
கதையின் முதல் பாகம் செல்ல _ http://www.arusuvai.com/tamil/node/29635
கதையின் இரண்டாம் பாகம் செல்ல _ http://www.arusuvai.com/tamil/node/29672
கதையின் மூன்றாம் பாகம் செல்ல _ http://www.arusuvai.com/tamil/node/29726
விடாமல் அடிக்கும் டெலிஃபோனை வித்தியாசமாய் பார்த்தபடியே எடுத்தாள் நிதர்ஷனா. ஹாய் ராஜீவ் அங்கிள், ஹவ் ஆர் யூ? அண்டு மை பேரண்ஸ்?
ராஜீவ் சொன்ன சொற்களில் செய்வதறியாமல் நடுங்கும் அவளைக் கண்டு ரிசீவர் வாங்கிய சஞ்சய் விஷயம் கேட்டதும் இப்பவே புறப்படறோம் அங்கிள் என்று வைத்தான் ரிசீவரை.
எமர்ஜன்சியில் டிக்கெட் புக் செய்துவிட்டு, கிளம்பும் முன் அக்கடிதத்தை மறவாமல் எடுத்துக்கொண்டான் சஞ்சய்.
விமானத்தில் கடிதத்தை படிக்கவிடாமல் தடுக்கும் கண்ணீர் திரையுடன் தேம்பி அழுதவளை தேற்ற வழிதெரியாமல் சேர்த்து அணைத்துக்கொண்டு சத்தமில்லாமல் அழுதான்.
ஜானகிக்கு முதலுதவி செய்துவிட்டு கெளதமை சமாதானம் செய்தான் ராஜீவ்.
நானும் டாக்டரா இருந்து என்னடா பண்றது? எத்தனையோ பேருக்கு உதவின எனக்கும் ஜானுவுக்கும் இப்படியா வரனும்? யாருக்கும் கெடுதி நினைக்காத இவளுக்கு ஏன்டா இப்படி ஆச்சு? பாருடா பாருடா அவள எப்படி பேசாம டியூப்களுக்கு நடுவுல படுத்திருக்கா பாருடா?
நான் மட்டும் ஃபோன் பண்ணாம இருந்திருந்தா என் ஜானு இப்படி கண் திறக்காம படுத்திருப்பாளா? தான் ஒரு டாக்டர் என்பதையும் மறந்து வாய்விட்டு கதறும் நண்பனைக் கண்டு கலங்கினான் ராஜீவ்.
பேசியபடி வண்டி ஓட்டியதால் விபத்தில் சிக்கி மூளை நரம்பு துண்டான நிலையில் கிடக்கிறாள் ஜானகி.
மறுநாள் மதியம் நித்திரையிலேயே நிதானமாய் பிரிந்தது அவள் உயிர்.
என் ஒவ்வொரு செயலிலும் நிழலாக என்னுடன் இருந்தாயே ஜானு, என்னை விட்டுப் போவதை மட்டும் ஏன் சொல்லவில்லை? துயரம் தாங்காமல் வெடித்து சிதறும் தன் தந்தையை கண்டு துடிதுடித்துப்போனாள் நிதர்ஷனா.
ராஜீவும், சஞ்சையும் நடக்க வேண்டியதை கவனித்தனர்.
" மாலையோடு வந்தவளுக்கு
ஆசிவழங்காத பெற்றோர்,
மகிழ்ந்து வாழ்வதை
காணாத பெற்றோர் _ வந்தனர்
மாலையுடன் அவள்
மரணப்படுக்கையில்
கிடக்கும்பொழுது..."
மாப்பிள்ளை நீங்க நல்லா வாழ்ந்தப்ப நாங்க பார்க்கவில்லை, என் பொண்ணை அப்ப நினைக்கவில்லை. இப்ப அவளின் இறுதி சடங்காவது எங்கள் இஷ்டப்படி நடத்தனும் _ ஜானகியின் பெற்றோர்.
அதெப்படி, எப்ப அவ எங்கவீட்டுக்கு வந்துட்டாளோ அப்பவே எங்கவீட்டு பொண்ணாவே ஆகிட்டா. எங்க முறைப்படிதான் எல்லாம் நடக்கும் என கெளதம் வீட்டு ஆளுங்களும் சொல்ல கெளதமோ அமைதியாய் அழுதான் செய்வதறியாமல்.

அங்கிள் இந்தாங்க அம்மா எழுதிய லெட்டர், இதில் இருக்கும்படிதான் அனைத்தும் செய்யனும் என அம்மா விருப்பப்பட்டிருக்காங்க, அப்படியே செய்யலாம் தழும்பும் குரலில் சொல்லும் நிதர்ஷனாவை அனைவரும் பார்த்தனர். கடிதத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தான் ராஜீவ்.
கடிதத்தில்,
அன்பு மகளுக்கு உன் அன்னை எழுதுவது, என்னடா அம்மா புதுசா லெட்டரெல்லாம் எழுதியிருக்கான்னு யோசிக்கறயா? அவசியம்னு பட்டுதுடா அதனாலதான். கொஞ்ச நாளாவே என் மனசுக்குள்ள ஏதோ இனம் புரியாத பயம், சஞ்சலமும் வந்திட்டேயிருக்கு.
இதுவரை உன் அப்பா நானில்லாமல் எந்த விஷயமும் செய்ததில்லை. அவர் எனக்கு எந்த குறையும் வைத்ததில்லை, உன் மேல எங்களுக்கு பாசம் அதிகம்டா, இப்ப சஞ்சய் மேலயும்.
உன் திருமணத்திற்குப் பிறகு தனிமையை ரொம்ப உணர்ந்தோம். ஒருவேளை கெளதமை விட்டு நான் செல்ல நேர்ந்தால், நான் குறிப்பிடுவதுபோல செய்திடுங்கள்.
சஞ்சய் என் மகளை மட்டும் உன்னிடம் விட்டுச் செல்லவில்லை நான் என் கெளதமையும் சேர்த்து பார்த்துக்கொள்வது உன் கடமைப்பா.
ராஜீவ் அண்ணா உங்களுக்கு எதுவும் சொல்லத்தேவையில்லை. அவர் மீது உள்ள அன்பை பல தருனங்களில் உணர்ந்துள்ளேன் உங்களிடம்.
என் சுயநினைவில் இதை எழுதுகிறேன், என் இறப்பிற்கு பிறகு உடலில் சரிவர உள்ள பாகங்களை தானம் செய்துவிடுங்கள் அண்ணா, எனது உடலை நாம் படித்த சேனட்டோரியம் மருத்துவ கல்லூரிக்கு ஆய்வுக்காக கொடுத்திடுங்க.
" என் கெளதம் விரும்பிய என் இதயம், என் கெளதமை விரும்பிய என் இதயத்தை மட்டும் அவருக்கே பரிசளிக்கிறேன்..."
அம்மா, அப்பா என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள், என் கெளதமை துன்புறுத்தாதீர்கள்.
கெளதம் நானின்றி உங்களுக்கு எதுவும் செய்யத்தெரியாதே... அதனால் தான் நானே இம்முடிவை எடுத்தேன். தனியா முடிவெடுத்ததற்கு மன்னிச்சுடுங்க. ஆனால் இதில் உனக்கும் சம்மதம் என்றே நம்புகிறேன்.
" நமது தூய இல்லறத்தின்
உயிரோவியமாய்
நிதர்ஷனா வாழ்கிறாள்...
நமது இத்தனைகால நேசிப்பில் _ எனது
முதல் பரிசாகத் தருகிறேன்
எனது இதயத்தை...
இரு உருவமாய்
வாழ்ந்த நாம் _ இனி
ஓர் உருவமாவோம்...
கெளதம் நீ என்றும்
தனிமையில் இல்லை
என்றும் உன்னுடன்
நான் இருக்கும் வரை..."
கடிதத்தை உறக்கப்படித்து முடித்தான் ராஜீவ்,
மயான அமைதி இதுதானோ என்பதுபோல நீடித்தது அமைதி... சஞ்சய் நிதர்ஷனாவை தந்தையிடமிருந்து அழைத்து சென்றான்.
ஜானகியையே வெறித்துப் பார்த்திடும் கெளதமின் தோளைத் தொட்டான் ராஜீவ்... பித்துப் பிடித்தவனைப் போல பார்த்தான் அவன்.
மருத்துவமனை சிப்பந்திகள் வந்தனர், அழுது கொட்டிடுடா இந்த அமைதி ஆகாதுடா கதறினான் ராஜீவ், பிணாத்திட ஆரம்பித்த கெளதமின் வாய்கள் கதறி விழுந்து அழுவானென யாரும் நினைக்கவில்லை. ஜானகியின் உடலைத் தூக்கினர்.
இருந்தவரை நல்ல வாழ்க்கைத் துணையானாள், இறந்த பிறகும்
""இதயத்தால் பேசுகிறாள்"" என்ன பெண்ணிவள்?
ராஜீவ் நான் விரும்பிய, என்னை விரும்பிய உயிர், துணை போகுதுடா, நிதர்ஷனா அம்மா என்னவிட்டுட்டு போறாடா, என்னையும் கூட்டிட்டு போகச்சொல்லுடா, ப்ளீஸ் யாராச்சும் சொல்லுங்களேன், எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு.
ராஜீவ் அவளில்லாமல் நான் எப்படிடா இருப்பேன்? என கதறும் அவனை ராஜீவ் மட்டுமல்ல சமாதானம் செய்யத் தெரியாமல் திகைத்து நின்றனர் ஒவ்வொருவரும்.
கெளதம் நீ தனியா இல்லை நான் உன்னுடனே இருக்கேன், ஜானகியின் குரல் அவன் இதயத்தில் இருந்து கேட்டது அவனுக்கு மட்டும்...
"இதயத்தால் பேசுகிறாள்"
_ முற்றும்
Comments
அனைவருக்கும் நன்றிகள்,
என் முதல் தொடர்கதைக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றிகள். "இதயத்தால் பேசுகிறாள்" தொடர்கதை இங்கே முடிகிறது. மீண்டும் அடுத்தவாரம் புதிய தொடர்கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.
ரேணு
//கெளதம் நீ தனியா இல்லை நான் உன்னுடனே இருக்கேன், ஜானகியின் குரல் அவன் இதயத்தில் இருந்து கேட்டது அவனுக்கு மட்டும்...
"இதயத்தால் பேசுகிறாள்"//
இந்த வரி சும்மா 'நச்'சுனு இருக்கு. சூப்பர் ரேணு.:)
ரேணுகா அக்கா
அடடே அதுக்குள்ள முடிஞ்சிடுத்தே சூப்பரா இருந்தது தொடர், முடிவு தான் மனசு கஷ்டமாயிட்டு ஒரு கதையோ நாவலோ ஒரு மனிதனின் உணர்வுகளை கிளறுமேயானால் சலனபடுத்துமேயானால் அதில் தான் அக்கதையின் முழு வெற்றியிருக்கிறது முடிவு என் உணர்வுகளை சுட்டது மனதை கலங்க வைத்தது, தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்
ரேணுகா மேடம்
கதையில் இடையிடையே வரும் கவிதைகள் சோகத்தை அதிகமாக்கும்படி இருக்குங்க.
பெயருக்கேற்ற முடிவை கதையில் கொண்டுவந்திருக்கீங்க.
கதை படிக்கையில் சோகமாக தோன்றினாலும் ரொம்ப நல்லாயிருக்குங்க.
அடுத்த தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் :-)
நட்புடன்
குணா
ரேணுகா
:( ஏன் ஏன் ஏன்?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Superb Renu!!
அன்பு ரேனு, உங்கள் கதை மிகவும் அருமை!! எனக்கு மறுபடியும் ஒரு காதலெனும் ஜீவ நதி படித்த திருப்தி!! வாழ்த்துக்கள்!! இன்னும் இது போல் நிறைய எழுத வாழ்த்துக்கள்!!
எதிர்பார்க்காத முடிவு....
எதிர்பார்க்காத முடிவு.... இதயத்தால் பேசுகிறாள்... இதயத்தில் நின்றவள்
நிகி,
மிக்க நன்றி நிகிலா, கதையை தொடர்ந்து படித்து பதிவிட்டமைக்கு :)
பெனாசிர்,
மிக்க நன்றி வருகைக்கும், கருத்துக்கும். தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன் உங்கள் அனைவரின் ஆதரவுடன்.
ரேணு
கொஞ்சம் சோகமான முடிவு. சோகமும் சுகமானது. தொடர வாழ்த்துக்கள்.
Be simple be sample
இதயம் பேசியதே
சூப்பர்.. ரேணுகா சிஸ்டர் ரொம்ப அழகா இருந்தது தொடர். நாளே பாகத்துல முடிச்சிட்டீங்க. சூப்பரா இருந்தது. அடுத்த தொடர சீக்கிரம் ஆரம்பிங்க.
உன்னை போல் பிறரை நேசி.
ரேணு அக்கா, இதயம்
கதை ரொம்ப அழகா இதமா வருடி போகும் போது முடிவில் இப்படி ஒரு சோகம் கஷ்டமா போச்சு...... அது தான் வருத்தம் மத்தபடி அழகான கதை.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
Renuka Rajasekaran
சூப்பர் கதை உள்ளத்தை தொட்டு விட்டது கதையின் முடிவை படித்து முடிந்ததும் ஏதோ கவலை அது மட்டுமின்ரி ஒரு படம் பார்த்த ஃபீலிங்
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே