கிட்ஸ் க்ராஃப்ட் - கேஸ்கட் வால்ஹேங்கிங்

தேதி: November 6, 2014

4
Average: 3.8 (4 votes)

 

கேஸ்கட் - ஒன்று
கிச்சன் டிஷ்யூ க்ளாத் - விருப்பமான நிறங்களில்
ரிப்பன் லேஸ் - பிங்க் மற்றும் சிவப்பு நிறம்
ஃபேப்பரிக் பெயிண்ட் - சிவப்பு நிறம்
நியூஸ் பேப்பர்
உல்லன் நூல்
ஃபெவிக்கால்
க்லிட்டர்ஸ்
பெரிய மணிகள்
கத்தரிக்கோல்
ஸ்கெட்ச்
ஸ்ட்ரா
சம்கி

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
படத்தில் உள்ளது போல் கேஸ்கட்டில் சிவப்பு நிற ரிப்பன் லேஸை இடைவெளிவிட்டு சுற்றி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
பிறகு அந்த இடைவெளியில் பிங்க் நிற ரிப்பன் லேஸைச் சுற்றவும். ஏற்கனவே முடிச்சுப் போட்ட இடம் வரை சுற்றி வந்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
நியூஸ் பேப்பரை குச்சி போல மெல்லியதாகச் சுருட்டி ஃபெவிக்கால் வைத்து ஒட்டிக் கொள்ளவும். அதன் மேல் சிவப்பு நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடிக்கவும்.
படத்தில் உள்ளது போல் கேஸ்கட்டில் லேஸை முடிச்சுப் போட்ட இடத்திற்கு அருகில் நியூஸ் பேப்பரில் செய்த குச்சியை வைத்து, ரிப்பன் லேஸால் நன்கு இறுக்கமாகக் கட்டிவிட்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
கிச்சன் டிஷ்யூவில் 4 இதழ் கொண்ட பூ வடிவம் வரைந்து 6 துண்டுகள் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். (இதில் 4 மஞ்சள் நிறத்திலும், 2 பிங்க் நிறத்திலும் நறுக்கி வைத்துள்ளோம்).
ஓவ்வொரு பூவின் நடுவிலும் பெரிய சம்கியை ஒட்டி, பூவின் ஓரத்தில் கோல்டு, சில்வர் நிற க்லிட்டர்ஸால் அவுட் லைன் கொடுக்கவும். பூவின் உள்ளே படத்தில் உள்ளது போல் டிசைன் செய்து கொள்ளவும்.
ஒரு ஸ்ட்ராவை இரண்டாகவும், மற்றொரு ஸ்ட்ராவை நான்காகவும் நறுக்கி வைக்கவும். பிங்க் நிற பூவின் பின்புறத்தில் ஃபெவிக்கால் வைத்து, நான்காக நறுக்கிய ஸ்ட்ராவை படத்தில் உள்ளது போல் ஒட்டிக் கொள்ளவும்.
கேஸ்கட்டில் கட்டி வைத்துள்ள நியூஸ் பேப்பர் குச்சியின் நடுவில் ஒரு முழு ஸ்ட்ரா அளவுக்கு உல்லன் நூலை எடுத்து முடிச்சுப் போட்டு வைக்கவும். இதே போல் அதன் இரு முனைகளிலும் உல்லன் நூலைக் கட்டி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
நடுவில் உள்ள உல்லன் நூலில் நான்காக நறுக்கிய ஸ்ட்ராவில் ஒன்றைக் கோர்த்து, பிங்க் நிற பூவில் ஒட்டி வைத்திருக்கும் ஸ்ட்ராவைக் கோர்க்கவும். இதே போல் நான்காக நறுக்கிய மற்றொரு ஸ்ட்ராவைக் கோர்த்து, அதன் பிறகு பிங்க் நிற பூவைக் கோர்க்கவும். அதன் இருமுனையிலும் இரண்டாக நறுக்கி வைத்துள்ள பெரிய ஸ்ட்ராவைக் கோர்த்து, இரு முனைகளிலும் ஃபெவிக்கால் வைத்து 2 மஞ்சள் நிற பூவை ஒட்டிவிடவும்.
ஸ்ட்ராவைத் தொடர்ந்து பெரிய மணியைக் கோர்த்து முடிச்சுப் போட்டுக் கொண்டு, உல்லன் நூலை வெட்டிவிடவும்.
பிறகு அந்த மணிகளின் மேலே ஃபெவிக்கால் வைத்து, மீதமுள்ள மஞ்சள் நிற பூவை ஒட்டிவிடவும். அழகான கேஸ்கட் வால்ஹேங்கிங் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

கிட்ஸ் க்ராஃப்ட் - கேஸ்கட் வால்ஹேங்கிங்... குட்டிஸ் மாதிரியே ரொம்ப‌ கியுட்டா இருக்கு.. ரயார் ஐடியா இது.... நவீனா ஐடியா வா... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சூப்பரா இருக்கு. பூக்களைக் கோர்க்க பேப்பர் ஸ்ட்ரா ஐடியா அருமை.

‍- இமா க்றிஸ்