பெல் பெப்பர் சிக்கன்

தேதி: November 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

கோழி - அரை கிலோ
பெல் பெப்பர் - 2
வெங்காயம் - 2
தக்காளி ப்யூரி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி
தயிர் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சில்லி சிக்கன் மசாலா - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
துருவிய இஞ்சி - சிறிது
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயம் மற்றும் பெல் பெப்பரை நறுக்கிக் வைக்கவும்.
சிக்கனைச் சுத்தம் செய்து தயிர், உப்பு மற்றும் வினிகர் சேர்த்துப் பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
பிறகு ஊறவைத்த சிக்கன் கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து தாளிக்கவும்.
அத்துடன் வெங்காயம் மற்றும் பெல் பெப்பரைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு தூள் வகைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும்.
அத்துடன் தக்காளி ப்யூரி சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.
சுவையான பெல் பெப்பர் சிக்கன் தயார். விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறும், மல்லித் தழையும் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே நல்லா இருக்கு முதல் பதிவு நான் தான் அப்போ இது எனக்கு தான்

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

Today intha receipe try pannen.simply superb....thank u for the delicious receipe

துருவிய இஞ்சி சேர்ப்பது புதிது முசி. ரெசிப்பி சூப்பர்

முசி,
நல்ல combo ..ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பினை வெளியிட்ட டீமிர்க்கு மிக்க நன்றி.இரண்டாம் படத்திர்க்கான வரியில் இஞ்ஜி பூண்டு விழுது சேர்த்து கொள்ளவும்.

முதல் பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,ஜன்னத்துல்.

செய்துப் பார்த்து உடனே பதிவிட்டமைக்கு ரொம்ப‌ நன்றி,வந்தனாபரபு.

பாராட்டிர்க்கு மிக்க‌ நன்றி,வாணி.

அவசியம் செய்து பார்த்து சொலுங்க‌,கவிதாஉதய‌குமார்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

nice dishhh,,,,,,i m new member for this sit,,,,ennnaya frndz ahh accept panipingala,,,,