உடல் பருமன் அதிகரிக்க

NAA ROMBA OLLIYA IRUKEN. PLEASE YARAVATHU ENNODA உடல் பருமன் அதிகரிக்க UTHAVUNGALEN

மொகமட்... பருமன் அதிகரிக்கும் போது அதோடு கூடவே எடையும் அதிகரிக்குமே! வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்கும். ஒரு தடவை கூட ஆரம்பித்தால் பிறகு குறைப்பது சிரமம்.

ஒல்லி என்பதை விடுங்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இருக்கிறீர்களா? அப்படியானால் இப்படியே விட்டுவிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களுக்கு உதவும் என்று இது.... http://www.arusuvai.com/tamil/node/14527

அல்லாமல் பருமனாக வேண்டும் என்று நினைத்தால்... அது வெகு சுலபம். இஷ்டத்துக்கு கண்ணில் பட்டதையெல்லாம் சாப்பிடலாம். வயிறு நிறைய சாப்பிடலாம். டீவீ, கம்ப்யூட்டர் என்று அதிக நேரம் இருக்கலாம். :-)

உணவின் அளவைக் கூட்டுவது தான் ஒரே வழி. மிகவும் கவனமாக இதைக் கொண்டு போக வேண்டும். இனிப்பு, கொழுப்பு உள்ள பொருட்கள்... ஓரவுக்கு மேல் போகாமல் இருக்கட்டும். விரும்பிய நிறையை அடைவதற்கு சிறிது முன்பாகவே பழைய உணவு முறைக்கு மாறிவிடுங்கள். அல்லாவிட்டால் சிரமம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்