டாபியோகா கார்ன் பச்சடி

தேதி: November 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

வேக வைத்த டாபியோகா (மரவள்ளிக்கிழங்கு) - ஒரு கப்
வேக வைத்த கார்ன் (மக்காச்சோளம்) - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பற்கள்
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய், கறிவேப்பிலை, கடுகு - தாளிக்க


 

டாபியோகாவை சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மக்காச்சோளத்தை உதிர்த்து வைக்கவும்.
தேங்காயுடன் சீரகம், ஒரு வரமிளகாய், சோம்பு, 5 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயிலுள்ள விதைகளை உதிர்த்துவிட்டு வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வரமிளகாய், கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து சில நொடிகள் வைத்திருக்கவும்.
பிறகு தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வரவிடவும்.
கொதி வந்ததும் மக்காச்சோளத்தைச் சேர்த்து, 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.
பிறகு டாபியோகாவைச் சேர்த்து 2 அல்லது 3 கொதி வந்ததும் (பிரட்டல் பதம்) இறக்கிவிடவும்.
சாதம், தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து உண்பதற்கேற்ற, சுவையான டாபியோகா கார்ன் பச்சடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு ரேணுகா,

பெயர் வித்தியாசமாக இருக்கு. குறிப்பும் புதுமை. நல்லா இருக்கு.

பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

ரேணு சிஸ்டர், இந்த பச்சடிய குழந்தைகள் ரொம்ப விரும்புவாங்க, சப்பாத்தி உள்ள போகுதோ இல்லையோ டாபியோகா கார்ன் பச்சடி உள்ள போகும். ஆனா, கண்ணா பின்னான்னு பேர் வைகிரீங்க. நல்லவேளை அடைப்பு குறிக்குள்ள மரவள்ளிக்கிழங்குன்னு போட்டீங்க. இல்ல நான், கூகிள் சார்ட்ட போய் இருப்பேன்.

உன்னை போல் பிறரை நேசி.

அருமை ட்ரை பன்னிட்டா போச்சு

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

புதிது புதிதா சப்பாத்திக்கு சைட் தேடுவேன். அவசியம் இரண்டு காய்களும் கிடைக்கையில் செய்கிறேன் .