ப்ளாஸ்டிக் பாட்டில் வளையல்

தேதி: November 10, 2014

5
Average: 5 (4 votes)

 

ப்ளாஸ்டிக் பாட்டில்
சாட்டின் ரிப்பன்
லேஸ்
ஸ்டோன்ஸ்
கத்தரிக்கோல்
க்ளூ

 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். ப்ளாஸ்டிக் பாட்டிலை கையின் சுற்றளவிற்கேற்ற நீளமும், ஒரு செ.மீ அகலமும் கொண்ட துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
வெட்டிய துண்டை வளையம் போல‌ வைத்து இரண்டு முனைகளையும் இணைத்து ஒட்டிக் கொள்ளவும்.
இரண்டு முனைகளையும் இணைத்த இடத்தில் சாட்டின் ரிப்பனை உள்பக்கமாக ஒட்டி சுற்றிக் கொண்டே வரவும்.
முழுவதும் சுற்றியதும் சாட்டின் ரிப்பனை நறுக்கிவிட்டு இறுக்கமாக பிடித்து வளையலின் உள்பக்கமாக வைத்து ஒட்டவும்.
வளையலைச் சுற்றிலும் இரு ஓரங்களிம் க்ளூ வைத்து லேஸை ஒட்டவும்.
பிறகு படத்தில் உள்ளது போல் நடுவில் விருப்பமான நிறத்தில் ஸ்டோன் ஒட்டி அலங்கரிக்கவும்.
ப்ளாஸ்டிக் பாட்டிலில் செய்த அழகான வளையல் ரெடி. நாம் அணியும் ஆடையின் நிறத்திற்கேற்ப உடனேயே செய்து அணிந்து கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

போன தடவை இங்கு காட்டிக் கொடுத்தை பாடசாலையில் சிறுமிகள் விரும்பிச் செய்தார்கள். இதுவும் அழகு. பாராட்டுகள் டீம்.

‍- இமா க்றிஸ்

கொள்ளை அழகு. நல்ல கிரியேட்டிவிட்டி.

Be simple be sample

சூப்பர் ஐடியா. அழகா இருக்கிறது.

கலக்கறீங்கப்பா.. அந்த ப்ரெயினை எனக்கும் கொஞ்சம் கடனா கொடுங்கோ... என்னோடது ரொம்ப நாளா வேலையே பார்க்க மாட்டங்குது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை டீம்,
அழகு
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா