என்று ஒழியும் இந்த அவலம் ??

இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடுவது வழக்கம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் நிஜமாகவே அதின் முக்கியத்துவம், பொருள் உணர்ந்து தான் கொண்டாடுகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு அடிமைத்தனம் மற்றும் சீர்கேடுகளில் ஒன்றாக இருப்பது குழந்தை தொழிலாளர் முறை. குழந்தை தொழிலாளிகளை கட்டுப் படுத்தவென்று சட்டங்களைத் தீட்டினால் மட்டும் சரியாகி விடுமா? அதினால் குழந்தைகள் பயனடைந்துள்ளார்களா என்பதையெல்லாம் ஏன் கவனிக்க மறுக்கிறார்கள்? பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு குழந்தையிடம் நீ ஏன் வேலைக்கு வருகிறாய்? பள்ளிக்கு செல்வதில்லையா என்று கேள்வி எழுப்பினால் பெரும்பாலான குழந்தைகளின் பதில் இதுவாயிருக்கும். தந்தை சம்பாதிக்கும் பணம் அவர் குடிப்பதற்க்கே சரியாக உள்ளதாகவும், கூலி வேலை செய்யும் தாய்க்கு தானும் வேலை செய்து உதவினால் தான் குடும்பம் இரண்டு வேளை கஞ்சி குடிக்க முடியும் என்பதே. பல குழந்தைகள் வயிற்றுப் பிழைப்புக்காகவே பணிக்கு தள்ளப் படுகிறார்கள். ஓடியாடி விளையாடி மகிழ்வுடன் வாழ்வை தொடங்க வேண்டிய பருவத்தில் பணிக்குத் தள்ளப் படுவதை தடுக்க ஏன் நம் அரசாங்கத்தினால் மட்டும் முடிவதில்லை.

இது ஒருபுறம் இருக்க பொது இடங்களில் குழி தோண்டுகிறோம் என்று சொல்லி போதிய பாதுகாப்பு தடுப்புகளின்றி ஆழமான குழிகளைத் தோண்டி வைத்து விடுவதால் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு பல நேரங்களில் அக்குழிகள் மரண குழிகளாக மாறி விடுகின்றனவே.
இத்தகைய அவலங்கள் நம் நாட்டில் மட்டுமே மறுபடியும் மறுபடியும் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களாகிக் கொண்டிருக்கின்றன. எதுவும் என் வீட்டில் நடக்கும் வரை எனக்கு கவலையில்லை என்றிருந்தால் அது அநீதிக்கு சமம் அல்லவா? தங்கள் பிள்ளைகள் சொகுசு கார்களில் பயணிப்பதினால் அவற்றிர்க்கான தீர்வைக் குறித்து யாரும் சிந்திப்பதில்லையோ? ஒரு குழந்தை ஆழமான படு குழிக்குள் விழுந்து விட்டால் அதை மீட்பதற்க்கென்று செலவாகும் நேரமும், பொருட்செலவும், பாதுகாப்பு தடுப்புககளுக்கான செலவை விடவும் அதிகமல்லவா? அப்படியே குழந்தையை மீட்க செலவழித்தாலும் பெரும்பாலான நேரங்களில் விலை மதிக்கமுடியாத குழந்தைகளின் உயிர் என்னவோ நமக்கு கிடைப்பதில்லையே. இதைப் பற்றி ஏன் சம்பத்தப் பட்ட அதிகாரிகள் சிந்திப்பதில்லை? மேலை நாடுகளிலும் பொது இடங்களில் பணியாளர்கள் குழி தோண்டுகிறார்கள். ஆனால் சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புகளை ஏற்ப்படுத்தி, எச்சரிக்கை பலகைகளை நிறுத்தி விட்டுதான் வேலையையே தொடங்குவார்கள்.

கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ளத்தானே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அவற்றைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்களில் சிலர் சமீப காலமாக மாணவ பிஞ்சுகளை சூரையாடும் மிருகங்களாய் மாறிக் கொண்டிருப்பதையும் அன்றாடம் செய்திகளில் படிக்கும் நிலைமைக்குத் தள்ளப் பட்டுள்ளோமே. ஐந்து வயது குழந்தையை கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்க்கு எங்கிருந்து வந்தது இந்த துணிவு? நம் நாட்டு சட்டத்திலிருக்கும் ஓட்டைகளினால் தானே. எப்படியும் ஜாமீன் என்ற ஒன்றை வாங்கி அதிகாரத்திலிருப்பவர்களிடம் பணத்தைக் காட்டி குற்றத்திலிருந்து விடு பட்டு விடலாம் என்கிற எண்ணம் தலை தூக்கி விட்டதினால் அல்லவா? ஆனால் அறியாப் பருவத்திலே அவதிக்குள்ளாகி மனரீதியாகப் பாதிக்கப் படும் அக்குழந்தைககள் மற்றும் அவர்களின் பெற்றோரின் நிலை தான் என்ன? யார் அவர்களுக்கு பதில் சொல்வது? பிள்ளைகளை படிப்பதற்க்கென்று பள்ளிக் கூடங்களுக்கு அனுப்ப பயப் படும் அவலம் நம் நாட்டிற்க்கு "சாபம்" என்றே சொல்லலாம்.
திரு.ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகளை தோட்டத்து செடியில் மலர காத்திருக்கும் மொட்டுக்களுக்கு ஒப்பிட்டதோடு அவர்கள் தான் நம் நாட்டின் எதிர்கால பலம் என்றார். அத்தகைய குழந்தைகளின் பாதுகாப்பிற்க்கும், உயிருக்கும் எவ்விதத்திலும் உத்திரவாதம் அளிக்காமல் வெறுதே அத்தலைவரின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவிப்பதினால், குழந்தைகளால் நேரு மாமா என்று அழைக்கப்பட்ட அம்மாமனிதரின் ஆன்மா ஒன்றும் குளிரப் போவதில்லை மாறாக இரத்த கண்ணீர் தான் வடிக்கும். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதும் இன்றைய மாணவர்கள் நாளைய இந்தியாவின் தூண்கள் என்பனவெல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டும் தானா?

மேலை நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பிற்க்கென்று பல சட்டங்களை அமல் படுத்தியிருக்கிறார்கள், அதோடு மட்டுமல்லாமல் வெற்றிகரமாக செயல் படுத்தியும் வருகிறார்கள். வெறுமனே சட்டங்களை பிறப்பித்து விட்டு எனக்கென்ன என்று பொறுப்பில்லாமல் இருப்பது இந்தியாவிற்க்கு பழகிப் போன விஷயம். ஆனால் அதுவே நம் நாட்டின் "வெட்கக் கேடு" என்றால் அது மிகையாகாது.

5
Average: 4.3 (3 votes)

Comments

நீண்ட‌ நாட்களுக்குப் பிறகு சமூக‌ அக்கறையுடன் கூடிய‌ ஒரு நல்ல‌ வலைப்பதிவுடன் வந்திருக்கீங்க‌! வாழ்த்துக்கள் வாணி.

எவ்வளவு கடுமையான‌ சட்டங்கள் வந்தாலும், அதுல‌ இருக்கிற‌ ஓட்டை ரொம்ப‌ பெரிதாகத்தான் இருக்கிறது!! லஞ்சமும், ஊழலும், தனிமனித‌ ஒழுக்கமின்மையும் தலைவிரித்து ஆடிக்கொண்டேதான் இருக்கிறது!!!

ஒரே தீர்வு... ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தனும், யோசிக்கனும். தனக்கு வந்தால்தான் அது கஷ்டம்! அடுத்தவருக்குன்னா அதை செய்தியா படிச்சுட்டு 2 நாள்ல‌ மறந்துடனும்னு நினைச்சா, அதே கஷ்டம் நம்ம‌ வீட்டு கதவையும் ஒரு நாள் தட்டும்னு யோசிக்கனும்!

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுன்னு சொல்வாங்க‌". சட்டத்தை இயற்றுகிற‌, சட்டத்தை மதிக்காத‌ மற்றும் தவறு செய்யும் எல்லா பெரியவர்களும் சின்ன‌ பிள்ளைகளா இருந்தவங்கதானே!!! சின்ன‌ பிள்ளைகளாக‌ இருக்கும்போதே... எது தவறு... எது சரி...பெண் குழந்தைகளிடம் எப்படி நடக்கனும், லஞ்சம் வாங்கறது தப்புன்னு எல்லாமே பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கனும், கண்டிக்கனும். திருந்தலைன்னா அன்பாலயாவது புரியவைக்கனும்.ஒவ்வொரு பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இந்த‌ கடமை உணர்ச்சி இருக்கனும்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக‌ பணத்தை மட்டுமே சேர்க்காமல், நல்லதை சொல்லிக்கொடுக்க‌ அவர்களுக்காக‌ கொஞ்சம் நேரத்தையும் செலவழிக்கனும். பிள்ளைகளுக்காகத்தான் சம்பாதிக்கிறோம்னு சொல்லிட்டு, அவர்கள் என்ன‌ செய்கிறார்கள்னே தெரியாமல், அவர்களூக்கு கொடுக்க‌ வேண்டிய‌ கண்டிப்புக்கும் ,அன்புக்கும் பதிலாக‌ ...அவர்கள் கேட்பதை வாங்கிக்கொடுத்து அதை சரிசெய்யப் பார்க்கிறார்கள்!

ஏழ்மையில் இருப்பவர்களுக்கு வேறு பிரச்சனை! வறுமையுடனும், குடியுடனும் போராடவே அவர்களுக்கு நேரம் போதாது!! இப்படி இருக்கும் சூழலில் அவர்களைச் சொல்லித் திருத்துவதைவிட‌, பள்ளிக்குச் செல்லும் அவர்கள் பிள்ளைகளை திருத்த‌ முயற்சிக்கலாம்....இந்த‌ விஷயத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டும்தான் தன்வேலைன்னு நினைக்காமல்.....பிள்ளைகளுக்கு நல்லது, கெட்டதையும் ஆரம்பவகுப்பிலிருந்தே , சொல்லிக்கொடுக்கலாம்.

ரொம்ப‌ அருமையான பதிவு,
குழந்தை தொழிலாளர் முறை. உங்க‌ ஆதங்கம் தெரியுது அது எல்லாருக்கும் புரியலையே,
இதற்கு முக்கிய‌ காரணமே வறுமை தான்,

/// வெறுமனே சட்டங்களை பிறப்பித்து விட்டு எனக்கென்ன என்று பொறுப்பில்லாமல் இருப்பது இந்தியாவிற்க்கு பழகிப் போன விஷயம். ஆனால் அதுவே நம் நாட்டின் "வெட்கக் கேடு" என்றால் அது மிகையாகாது /// 100% உண்மை....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மனதிலுள்ள ஆதங்கத்தையெல்லாம் கொட்டி இடுகையாக்கியிருக்கிறீர்கள். கட்டுரை அருமை.

‍- இமா க்றிஸ்

வருகைஇக்கும், பதிவிற்க்கும் நன்றி :))

நீங்கள் குறிப்பிட்ட அத்தனை வரிகளும் உண்மை அனு. ஆனால் நம்மவர்கள் தான் திருந்துவதில்லையே. அதுதானே பிரச்சனையே. மக்களை கேட்டால் மேலிடத்தை குறை கூறுகிறார்கள். மேலிடமோ பணம், புகழ் அந்தஸ்த்து, என ஓடிக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் சட்டங்கள் பல திருத்தி எழுதப் பட வேண்டும் என்றுதான் தோணுகிறது.

நீங்கள் சொன்னது போன்று சிறு வயதிலிருந்து கற்றுக் கொடுத்தாலொழிய எதுவும் மாறப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியரிகளின் பங்குதான் மிக முக்கியமாகிறது.

நம்மால் முடிந்தது புலம்பலை இங்கே இறக்கி வைப்பதுதான் :((
ஆதங்கத்தை கொட்டியதால் மனம் ஏதோ லேசாகி இருக்கு.
பதிவிற்க்கு நன்றி தோழிகளே.

அன்பு வாணி,

நீங்க சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை. மனசில் தைக்கிற மாதிரி உங்க எண்ணங்களை, அருமையாக சொல்லியிருக்கீங்க.

நல்லதே நடக்கட்டும்.

அன்புடன்

சீதாலஷ்மி

//இதைப் பற்றி ஏன் சம்பத்தப் பட்ட அதிகாரிகள் சிந்திப்பதில்லை? மேலை நாடுகளிலும் பொது இடங்களில் பணியாளர்கள் குழி தோண்டுகிறார்கள். ஆனால் சுற்றிலும் பாதுகாப்பு தடுப்புகளை ஏற்ப்படுத்தி, எச்சரிக்கை பலகைகளை நிறுத்தி விட்டுதான் வேலையையே தொடங்குவார்கள்.// - இங்கும் வைக்கிறார்கள். பொது மக்கள் தான் அதை மதிப்பதில்லை. பலரும் அதையும் தாண்டி போக முடியுமா என் முயல்வதை நானும் கண்டிருக்கிறேன்.

//ஐந்து வயது குழந்தையை கூட பாலியல் பலாத்காரம் செய்யும் அளவிற்க்கு எங்கிருந்து வந்தது இந்த துணிவு? நம் நாட்டு சட்டத்திலிருக்கும் ஓட்டைகளினால் தானே. // - நிச்சயமில்லை... மாட்டினால் காலி, ஆனால் மாட்ட மாட்டோம் என்ற நம்பிக்கை. நம்ம ஊரில் பல பெற்றோர் பிள்ளைகளை கண்டு கொள்வதில்லை என்பதும் உண்மை. இது போன்ற விஷயங்கள் தெரிந்தாலும் எதிர்த்து கேட்க தைரியமில்லை என்பதும் உண்மை. அது தரும் தைரியம் தான்.

//வெறுமனே சட்டங்களை பிறப்பித்து விட்டு எனக்கென்ன என்று பொறுப்பில்லாமல் இருப்பது இந்தியாவிற்க்கு பழகிப் போன விஷயம்.// - இதை நான் சொல்லி இருந்தால் என்னவர் “அதுக்கு நீ என்ன செய்த?”னு கேட்டிருப்பார். நியாயமான கேள்வி :) இப்படி முகம் காட்டாமல் எங்கோ இருந்து மற்றவரை குறை சொல்லும் நாம் நம்ம நாட்டுக்காக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, சுத்தமா வைக்க என்ன பண்ணோம்? என்னைக்காவது எங்கையாவது ஆபத்துன்னு தெரிஞ்சா, நின்னு ஒரு நிமிஷம் ஒதுக்கி, அந்த குழியை சுற்றி எதாவது வைக்க நினைச்சிருப்போமா? இல்ல சாலை ஓரம் வியாபாரம், அல்லது பிச்சை எடுக்கும் பிள்ளையை படிக்க வைக்கலாம் என்று எண்ணி ஒரு முயற்சியாவது செய்திருப்போமா?? பின்னே... குறை சொல்ல நாம யாரு?

எல்லா நாடும் சட்டம் தான் போடுது... அதை கடைபிடிப்பது மக்கள் தான். நம்ம நாட்டில் எல்லாத்துக்கும் அரசை கை காட்டிவிட்டு தப்பிக்கும் மனோபாவம்... அதனால் தான் எந்த சட்டமும் எதையும் சரி பண்ணல. சின்ன நாடா இருந்தா எல்லாத்தையும் அரசாங்கம் ஓரளவு கட்டுப்படுத்தலாம். நம்ம நாட்டை போன்ற அதிகமான மக்கள் தொகை உள்ள நாட்டில் மக்களா திருந்தாட்டா அரசு ஒன்னும் பண்ண முடியாது. அனு சொன்னது போல தனி மனிதன் திருந்தாட்டா, சட்டமும் அரசும் ஒன்னும் பண்ண முடியாது.

//வெறுமனே சட்டங்களை பிறப்பித்து விட்டு எனக்கென்ன என்று பொறுப்பில்லாமல் இருப்பது இந்தியாவிற்க்கு பழகிப் போன விஷயம். ஆனால் அதுவே நம் நாட்டின் "வெட்கக் கேடு" // - கொஞ்சம் அதிகப்படியான வார்த்தையோ?? வெளிநாடு போகும் இந்தியன் அந்த நாட்டில் சட்டத்தை சரியா கடை பிடிக்கறான், அவனே நம் நாட்டுக்கு வந்ததும் குப்பையை ரோட்டில் வீசுறான்... இங்க இது சகஜம் என்பான். தப்பு யாருடையது? சொல்லுங்க :) நாட்டை குறை சொல்லாமல் மனுஷங்க திருந்தினா நல்லா இருக்கும். தவறாக நினைக்க வேண்டாம், யாரோ சிலர் செய்யும் பிழைக்கு நாட்டையே திட்டுவது நியாயமில்லை என்பது என் கருத்து.

வெளிநாட்டில் வீட்டு முன் குப்பை, பனி என எல்லாம் தானே சுத்தம் பண்ணவங்க, இந்தியா வந்தா வீட்டு வாசலை சுத்தம் பண்ணுறதை கவுரக்குறைச்சலா நினைக்கிறாங்க. அரசாங்கம் சம்பலத்துக்கு ஆள் வெச்சு ஓசியில் சுத்தம் பண்ணனும்னு நினைக்கிறாங்க. ஆனா வரியை ஒழுங்கா கட்டாம ஏமாத்தி சேமிப்பாங்க. என்ன நியாயம்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//வெறுமனே சட்டங்களை பிறப்பித்து விட்டு எனக்கென்ன என்று பொறுப்பில்லாமல் இருப்பது இந்தியாவிற்க்கு பழகிப் போன விஷயம். ஆனால் அதுவே நம் நாட்டின் "வெட்கக் கேடு" என்றால் அது மிகையாகாது//

நல்ல‌ பதிவு மேடம்.ஆனால் மற்றவர்களையே(சட்டத்தை,அரசியல்வாதிகளை) குறை சொல்வது நியாயம் ஆகாது தானே...?

அனு மேடம் சொல்வது முற்றிலும் உண்மை.

No pains,No gains

ANANTHAGOWRI.G

என்று தணியும் இந்த அவலம். பாரதியின் சொல்லாடல். சட்டம்போட்டு சமுதாயதை திருத்தமுடியாது. சட்டமும் வேண்டும் அதன் செயல் பாடும் வேண்டும். தனிமனிதன் சட்டத்தை என்று மதித்து நடக்க முற்படுவனோ அன்றுதான் சட்டம் முழுமைபெறும். மற்ற நாடுகளைவிட நமது நாட்டில் சட்டங்கள் அதிகம். ஆனால் அதன் செயல்பாடு பணம் பதவி சமூக அந்தஸ்த்து என பலகாரணிகளால் முடக்கபடுகிறது. பேசியும் எழுதியும் தன்கடமை முடிந்துவிட்டது என் எண்ணாமல் என்று செயல்படுவோமோ அன்று இந்த அநீதிகள் களையப்படும்.

.//இந்த‌ விஷயத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டும்தான் தன்வேலைன்னு நினைக்காமல்.....பிள்ளைகளுக்கு நல்லது, கெட்டதையும் ஆரம்பவகுப்பிலிருந்தே , சொல்லிக்கொடுக்கலாம்.//

அனைவருமே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வரணும். . தட்டி கழிக்கக் கூடாது.
சமுக‌ சிந்தனையுள்ள‌ பதிவு.

என்ன செய்வது சீதா மேடம் :)) என் குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை இல்லை, என்று மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லையே. சம்பந்தப் பட்டவர்களுக்கு மனதில் தைப்பதோடு மட்டுமின்றி ஏதாவது செயல் படுத்தினால் நல்லதே.
நன்றி

\\பலரும் அதையும் தாண்டி போக முடியுமா என் முயல்வதை நானும் கண்டிருக்கிறேன்.//

உண்மைதான் வனி. இங்கெல்லாம் அதை மீறினாலோ, தாண்டி சென்றாலோ நடவடிக்கை எடுப்பார்கள். அதற்க்கும் மேலாக காவலரிடம் பணம் நீட்டினாலோ, காவலர் அதை வாங்கினாலோ இருவரையும் தண்டிக்கும் சட்டம் அமல் படுத்தப் பட்டுள்ளது. ஆகவே தான் பயந்து தவறுகள் குறைந்து உள்ளன.

\\மாட்டினால் காலி, ஆனால் மாட்ட மாட்டோம் என்ற நம்பிக்கை.//
அதைத் தான் நானும் சட்டத்திலிருக்கும் ஓட்டைகள், மற்றும் பணம், பதவியினால் தப்பிக்கிறார்கள் என்றேன்.
\\பிச்சை எடுக்கும் பிள்ளையை படிக்க வைக்கலாம் என்று எண்ணி ஒரு முயற்சியாவது செய்திருப்போமா?? பின்னே... குறை சொல்ல நாம யாரு?// இது வெளி நாட்டில் வசிக்கும் எல்லோருக்கும் பொதுவானதல்ல என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன் தோழி.
மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டி செய்ய வேண்டிய அவசியம் இல்லையே.
5 வருடங்களுக்கும் முன் சென்னையில் உள்ள ஒரு உணவகத்திற்க்கு சென்றிருந்த போது மேஜையை சுத்தம் செய்து கொண்டிருந்த 10 வயது சிறுவனைப் பார்த்து ஏன் படிக்கவில்லை? வேலை செய்கிறாய்? என்று கேட்டேன் படிக்க பணம் இல்லை என்று பதிலளித்தான், உன்னை விடுதியில் சேர்த்து நான் படிக்க வைக்கிறேன்; படிக்கிறாயா? என்றேன். அதற்க்கு அவன் அளித்த பதில் என் வருமானத்தை நம்பிதான் எங்கள் வீட்டில் அரை வயிறு சாப்பாடே நடந்து கொண்டிருக்கிறது, நான் படிக்கப் போய் விட்டால் வருமானத்திற்க்கு என்ன செய்வது? வேண்டுமென்றால் இதை விட நல்ல சம்பளத்தில் வேலை கொடுங்கள் பார்க்கிறேன் என்றான்.
மற்றுமொரு சம்பவம்.
கடந்த ஆண்டு நான் சில மாதங்கள் ஊரில் இருந்த பொழுது ஒரு நாள் ஒரு பெண் எங்கள் வீட்டு வாசலில் தர்மம் கேட்டு வந்து நின்றாள். பார்ப்பதற்க்கு இளமையாகவும், வட மாநில பெண் போன்ற தோரணையில் இருந்தாள். நன்றாக தமிழ் பேசினாள்.வீட்டில் இருந்த சாப்பாட்டை சூடாக்கி கொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டு பேசினேன். நீங்கள் நன்றாகத்தானே இருக்கீங்க, உடலில் நோய் எதுவும் உள்ளதா ? என்று கேட்டேன் அவள் இல்லை என்றாள். அப்படியென்றால் ஏன் பிச்சை எடுக்கிறாய் ? வேலை பார்த்து சாப்பிட வேண்டியது தானே என்றேன். எனக்கு யாருமே வேலை கொடுப்பதில்லையே என்றாள். நான் கேட்டேன் நாளையிலிருந்து என் வீட்டில் வேலை செய்ய சம்மதமா ? என்றேன் பதில் எதுவும் சொல்லாமல், திரும்பி சென்று விட்டார்.

\\எல்லா நாடும் சட்டம் தான் போடுது... அதை கடைபிடிப்பது மக்கள் தான்.//
மனிதன் திருந்துவதற்க்கு வழி அமைத்துக் கொடுங்கள் என்று தான் கேட்கிறேன். மேலை நாடுகளிலுள்ள கடுமையான சட்ட நடவடிக்கைகளினால் மக்களுக்கு தண்டனையின் மீது பயம் ஏற்ப்படுகிறது. நம் நாட்டில் தான் "சட்டம் தன் கடமையை செய்யும்" என்ற சொல்லோடு நிறுத்தி விடுகிறார்களே. தவறு செய்தவர்களை விட்டு விட்டு அப்பாவிகள் தண்டிக்கப் படுவதும் நம் நாட்டு சட்டத்தின் அவலம் தானே. நம் நாட்டை விட மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் சீர் கேடுகளை அரசு தட்டிக் கேட்கிறது. \\நம்ம நாட்டில் எல்லாத்துக்கும் அரசை கை காட்டிவிட்டு தப்பிக்கும் மனோபாவம்... அதனால் தான் எந்த சட்டமும் எதையும் சரி பண்ணல.//
அரசு கண்டிப்புடன் இருந்தால் மக்கள் ஏன் அரசை கை காட்டி விட்டு தப்பிக்கிறார்கள். தப்ப விடாதீர்கள் என்பது தான் என் கோரிக்கை.

\\கொஞ்சம் அதிகப்படியான வார்த்தையோ?\\ இல்லை என்றுதான் எனக்கு தெரிகிறது. முன்பெல்லாம் நம்மைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அடிக்கடி சொல்லும் விஷயங்கள் என்று சொன்னால் இன்டியா வாவ் ! நைஸ் பிளேஸ், மாமல்ல புரம் எனக்கு பிடித்தது. மெட்ராஸ் சிக்கன் கறி பிடிக்கும், கன்னியாகுமரி, கேரளா, தாஜ்மஹால், கோவா .... அழகான ஸ்தலங்கள் என்றெல்லாம் புகழ்பாடுபவர்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் நம்மைப் பார்த்து கேட்ப்பது என்னவென்றால், ஏன் உங்கள் நாட்டில் சட்டங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை ?
தவறு செய்பவர்களை தண்டிப்பதில்லை ? என்பது தான் . அதற்க்கு காரணம் கடந்த ஆண்டில் இங்குள்ள அரசு இந்நாட்டு பெண்களை தனியே இந்தியாவிற்க்கு செல்லாதீர்கள். நீங்கள் குடும்பமாகவோ, குழுவாகவோ சென்றாலும் தயவு செய்து உங்கள் மார்பை மறைத்துக் கொள்ளுங்கள். இந்திய ஆண்களில் பலர் பொது இடங்களில் பெண்களின் மார்பை தொடாமல் விடுவதில்லை என்றெல்லாம் ஒரு ஊடகத்தின் மூலம் செய்தி வெளியிட்டிருந்தார்கள். இதை வெட்கக் கேடு என்று சொல்லாமல் வேரென்னவென்று சொல்வது ?

\\வெளிநாட்டில் வீட்டு முன் குப்பை, பனி என எல்லாம் தானே சுத்தம் பண்ணவங்க, இந்தியா வந்தா வீட்டு வாசலை சுத்தம் பண்ணுறதை கவுரக்குறைச்சலா நினைக்கிறாங்க//
எனக்கு தெரிந்து வெளி நாட்டில் வாழ்ந்து விட்டு நம் நாட்டிற்க்கு நல்லது செய்ய வேண்டிய நோக்கத்தில் குடியேறியவர்கள் சிலர் தங்களை சுற்றியுள்ளவர்களுக்கும், உடன் வேலை பார்ப்பவர்களுக்கும் மாதிரியாக இருந்ததுண்டு. இதை நான் இங்கு வருவதற்க்கு முன்னதாக நம் நாட்டில் வேலை பார்க்கையிலே பார்த்ததுண்டு.

நீங்கள் ஏற்கனவே ஒரே வரியில் பதிவிட்டது போன்று (அழித்து விட்டீர்கள் என நினைக்கிறேன்) நல்லது நடந்தால் நன்றே.:)) எப்போது நடக்கும் என்பது தான் தெரியவில்லை :((
உங்கள் கருத்துக்களை பதிவிட்டமைக்கு நன்றி தோழி

மக்கள் அவர்களாகவே மாறுவதென்பது இனிமேல் நடக்குமா என்று தெரியவில்லை. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டியவர்களே(பெற்றோரையும் சேர்த்து தான்) தவறை செய்கையில் குழந்தைகளை எப்படி நெறிப் படுத்துவது? ஆகவே தான் தவறு செய்பவர்களை தண்டித்து நெறிப் படுத்த சட்டம் தேவைப் படுகிறது. \\மற்றவர்களையே(சட்டத்தை,அரசியல்வாதிகளை) குறை சொல்வது நியாயம் ஆகாது தானே...?//
ஏனென்றால் சட்டம் அவர்கள் கையில் தானே உள்ளது, அது அவர்களின் பொறுப்பும், தலையாய கடமையும் கூட.
உங்கள் கருத்திற்க்கும், பதிவிற்க்கும் நன்றி

உங்களுக்கு என் பதிவு கோபம் கொடுத்திருந்தா மண்ணிக்கனும்.

இப்பவுமே வெட்கக்கேடு என்றது எனக்கு வருத்தமே. வெளிநாட்டு மக்களுக்கு இந்தியாவை எப்பவும் மட்டம் தட்டணும். அதுவும் சில நாடுகள் குறிப்பா. அதை அந்த நாட்டு பத்திரிக்கைகள் சிறப்பா செயல்படுத்துது. ஒரு காலத்துல இந்தியாவை ஆங்கில படத்தில் காட்டினாலே பிச்சையும், சாமியாரும், நாயும், குப்பையும் தான் இருந்தது. ஆனால் அது இல்லாத இடமும் அந்த காலத்திலும் இருக்க தான் செய்தது.

வேலை கொடுத்தாலும் செய்யல, படிக்க வசதி பண்ணலும் படிக்கல... யார் தப்பு? நிச்சயம் சோம்பேரித்தனம் தான். இதை நீங்களும் நானும் செய்தா போதுமா? பலரும் செய்ய வேணாமா?

தப்பே செய்யாத அரசு, ஊழலே இல்லாத நாடு எதுவும் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன், வெளிய வருவதில்லை பட நாடுகளில். பரவாயில்லை... உங்க கருத்தை நீங்க சொல்ல முழு உரிமை இருக்கு :) எனக்கு அந்த ஒரு வார்த்தை மனதை உருத்தியதே விளக்கமான பதிவிட காரணம். தப்பா தோணினா சாரிங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் பதிவிற்க்கும், கருத்துக்கும் நன்றி

எல்லா நாடுகளிலும் தவறு செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சட்டத்தின் செயல் பாடுகளாலும், சட்டத்தை மீறியவர்களுக்கு நேர்ந்த கதியை பார்ப்பதினாலும் தவறுகள் குறைக்கப் பட்டுள்ளன. \\பேசியும் எழுதியும் தன்கடமை முடிந்துவிட்டது என் எண்ணாமல்//
முற்றிலும் உண்மை. நம்மால் முயன்றதை ஒவ்வோருவரும் செவ்வென செய்தால் அதுவே போதும்.

நன்றி வாணி சிஸ்டர் முதல் படத்துக்காகவும், தலைப்புக்காகவும்.

இந்த கருத்து என்னோடது மட்டுமே. மத்தவங்களும் இதோட ஒத்துப்போனும்ன்னு அவசியம் இல்ல. என்னோட கருத்து, என்னோட உரிமை. (இத போல்டு-ல போடணும் ஆப்சன் இல்ல. நீங்களே போட்டுக்கோங்க)

'என்று ஒழியும் இந்த அவலம்'.
கொஞ்ச நாள் முன்னாடி ஒரு முதியவர் டிராபிக் ஐயா ஒரு கேஸ் போட்டுருந்தாப்ள, 18 வயசுக்கு கீழ உள்ள பொண்ணோ, பையனோ திரைப்படங்களில் தங்கள் வயதுக்கு மீறிய கதா பாத்திரங்களில் நடிக்கிறத தடை பண்ணனும்னு.

யோசிச்சி பாருங்களேன்
15 வயசு பொண்ணு, 35, 40 வயசு ஆணோட காதலியா, மனைவியா உணர்ச்சி கொட்டி நடிக்கிறது ஒருவித குழந்தை வதை இல்லையா? 40, 50 லட்ச சம்பளம்.

ஆறு வயசுக் குழந்தை தன் வயதுக்கு மீறிய, ஒருவித 'ஏக்கத்தோட' 'உணர்ச்சி பொங்க' 'பாவனைகளுடன்' பாடல்கள பாடுறது, நடனம் ஆடுறது, ஆட வைக்கப்படுவது குழந்தை தொழிலாளர் முறை இல்லையா? 40 லட்ச வீடு சம்பளம்.

பட்ஜெட் பெருசு அதனால பெற்றோர்களும் கை தட்டி இந்த குழந்தை வதையை ஆதரிக்கிராங்களோ?

அந்த முதியவர் டிராபிக் ஐயா போட்ட கேசுக்கு நீதிமன்றம், குழந்தைகள்.. தாங்கள் என்னவா வரணும்ன்னு நினைக்கிறதை, அவங்க வளர்ச்சியை, தடை போடக் கூடாதுன்னு சொல்லிடிச்சி.

எனக்கு என்னவோ நீதிமன்றம் ஏதோ தவறிடிச்சோன்னு தோணுது. அவங்க சொன்ன, குழந்தைகள் என்னவா வரணும்ன்னு நினைக்கிற வளர்ச்சி எல்லா துறைக்கும் பொருந்தும் தான.

மளிகை கடை வச்சிருக்கிறவர் தன் குழந்தை பள்ளி முடிஞ்ச பின்னாடி கடைல வேலை செய்ய வச்சி தொழில் நுணுக்கம் கத்து கொடுக்கிறது,

தெரிஞ்சவர் ஹோட்டல்ல சர்வர் வேலை செய்ய வச்சி தொழில் நுணுக்கம் கத்து கொடுக்கிறது,

மெக்கானிக் ஷாப், எலெக்ட்ரிக் ஷாப், ஆட்டோ மொபைல் எல்லாத்துலயும் வேலை செய்ய வச்சி தொழில் நுணுக்கம் கத்து கொடுக்கிறது எல்லாம் நியாயம் தானே. எதிர் கால செப்பனிடல் தானே. இதுல எங்க குழந்தை தொழிலாளர் முறை வந்தது. (நீதிமன்ற தீர்ப்புப்படி)

குழந்தைகளை உடல் ரீதியா வேலை செய்ய வைக்கிறது மட்டும் தான் கொடுமையா? இல்ல குழந்தைகளை அதிக பணம், புகழ் கிடைக்கும்ன்னு
தன் வயதுக்கு மீறிய எந்த செயலையும் செய்ய சொல்லுறது கொடுமை இல்லையா? (குழப்பிட்டாங்களே)

எனக்கு என்னவோ, ஹோட்டல்ல டேபிள் துடைக்கிரதையே, அந்த தொழிலையே, கவுரவ குறைச்சலா பாக்கிரதுனால அதை பார்ட் டைமா செய்ற குழந்தை, மிகவும் பரிதாபத்துக்குரிய குழந்தை தொழிலாளியாகவும், சினிமாவில், சின்னத்திரையில் தன் வயதுக்கு மீறிய செயலை செய்து பரிசு வாங்கும் குழந்தை திறமைசாலியாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

(நாமதான் தெருமுனை ஹோட்டல் சர்வருக்கு ஒரு கிரேடு, 5 ஸ்டார் ஹோட்டல் சர்வருக்கு ஒரு கிரேடு, விமானத்தில் பணிபுரியும் சர்வருக்கு ஒரு கிரேடுன்னு வச்சிருக்கோமே)

அதுக்காக பாட்டு பாடுறது, டான்ஸ் ஆடுறது தப்பா? இல்லைதான். பள்ளி பேச்சுப்போட்டி மாதிரி, கட்டுரை போட்டி மாதிரி. நல்ல தலைப்ப கொடுத்து பண்ணுங்க. திறமைய வளர்த்துக்கட்டுமே.

படத்துல வர்ற ஒரு குழந்தை கேரக்டர ஒரு குழந்தை தான் பண்ணனும். பண்ணட்டுமே. தன்னோட திறமைய வளர்த்துக்கட்டுமே. ஆனா, அந்த குழந்தைய, குமரியா மாத்தி கும்மியடிச்சிடாதீங்க.

நெறைய இருக்கு தான், ஆனா கை வலிக்குது. போதும்

உன்னை போல் பிறரை நேசி.

சொல்லித்தான் கொடுக்க வேண்டும், ஆனால் குழந்தைகள் வளர்ந்து பெரிதாவதற்க்குள் ஏற்கனவே உள்ளவர்களால் இன்னும் எத்தனையோ அநியாயங்கள் அரங்கேறி விட்டால் ? ஆகவேதான் தண்டனைகளை வலுவாக்கி அவலங்களை குறையுங்கள் அரசே என்கிறேன்.
வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி

\\உங்களுக்கு என் பதிவு கோபம் கொடுத்திருந்தா மண்ணிக்கனும்.//
கோபம் கொடுக்கவில்லை, மாறாக புரிந்து கொள்ளவில்லையோ(??) என்றுதான் வருத்தப் பட வைக்கிறது. நான் குற்றங்களைப்( CRIMES) பற்றி குறிப்பிட நீங்கள் தவறுகளைப் (MISTAKES) பற்றி எழுதியிருப்பது. குழந்தைகள் வதை, பாலர்களை பாலியல் பலாத்காரம் , சிறுவர்களின் உயிருக்கு பாதுகாப்பினமை என்று குற்றங்களை(Crimes) சுட்டிகாட்டி அரசாங்கம் தண்டனையை வலுவாக்கினால் குற்றங்களை குறைக்கலாம் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். குழந்தைகளின் உயிருக்கோ, உடலுக்கோ பாதுகாப்பில்லாமல் அரசாங்கம் ஏன் குழந்தைகள் தினம் என்ற ஒன்றை கொண்டாட வேண்டும் என்பதே என் கேள்வி ?? .
ஆனால் நீங்கள் என்னவோ குப்பையை சுத்தம் செய்வதைப் பற்றியும், பொறுப்பின்மையைப் பற்றியும் , முகம் காட்டாமல் மற்றவரை குறை சொல்வதாகவும் எழுதியிருப்பதற்க்கும் என்ன சம்பந்தம் உள்ளதென்றே யோசிக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் உண்மைதான். ஆனால் அவை எல்லாம் பொது மக்களால் மட்டுமே செய்யப் படும் தவறுகள் (Mistakes).
CRIMES ARE DIFFERENT FROM MISTAKES.
\\வெளிநாட்டு மக்களுக்கு இந்தியாவை எப்பவும் மட்டம் தட்டணும்.//
மற்ற நாடுகள் இந்தியாவை மட்டம் தட்டுவதும், பின் சிலர் மன்னிப்பு கேட்ப்பதும் அவ்வப்போது
(சமீபத்தில் கூட அமெரிக்கா.....) நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் நான் குறிப்பிட்டுது தங்கள் நாட்டு பெண்களின் பாதுகாப்பு கருதி வெளியிட்ட எச்சரிக்கை தானே. எச்சரிப்பதில் தவறில்லையே, நாமும் நம் பெண்களை, பிள்ளைகளை எச்சரிப்பதில்லையா? கவனம் தேவை என்று.. அதே போன்றுதான். இத்தகைய விஷயம் மட்டம் தட்டுதல் அல்லவே. அப்படியே மட்டம் தட்டினால் நான் எப்படி வேறு நாட்டினருக்கு வக்காலத்து வாங்குவேன்??
\\நீங்களும் நானும் செய்தா போதுமா? பலரும் செய்ய வேணாமா// பலரும் செய்வதில்லை தோழி.
ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு குறிப்பிட்ட உணவு, தானியம் என வைத்துக் கொள்வோம். அதிலிருந்து தயாரிக்கப் படும் உணவு பதார்த்தங்களை உண்ணாதீர்கள், அது கெடுதி, உயிர்க்கொல்லியாக மாறி விடுகிறது என்று யாராவது நல்லெண்ணத்துடன் பொது தளத்தில் எச்சரிக்கை கொடுத்தால், அதை எதிர்த்து எங்கள் உணவகத் தொழில் பாதிக்கப் படும் என யாராவது பதிலளிப்பது வழக்கம் தானே. ஆனால் அரசாங்கம் குறிப்பிட்ட தானியத்திற்க்கே தடை விதிப்பதுடன் அந்த உணவின் தீமையையும் எடுத்துக் கூறி சத்தான உணவுகளையும் சுவையாக தயாரித்து விற்பனை செய்யலாம் என்று சட்டம் பிறப்பித்து அதை செயலும் படுத்தினால் அது வரவேற்க்கத்தக்கதல்லவா. இது உணவுப் பொருட்களிலிருந்து பால் வரை கலப்படம் செய்பவர்களுக்கும் பொருந்தும். குற்றங்களில் ஊறிப் போனவர்கள் மாறுவதென்னமோ கடினம் தான், ஆனால் அரசு முயற்ச்சித்தால் குற்றங்களையும், தவறுகளையும் குறைக்கலாம் அல்லவா ?
\\தப்பே செய்யாத அரசு, ஊழலே இல்லாத நாடு எதுவும் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன்//
முற்றும் முழுதும் உண்மையான இது எனக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் ஒரு தவறு நடந்தால் அதை மேலும் நடக்காமல் எப்படி தடுக்கலாம் என்றும் மறுபடியும், மறுபடியும் அதே தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள். நம் நாட்டில் அப்படியில்லையே, தப்பு செய்த நபரை தண்டிக்க வில்லை, தப்பித்து விட்டான், நானும் தப்பிக்கலாம் என்று கருதியே மேலும் மேலும் அதே குற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

\\எனக்கு அந்த ஒரு வார்த்தை மனதை உருத்தியதே விளக்கமான பதிவிட காரணம்//
இன்னும் நம் நாட்டில் வழக்குகளை பதிவு செய்து வருடக் கணக்கில் வழக்கிற்க்காக பணமும் நேரமும் செலவழித்தும், தீர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு எத்தனையோ பேர் தீர்வு கிடைக்காமலே வயதாகி இவ்வுலகை விட்டு கடந்தும்.... அதைப் பற்றியெல்லாம் கவலையேப் படாத அவலம் என்னவென்று சொல்வது. நம் நாட்டில் இழுவையில் இருக்கும் ஆயிரமாயிரகணக்கான நீதி மன்ற வழக்குகள், அதினால் பாதிக்கப் படும் அபலை பெண்கள், விதவைகள், கை விடப் பட்ட பெண்கள் என பலருடைய மனக் குமுறலின் வெளிப் பாடு. ஆண்டுகள் சில முன் ஒரு கட்டத்தில் இதற்க்கும் மேல் நீதி மன்றத்திற்க்கு ஏறி இறங்க தெம்பும் இல்லாமல் கடைசி வரை நியாயமே கிடைக்காமல் அவதிப் பட்ட ஆயிரமாயிரம் இந்திய பிரஜைகளில் என் குடும்பமும் ஒன்று தான். அந்த வேதனை விட்டு சென்ற வடு தான் அவ்வார்த்தையின் வெளிப்பாடு.
\\ தப்பா தோணினா சாரிங்க :)//
தவறில்லை, உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடு - உங்கள் சுதந்திரம் :)அவ்வளவே , இதற்க்கு சாரி சொல்லி என்னை சங்கடப் படுத்தாதீர்கள். சாரியை வாபஸ் வாங்கிக் கொள்ளுங்கள் :))

உங்க கருத்துக்கு நன்றி,
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
\\அந்த முதியவர் டிராபிக் ஐயா போட்ட கேசுக்கு நீதிமன்றம், குழந்தைகள்.. தாங்கள் என்னவா வரணும்ன்னு நினைக்கிறதை, அவங்க வளர்ச்சியை, தடை போடக் கூடாதுன்னு சொல்லிடிச்சி.//
அதைப் பற்றி நானும் நாளிதளில் படித்தேன். தவறென்று எனக்கும் தோன்றியதே.
பள்ளிக்கு விடுப்பு எடுத்து சூட்டிங் செல்வதென்றால் ஏதோ புது ஃபேஷன் போல ஆகி விட்டது. உன் பிள்ளை எந்த பள்ளியில் படிக்கிறது என்ற கேள்வி எல்லாம் மாறி உன் குழந்தை எந்த சேனலில் Perform பண்ணுகிறது என்று சுற்றியுள்ளவர்கள் கேட்ப்பதையே சில பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.
\\தன் வயதுக்கு மீறிய எந்த செயலையும் செய்ய சொல்லுறது கொடுமை இல்லையா?//
நிச்சயம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டிய விஷயம்
\\ஹோட்டல்ல டேபிள் துடைக்கிரதையே, அந்த தொழிலையே, கவுரவ குறைச்சலா பாக்கிரதுனால அதை பார்ட் டைமா செய்ற குழந்தை, மிகவும் பரிதாபத்துக்குரிய குழந்தை தொழிலாளியாகவும், சினிமாவில், சின்னத்திரையில் தன் வயதுக்கு மீறிய செயலை செய்து பரிசு வாங்கும் குழந்தை திறமைசாலியாகவும் பார்க்கப்படுகிறார்கள்.// வறுமையின் நிறம் - ஆடம்பரத்தின் (அலங்) கோலம்
\\பள்ளி பேச்சுப்போட்டி மாதிரி, கட்டுரை போட்டி மாதிரி. நல்ல தலைப்ப கொடுத்து பண்ணுங்க. திறமைய வளர்த்துக்கட்டுமே.// புத்திசாலித்தனமான தகவல் . யாராவது தங்கள் சேனலில் புதிதாக ஆரம்பித்தால் அது பாராட்டப் படத் தக்கதே.

குழந்தை தொழிலாளர் பற்றிய உங்களின் தொலை நோக்கு பார்வைக்கு பாராட்டுக்கள்.

நல்ல‌ பதிவு .
//பல குழந்தைகள் வயிற்றுப் பிழைப்புக்காகவே பணிக்கு தள்ளப் படுகிறார்கள்//. நிச்சயமாக‌ இன்னும் கூட‌ சில‌ கிராமங்களில் பள்ளிக்கு பையை எடுத்து செல்ல‌ வேண்டிய‌ இளம்பிஞ்சுகள் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், தையலகங்களுக்கும், பஞ்சாலைகளுக்கும், வேலைக்கு செல்வதை கண்டு மனம் வேதனைபடுகிறது.

ஒரு சிறுமி நன்றாக‌ படிப்பாள் . கேட்டால் வீட்டு நிலைமை வேறு வழி இல்லை அக்கா என்கிறாள். இன்னொரு சிறுமி போங்கக்கா, எக்ஸாம், கொஸ்டீன், ஆன்சர் , ட்யூசன் எதுக்கு இந்த‌ தலைவலி ? ஜாலியா வேலைக்கு போய்ட்டு வந்து ஹாயா இருக்கறதுல‌ எவ்வளவு சந்தோசம்னு சொல்றா?

இவங்க‌ மனநிலை இப்படி மாறியதற்கு யார் காரணம் ? இவங்க‌ பெற்றோர் தானே? ஒரு அடிப்படை கல்வியையாவது கொடுத்துருந்தால் இப்படி பேசுவாங்களா?

முதலில் பெற்றோரிடம் மாற்றம் வந்தால் நீங்கள் சொன்ன‌ பாதி ப்ரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என‌ எண்ணுகிறேன்! நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி,

எல்லா நாட்டிலும் தவறு செய்பவர்களும், பொறுப்பில்லாத பெற்றவர்களும், விதிகளை மீறுபவர்களும் உள்ளார்கள்.
பொது மக்கள், பெற்றோர், ஆசிரியர்ன்னு எல்லோர் செயலிலும் மாற்றம் வேண்டும் என்பது அவசியம் தான். ஆனால் இத்தனை காலமும் வராமல் இனி எப்படி? தவறுகள் வேர்களையும், விழுதுகளையும் முளைத்து விட்டிருக்க அவர்களாகவே திருந்துவது இயலாத ஒன்று தான். பதவியிலிருப்பவர்களையும் பொது மக்களையும் ஒன்று என சொல்ல முடிவதில்லை, காரணம் பதிவியிலிருப்பவர்கள் பலரும் சட்டம் படித்துக் கொண்டோ, தெரிந்து கொண்டோதான் நாற்காலியில் அமருகிறார்கள். அதற்க்கும் மேலாக உறுதி மொழி என்ற ஒன்றை எடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். இப்படியே மக்களும், மாறாமல் அரசாங்கமும் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து கொண்டேயிருந்தால் அடுத்த தலைமுறையின் பாடு என்னவோ திண்டாட்டம் தான் :(