவெங்காயம் 2, கறிவேப்பிலை 4 இணுக்கு, அதையும் நல்லா பொடிப்பொடியா அரிஞ்சுக்கணும். மல்லி தழை அதையும்...பொ.பொ. அரிஞ்சுக்கணும்.
இதுக்கூட ஒரு சிறு கரண்டி மைதாமாவு, தேவையான அளவு உப்பு போட்டு கலந்துக்கணும்.
முக்கியமான விசியம் தண்ணியே தேவையில்லை.

வட சட்டில எண்ணைய காயவெச்சு, இந்த உருண்டைகளை ரொட்டித்துள்ள பொரட்டி எடுத்து போட்டு எடுத்தால் சுவையான மாலை நேர சிற்றுண்டி தயார்.
இப்பதான் போட்டு எடுத்து சுடச் சுட போட்டிருக்கேன், சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க.

இது எங்க தோட்டத்தில பூத்த அடுக்குமல்லி, செடி வெச்சு ரொம்பநாளாச்சு, இன்னிக்குத்தான் அதிகபட்சமா நாலு பூ பூத்திருக்கு. பறிச்சு வெச்சுக்கோங்க தோழீஸ் :)
மீண்டும் சந்திப்போம். நன்றி!! வணக்கம் _()_ :)

5
Average: 5 (3 votes)

Comments

பார்க்க‌ காரச்சீடை மாதிரி இருக்குங். டேஸ்ட் நல்லாருக்கும்னு தோணுதுங்.
வீராவோட‌ கவிதை வசனம் ரொம்ப‌ நல்லாயிருக்குதுங்...)
எங்க‌ வீட்லயும் அடுக்குமல்லி இருக்குங்கோ. ஆனா, இப்போ பூப்பூக்கல்லீங்கோ.
போயிட்டு வரோமுங்க‌....

நல்லாத்தான் வசனம் பேருறீங்க அம்மணி. வீரு வசனத்தை சொன்னேன். :) அறுசுவைக்கு ஒன்னு வந்தா போகாது, போனா வராது ;) அப்பறம் என்ன போட்டது போட்டபடி விட்டுட்டு வரது? இங்க வந்துருச்சுல்ல... இங்குட்டே தான் இருக்கும். குறிப்பு அருமை.. செய்துட்டு நாங்களும் படங்காட்டுவோமாக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க‌ முதல் பேராவில் பேசுறமாதிரியேதான் , நான் சின்ன‌ வயசில‌ எங்க‌ தாத்தாவிடம் பேசுவேன்! பாதி வார்த்தை அப்படியே உள்ளுக்குள் மாட்டிக்கும்! தாத்தான்னா அவ்வளவு பயம்!

உருண்டை வடிவில் எது இருந்தாலும் அது எங்களுக்கு போண்டாதான்!

மழைக்கு இதமான‌ உங்க‌ சோயா போண்டா குறிப்பு சூப்பர்!

உங்க‌ அடுக்குமல்லியைப் பார்த்தவுடனே, எனக்கு வாசனை இங்குவரை வருது!

ரோஜாவில் வண்ணத்துப்பூச்சி அருமை!

;)) சூப்பர் வசனம். சூப்பர் சமையல் குறிப்பு. படிச்சுட்டு இருக்கிறப்பவே சைட்ல சந்தேகம் ஓடிட்டு இருந்துது... பூவுக்கும் பூச்சிக்கும் கட்லட்டுக்கும் என்ன தொடர்புன்னு. மல்லிகைப்பூ இட்லி போல மல்லிகைப்பூ கட்லட்டா இருக்குமோன்னு நினைச்சேன். :-)

‍- இமா க்றிஸ்

வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்!! ... நானுலாம் சாப்பிடும் போது பேசுறதே குறைவு தானுங்.. ஏன்னா கேக்குறீங்க‌..? ஆமா சாப்பிடும் போது பேசுனா அதுக்குள்ள‌ சோயா வடைய‌ இங்கன‌ இருக்குறவங்க‌ ஆட்டய‌ போட்டுட்டா என்ன‌ செய்ய‌ அதுக்குதானுங்..:)

அக்கா அடுக்குமல்லி எனக்கு ரொம்ப‌ பிடிக்கும்.. ஆனா இப்பொ நான் இருக்குற‌ வீட்டு பக்கம்லாம் பாக்கவே முடியதுறது இல்ல‌ .. இதுக்குனே மாமாவ‌ படப்பை (மல்லிக்கு பேமஸ் ஊர்) ல‌ இருந்து வாங்கிட்டு வர‌ சொல்லி நட்டு இருக்கேன் .. என் வீட்ல‌ இல்ல‌ மாமா வீட்ல‌.. ;)

பூத்ததும் நானும் படம் புடிச்சு போடுவேனே பவ் பவ்... :)

இப்போதைக்கு வடையை விட்டுட்டு பூவை நான் சுட்டுனு போறேன்.. நல்ல‌ பதிவு

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வசனம் , ரெசிபி ,பூ எல்லாமே சூப்பர். நான் இமாம்மா வை வழிமொழிகிறேன்.

Be simple be sample

நிகி மிகவும் மென்மையான பலகாரம்தான் இது. அடுக்கு மல்லி வெச்சு நாளாச்சு இப்பதான் 4 பூ பூத்துச்சு.
//போயிட்டு வரோமுங்க‌....// அதென்ன வந்த கால்லயே போய்ட்டு வாரம்ங்கிறீங்க. இருங்க ரெண்டு நாள் கழிச்சு போனாப்போவுது :)))) மிக்க நன்றி
நிகி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

செய்து பார்த்துட்டு சொல்லுங்க. கருத்துக்கு மிக்க நன்றி வனி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அனு பள்ளி நாட்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் இல்லாத மாறுவேடப்போட்டியே இருக்காது.
//ரோஜாவில் வண்ணத்துப்பூச்சி அருமை!// அது ரோஜா அல்ல, செடியில் இருக்கும் அடுக்கு மல்லிதான் :)) மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

இமா //பூவுக்கும் பூச்சிக்கும் கட்லட்டுக்கும் என்ன தொடர்புன்னு. மல்லிகைப்பூ இட்லி போல மல்லிகைப்பூ கட்லட்டா இருக்குமோன்னு நினைச்சேன். :-)//

கட்லெட் செய்து இப்படி பூவை இரசித்துக்கொண்டே சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகமாகும் என்ற கருத்தை குறிப்பினால் கூறியுள்ளேன், குறிப்பறிந்து கருத்துகொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க இமா :))). போட்டோ போடும் ஆப்சனை ஏன் விடுவானேனு, பூவை இட்டு நிரப்பிட்டனோனு நினைச்சீங்களா? :)))))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கனி ஆட்டையப்போட்டாலும் நொடிப்பொழுதில் செய்யும் குறிப்புதான் இது. அதுனால சீக்கிரம் செய்து சாப்பிட்டிடலாம் :))
படப்பை மல்லிகைசெடியா, நல்லா இருக்குமா? அட இதப்பாருங்கப்பா, ஓகே ஓகே, செடி வளர்ந்த உடனே போட்டோ போடுங்க. பூவை சுடாதீங்க, சூடிக்கோங்க :))) மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

ரேவ் வருகைக்கும் வழிமொழிதலுக்கும் மிக்க நன்றி :))))

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு அருள்,

மழை நேரத்துல, சுடச் சுட எது கொடுத்தாலும் சாப்பிடுவோம். நீங்க சத்தானதாகவும் குறிப்பு கொடுத்திருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

//மழை நேரத்துல, சுடச் சுட எது கொடுத்தாலும் சாப்பிடுவோம்// அன்பு சீதாமேடம் நீங்கள் மழைக்காலத்தில் கொடுத்த பின்னூட்டத்திற்கு, வெயில் காலம்வரை நன்றி சொல்லாமல் இருந்ததற்கு மன்னியுங்கள்!.
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி :).

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.