கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் HELP PLEASE

நான் இப்பொழுது 26 கிழமைகள் கர்ப்பமாக இருக்கிறேன். 31 .10 வெள்ளிக்கிழமை urin இல் கொஞஂ சம் sugar இருப்பதாக‌ சொன்னார் . இன்று 04.11 திரும்பவும் 2 மணித்தியாலங்கள் இடைவெளியில் 3 தடவைகள் blood எடுத்து test செய்தார்கள்.
results: 133/ 273 /162. இப்பொழுது இன்சுலின் ஊசி எடுக்கவேண்டியிருக்கும் என்று சொன்னா. கர்ப்பகால‌ சர்க்கரை நோயால் குழந்தைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா ? யாராவது கர்ப்பகால‌ சர்க்கரை நோயுடன் குழந்தைக்கு பாதிப்பெதுவும் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்திருக்கிறீர்களா ? இப்பொழுதிலிருந்து நான் என்ன உணவுகள் பழங்கள் தவிர்க்க‌ வேண்டும் என்னவெல்லாம் தவிர்க்கவேண்டும். எவற்றை சாப்பிடலாம் யோக்க்ற் சாப்பிடலாமா சோறு கிழமைக்கு எத்தனை தடவைகள் சாப்பிடலாம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொத்தமல்லி ,வெந்தயம் சேர்த்து அரைத்ததூள் இட்டு காய்ச்சிய‌ நீர் சாப்பாட்டிற்கு 45 நிமிடம் முன் குடித்துவர ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் குணமாகும் என்று இணையத்தில் படித்தேன் .அதனையும் முயற்சி செய்யலாமா அல்லது இன்சுலின் உடன் அதனை செய்யாமல் விடுவது நல்லதா?எனது எல்லா சந்தேகங்களுக்கும் அவசரமாக‌ பதில் கூறுங்கள் PLEASE.

hai...payappata ventam...pregnancy la sugar sila perku irukum...after delivery normal aagirum...enggaa. sister kum. pregnancy la sugar control illama iruthuchu..then insulin and food mulamaga control panninangga..ippa alagana arokiyamana baby normal delivery la pirantha..ippa baby ku 7 months aaguthi...sugar control illana. baby weight increase aagumnu. solluvangga vera entha pblm illa...neengga sugarra control pannungga fasting la 90 and after food 120 kulla irukura maathiri parthukongga...delivery vara weekly once sugar test veetula parungga...morning wheat items saptalam...afternoon rice 1 cup saptalam neriya vegtables and keerai saptungga...night chappathi saptalam...1cup milk kutikalam....ithu ellam en sister ku dr sonnathu...avalum follow pannuna...pregnancy la koothamali and venthayam potta kai marunthu ellam try pannathengga...fruits la mango and saptathengga...sweet items and oil items avoid pannungga...kantippa payappata kutathu payanthalum sugar increase aagum...before food insulin etuthukongga marakkama...alagana arokiyamana baby pirakka ennoda wishes....

எல்லாம் நன்மைக்கே

//கர்ப்பகால‌ சர்க்கரை நோயால் குழந்தைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா?// பாதிப்பு ஏற்பட நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. பிரச்சினையாகக் கூடாது என்று நினைத்தால் கட்டாயம் மருத்துவர் சொற்படி கேட்டு நடவுங்கள்.

//ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் குணமாகும் என்று இணையத்தில் படித்தேன். படிக்க ஆயிரம் கிடைக்கும். அத்தனையும் நம்பகமானதா என்பது பயன்படுத்தும் வரை தெரியாது. அதே போல அவற்றைப் பின்பற்றுவதால் பாதிப்பு இருந்தாலும் பிறகுதான் தெரிய வரப் போகிறது. //அதனையும் முயற்சி செய்யலாமா அல்லது இன்சுலின் உடன் அதனை செய்யாமல் விடுவது நல்லதா?// வேண்டாம். மருத்துவர் சொன்ன ஆலோசனைகளை மட்டும் பின்பற்றுங்கள். இரண்டையும் சேர்த்துக் குழப்ப வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்