கேக் - 6 / 9 (தொடர்ச்சி)

இந்தக் குறிப்பிற்கான முதற் பகுதி இங்கே --> http://www.arusuvai.com/tamil/node/29710
~~~~~~~~~~
இனி தொடர்ச்சி...

வட்டக் கேக்கின் உள் வட்டத்தை வெட்டி நீக்கவும். (கடதாசியில் வரையும் போது க்ளாஸிற்குப் பதில் வெற்று பால்டின் பயன்படுத்தினால், பிறகு அதையே கேக் மீது வைத்து அழுத்த அழகாக வெட்டி விடும்.)

இப்போது கிடைத்திருக்கும் வளைய வடிவ கேக்கை சரி பாதியாக வெட்டவும்.

கடதாசியில் வெட்டி வைத்துள்ள இலக்கத்தின் காம்புப் பகுதியை சதுர கேக்கின் மேல் வைத்து கேக்கை வெட்டிக் கொள்ளவும்.

அனைத்துத் துண்டுகளையும் கேக் போர்ட்டில் உரிய விதத்தில் வைத்துவிடவும்.

இனி, ஒரு அரை வட்டக் கேக் துண்டை மட்டும் எடுத்து, அதன் உள் வட்டத்தின் உள்ளே, ஐதாக்கி வைத்திருக்கும் கோல்டன் சிரப்பைப் பூசிக் கொண்டு மெல்லிதாக ஐஸிங் வைக்கவும். இந்த நிலையில் க்ரம்ஸ் வெளியே தெரிந்தால் பரவாயில்லை. (பாலட் நைஃபோடு ஒட்டி வரும் க்ரம்ஸ் திரும்ப பாத்திரத்தில் உள்ள ஐஸிங்கில் கலந்துவிடாமல் மட்டும் பார்த்துக் கொள்ளவும்.) இதனை உடனே கேக் போர்ட்டின் மேல் வைக்க வேண்டாம்.

சில நிமிடங்கள் கழித்து சுத்தமான பாலட் நைஃபால் மீண்டும் இரண்டாவது முறை ஐஸிங் பூசவும். கேக்கைப் பொருத்தி விட்டால் பிறகு இந்த இடத்தைச் சரி செய்வது சிரமம் ஆதலால் இப்பொழுதே சீராகப் பூசி முடித்துவிடவும்.

அடியில் சிறிது ஐஸிங் தடவி போர்டில் ஒட்டவும். இதே போல இரண்டாவது பாதி வட்டத்திற்கும் ஐஸிங் பூசி, இரண்டு பாதிகளும் பொருந்தும் இடங்களிலும் அடியிலும் ஐஸிங் தடவி சரியான இடத்தில் ஒட்டிவிடவும்.

மெல்லிய நீள பாலட் நைஃப் (no - 4) கொண்டு உள் வட்டத்தில் ஐஸிங் பொருந்தும் இடங்களை மட்டும் சரி செய்யவும்.

இனி எண்ணின் மீதிப் பகுதியை ஐஸிங் கொண்டு இதனோடு ஒட்டினால் 6 அல்லது 9 வடிவில் அடிப்படை கேக் தயார்.

கேக் வட்டம், நடுவில் மேடு தட்டி இருந்தாலோ, அதனை விட தண்டுப் பகுதி உயரமாக இருந்தாலோ சமப்படுத்த வேண்டியது இல்லை. தட்டையாக இருப்பதை விட இது அழகாக இருக்கும். 9 க்கு தண்டு வட்டத்திலிருந்து சரிந்து இறங்கினாற் போலும் 6 க்கு ஏறினாற் போலும் அமைந்தால் கேக் முடிவில் அழகாக இருக்கும்.

இலக்கத்தின் மேலும் சுற்றிலும் ஐதாக்கி வைத்த கோல்டன் சிரப்பைத் தடவி, ஒரு முறை ஐஸிங் தடவவும்.

சற்று நேரம் விட்டு மீண்டும் இரண்டாவது பூச்சு வைத்து சீராக்கிவிடவும். இனி போர்ட்டை சுத்தம் செய்துகொள்ளலாம்.

க்ளிங் ராப் ஒரு சிறு துண்டு எடுத்துக் கசக்கிப் பிடித்து, அதனை ஐஸிங் மேல் ஒற்றி ஒற்றி எடுத்தால் அழகான மேற்பரப்புக் கிடைக்கும்.

முகம் பார்க்கும் கண்ணாடிக்கு - லாலிபாப்பின் உறையை எடுத்து விட்டு சில்வர் கடதாசி சுற்றி வைக்கவும். இதை கேக்கின் மேல் வைத்த பின்னால், குச்சியின் மேல் கைபிடி போல பொருத்தமான நிற ஜெல் கொண்டு வரையவும். கண்ணாடியின் வெளி வடிவத்தையும் விரும்பியவாறு வரைந்துகொள்ளவும்.

தோடு & பெண்டன்டுக்கு - 5 வெள்ளி முத்துக்கள் வைத்து மேலே நடுவில் ஒரு முத்து, ஐஸிங் வைத்து ஒட்டவும்.

இதே போல மாலை ஒன்றும் வைத்து விடவும்.

பிங்க் நிற ஜெல் கொண்டு ஆங்காங்கே சிறிய பூக்கள் வரைந்து நடுவில் பொருத்தமான ஏதாவது ஒரு நிறத்தில் ஒவ்வொரு மணி (100's 1000's) இடுக்கியைக் கொண்டு வைத்து முடிக்கவும்.

9 செய்வதாக இருந்தால் இதையே தலைகீழாகத் திருப்பி வைத்து, அதற்கு ஏற்றாற்போல் லாலிபாப் கண்ணாடியை வைத்து அலங்கரிக்கவும்.

விளக்கினேனா குழப்பினேனா என்று எனக்கே புரியவில்லை. :-) செய்து பார்க்க நினைப்பவர்கள், ஏதாவது புரியாவிட்டால் கேளுங்கள். தெளிவாக வரும் விதமாகத் திருத்தி விடுவேன்.

5
Average: 5 (5 votes)

Comments

கேக் - 6 / 9 ரொம்ப‌ அழகா இருக்கு.. தெளிவான‌ விளக்கத்துடன் .
எனக்கு புரிஞ்சுது...
ஆனா இவ்வளவு பர்ஃபெக்ட்டா லாம் நான் செய்தா வருமானு தெரியல‌... :(
பொறுமை கடலினும் பெரியதோ ... இத மட்டும் கத்துக்கிட்டே ஆகணும்..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நல்லா இருக்கு :) போன ஞாயிறு ஒரு லன்சுக்கு இன்வைட் வந்தது, marriott’ல. அங்க ஒரு குட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் போச்சு. ஒரு மேக்கப் செட், அது முன்னாடி லிப்ஸ்டிக் அது இதுன்னு சின்ன ஐட்டம் எல்லாம் வெச்சு ஒருவர் தள்ளிகிட்டு போனார்... அதன் அவங்க கட் பண்ணும்போது தான் அது கேக் என்றே தெரிந்தது :) பார்த்ததும் உங்க நினைவு தான் வந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேக் ரொம்ப அழகா இருக்கு.எனக்கு கேக் என்றாலே மிகவும் பிடிக்கும்.பார்த்தவுடனே அப்படியே சாப்பிடணும்னு தோணுது.ஆனா முடியலையே.....

எல்லா புகழும் இறைவனுக்கே

இமாம்மா எனக்கும் கேக் என்றால் ரொம்ப பிடிக்கும். .
இமாம்மா வீடு பக்கத்தில் இருந்தால் ஓடி வந்து எடுத்துவிட்டு வந்துடுவேன். ......முடியாதே.....¿¿¿¿¿¿¿¿¿

அன்பு தோழி. தேவி

மிக்க நன்றி வனி.
//ஒரு மேக்கப் செட்... லிப்ஸ்டிக்// அது தான் என் ப்ளான். எதிர்பாராமல் முதல் நாள் விருந்தினர் வந்தாங்க. காலை ஸ்கூல். இது அன்பளிப்பு தான். பிறந்தநாள் வீட்டாருக்கு நான் செய்தது தெரியாது. எதிர்பார்த்து ஏமாற மாட்டாங்க என்பதால் எப்படி வேண்டுமானாலும் முடிக்கலாம் என்கிற சுதந்திரம் இருந்தது. இப்படி முடித்தேன்.

‍- இமா க்றிஸ்

//எனக்கு புரிஞ்சுது...// ;) அது போதும் எனக்கு. :-) //இவ்வளவு பர்ஃபெக்ட்டா லாம் நான் செய்தா வருமானு// சீக்கிரம் எல்லாம் வரும், காலம் வரும் போது எல்லாமே தானா வரும். ;)

‍- இமா க்றிஸ்

:-) //ரொம்ப அழகா இருக்கு.// சாதாரணம் தான். இப்போ வீட்டில் யாருக்கும் கேக் செய்ய சந்தர்ப்பம் அமைவது இல்லை. என் ஆசைக்கு அரையும் குறையுமாக ஐஸ் செய்து யாருக்காவது அன்பளிப்பாகக் கொடுத்து வைக்கிறேன். :-)

‍- இமா க்றிஸ்

//முடியாதே// அனுப்பி வைக்கட்டுமா! :-) நன்றி தேவி.

‍- இமா க்றிஸ்

ஊர்ல‌ இருக்கும்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அடிக்கடி பார்ப்பேன்! அதில் ஒரு குழுவாக‌ சேர்ந்து விதம் விதமான‌ கேக்குகள், வாடிக்கையாளர்கள் எப்படி கேட்கிறார்களோ, அதுபோலவே செய்து அசத்துவார்கள்!

ஒரு தோட்டம், அடுக்கிய‌ புத்தகங்கள், உலக‌ உருண்டை இன்னும் என்னென்னவோ! அவர்கள் எந்த‌ தீம் அடிப்படையில் கேட்க்கிறார்களோ! அது போலவே செய்து கொடுப்பார்கள்! பார்க்கும்போதே அவ்வளவு ஆச்சர்யமாக‌ இருந்தது! கேக் சாப்பிட‌ மட்டுமே தெரிந்த‌ எனக்கு, இப்படியெல்லாம் கேக் செய்ய‌ முடியும் என்பதே அந்த‌ நிகழ்ச்சியின் வாயிலாகத்தான் தெரிந்தது!

ஒரு தனி ஆளாக‌ நீங்கள் இவ்வளவு புதுமைகள் செய்து அசத்தும்போது, ஒரு குழுவாக‌ அவர்களுக்கும் அது சுலபம்தான்னு இப்பதான் புரியுது! :))))

கேக் ரொம்ப அழகா இருக்குங்.
தெளிவான விளக்கங்கள் அருமைங் :-)

நட்புடன்
குணா

எனக்கு கேக் மட்டும் குடுத்துடுங்க.

Be simple be sample

இமா உங்களுக்குள் எவ்வளவு திறமை என் கன்னே பட்டுடும்போல சுத்திபோடுங்க.கேக் அருமையாயிருக்கு சாப்பிட்டா இன்னும் நல்லாதான் இருக்கும்.தேவி சொல்ராபோல பக்கத்துவீடு இமா வீடாயிருந்துயிருக்ககூடாதா வாழ்த்துக்கள்.உங்களுக்கு நீன்ட ஆயுளை ஆன்டவன் கொடுக்கனும் நீங்க இதுபோல பலசாதனைகள் செய்யனும்.எங்களுக்கெல்லாம் யோசனை சொல்லனும்.நான் உங்களுக்காக இறைவனை வேன்டுகிறேன்

இதுவே தொழில் என்று இருந்தால் இன்னும் அதிகம் பொழுது இருக்கும்; உபகரணங்கள், விஸ்தாரமாக இடம் என்று இருக்கும். எது வேண்டுமானாலும் செய்யலாம். எனக்கு இது பத்தோடு பதினோராவது வேலைதான். அதனால் அதிகம் மெனக்கெடுவது கிடையாது. நிச்சயம் கேக் அலங்காரம் ஒரு பெரிய விடயமே இல்லை. முயற்சி செய்து பாருங்கள் அனு.

//ஒரு குழுவாக‌ // பெரிய ஸ்ட்ரக்ஷர்களுக்கு குழுவேலைதான் சிறந்தது. அல்லாவிட்டால் பல நாட்கள் முன்பிருந்தே ப்ளான் செய்து ஆரம்பிக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

:-) //தெளிவான விளக்கங்கள் // ம்... அப்ப சீக்கிரமே குணா கேக் செய்யப் போறீங்க! எங்க வீட்ல க்றிஸ், அலன் இரண்டு பேரும் ஓரளவுக்கு கேக் & ஐஸிங் செய்வார்கள். குணாவும் ட்ரை பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

:-) ரேவதியின் அடுத்த பிறந்தநாளுக்கு அனுப்பி வைக்கிறேன். :)

//கன்னே பட்டுடும்போல சுத்திபோடுங்க.// ;) எனக்கு யார் கண்ணும் படாது. :-) எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை நிசா. //பலசாதனைகள் செய்யனும்.// அவ்வ்! ;)) இது சாதனையா! ஒழுங்கா வந்திருந்தா நேரே அறுசுவை குறிப்பாக வந்திருக்கும். இது... சொதப்பல். :)

உங்கள் அன்பான கருத்துக்கு என் நன்றிகள் நிசா.

‍- இமா க்றிஸ்

கேக் நல்லாருக்கு.:)
ஆனால், எனக்கு இந்த‌ ஃபீல்டு பரிச்சயம் இல்லை:(

அன்பு இமா,

உங்க கைவண்ணத்தில் கேக் பாத்து, ரசிச்சுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. சூப்பர்.

அன்புடன்

சீதாலஷ்மி

வெரி நைஸ் இமா,
என் மகள் மொபைலில் இதைப் பார்த்து விட்டு அவள் பிறந்த நாளுக்கு நம்பர் கேக் செய்யும் படி கேட்கிறாள். எனது ஐஸிங்க் டூல் எல்லாம் ஸ்டோரேஜ்க்கு போய் விட்டது. எப்படியோ சமாளித்தாக வேண்டும்.

//ஃபீல்டு பரிச்சயம் இல்லை.// சின்ன வயசுல எங்க அப்பாவும் அம்மாவும் கெரசின் குக்கர்ல க்றிஸ்மஸ் கேக் போடுவாங்க. பதின்மூன்று வயசுல முதல் கேக் ஐஸ் பண்ணேன். அப்பா க்ளேஸ் ஐஸிங் சொல்லிக் கொடுத்தாங்க. நிறைய ஹொலி வரைஞ்சு ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்கு அனுப்பினோம்.
சிரமம் எதுவும் இல்லை நிகி. வீட்டுக்கு தேவை வரும்போது கடைல வாங்காம நீங்களே ட்ரை பண்ணுங்க. பிறகு மெதுவே பரிச்சயம் ஆகிரும்.

அன்பு சீதாவுக்கு... இது வெகு சாதாரணம்தான். அறுசுவையில் குறிப்பாக வரும் அளவு தரமாக இராததால்தான் இங்கே வந்ததே. :-))

ஹாய் வாணி, ஒரு சாலஞ்சா... 'ஐஸிங்க் டூல்'' இல்லாம கிடைக்கிற கட்லரியை வைச்சு ட்ரை பண்ணிப் பாருங்க. சூப்பர் ஐடியாவோட ஒரு வலைப்பதிவும் தேறும். :-)

சகோதரிகள் மூவருக்கும் என் அன்பு நன்றிகள். :-)

‍- இமா க்றிஸ்