சிம்பிள் யூல் லாக் - கேக் டெகரேஷன்

தேதி: November 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

சாக்லெட் ஸ்விஸ் ரோல் (அ) ப்ளெய்ன் ஸ்விஸ் ரோல் - ஒன்று
சாக்லெட் ஐஸிங் - சாக்லெட் ஸ்விஸ் ரோல் குறிப்பில் கொடுத்து இருப்பது போல் 2 மடங்கு
ஹொலி இலைகள் & பழங்கள்
பாலட் நைஃப்
டூத் பிக்
இடுக்கி
பேப்பர் டவல்
உயரமான, நீண்ட சமையலறைப் பாத்திரம் - ஒன்று
(சாக்லெட் ஸ்விஸ் ரோல், ப்ளெய்ன் ஸ்விஸ் ரோல் மற்றும் ஹொலி இலைகள் & பழங்களுக்கான லிங்க் கீழே குறிப்பில் உள்ளது.)


 

கேக் போர்ட்டைத் தயாராக வைக்கவும். ஹொலி இலைகள், பழங்களை முன்னதாகவே தயார் செய்து வைக்கவும். சாக்லெட் ஐஸிங்கைக் குழைத்து வைக்கவும். எடுத்து வைத்திருக்கும் பாத்திரத்தைக் கவிழ்த்துப் போட்டு, அதன் மேல் ஃபில்லிங் பூசி உருட்டிய ரோலை வைக்கவும். ரோலின் இரண்டு ஓரங்களிலும் சாக்லெட் ஐஸிங் பூசவும்.
அதன் மேல் டூத் பிக் கொண்டு வட்டமாகக் கோடுகள் வரையவும்.
ரோலின் மீதிப் பகுதியிலும் ஐஸிங் பூசவும்.
அதனை மெதுவே கேக் போர்டுக்கு மாற்றி, டூத் பிக் கொண்டு மரப்பட்டை அமைப்பில் நீளமாகவும் வட்டமாகவும் கோடுகள் வரையவும்.
கிச்சன் டவலை நனைத்துப் பிழிந்து கேக்கைச் சுற்றிலும் போர்டைச் சுத்தம் செய்யவும். பாலட் நைஃப் தகட்டைச் சுற்றிப் பிடித்துக் கொண்டால் ஐஸிங்கில் பட்டுவிடாமல் சுலபமாகச் சுத்தம் செய்யலாம்.
ஏற்கனவே செய்து தயாராக வைத்துள்ள ஹொலி இலைகளையும் பழங்களையும் இடுக்கியால் எடுத்து ஆங்காங்கே வைத்து அலங்கரித்தால் க்றிஸ்மஸுக்கான அழகான யூல் லாக் (Yule Log) தயார். ஐஸிங் கேக்குகளிலேயே சுலபமான அலங்காரம் இதுதான். சிலும்பாமல் சீராகப் பரவ வேண்டும் என்னும் அவசியம் இல்லை. எந்த இடத்திலும் சரியாக வரவில்லையே என்று தோன்றாது. சாக்லேட் ஐஸிங் கூட சீராகக் கலக்காமல் அங்கங்கே விடுபட்டிருந்தால் மரப்பட்டை போலவே தான் தெரியும்.

<a href="/tamil/node/6343"> சாக்லெட் ஸ்விஸ் ரோல் </a>

<a href="/tamil/node/24927"> ப்ளெய்ன் ஸ்விஸ் ரோல் </a>

<a href="/tamil/node/24542"> ஹொலி இலைகள் & பழங்கள் </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்பிள் யூல் லாக் - கேக் டெகரேஷன்

சிம்ப்ளி சூப்பர்ப்... ஹொலி இலைகள் அழகு...

சீக்கிரமா கிறிஸ்மஸ் ப்ளம் கேக் ரெரிபி குடுங்க.. கிறிஸ்மஸ்க்கு முன்னயே ட்ரை பண்ணிப் பார்க்கணும் அப்போதான் அன்னைக்கு சொதப்பாம வரும்..:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இமாம்மா குறிப்பு. வீட்ல செய்யவே முடியாதுன்னு நான் நினைக்கிற ரெசிபி எல்லாம் அறுசுவைல வருது. சூப்பர் இமாம்மா. Yule லோக் கேக் வச்சா நல்லா சாப்பிடலாம். ஆமாம்மா, கனிமொழி சொன்ன மாதிரி, கிறிஸ்மஸுக்கு (எனக்கு) கேக் செஞ்சு குடுங்கம்மா.

உன்னை போல் பிறரை நேசி.

//கிறிஸ்மஸ்க்கு முன்னயே ட்ரை பண்ணிப் பார்க்கணும்// //கிறிஸ்மஸுக்கு கேக் செஞ்சு குடுங்கம்மா.// ரெண்டு பேரும் சிலேடைல போட்டுத் தாக்கறீங்க! ;))

//வீட்ல செய்யவே முடியாதுன்னு நான் நினைக்கிற ரெசிபி// அப்பிடி எதுவும் இல்லை. உண்மையில் இதனை ரோல் செய்முறையோடு தான் அனுப்ப நினைத்தேன். இருந்த படங்கள் போதவில்லை. இங்கும் ஏற்கனவே இரண்டு ஸ்விஸ்ரோல் ரெசிபி இருப்பது நல்லதாகப் போய்விட்டது. இதை மட்டும் அனுப்பிவிட்டேன். :-)

ப்ளம் கேக் ரெசிபி... நான் செய்தது இல்லை கனி. இருந்தாலும் உங்களுக்காக பார்க்கலாம். ம்.. அதை நாங்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்பதுதான் கொஞ்சம் இடிக்கிறது. ;)

‍- இமா க்றிஸ்

Imma super bakeryla order pannapolayiruku epadi ipadilam asathuringa thankyou thankyou

அருமை அருமை... க்றிஸ் அவங்களுக்கே கேக் கேட்கறாங்களா, இல்ல க்றிஸ்மஸ் பண்டிகைக்கு கேக் கேட்கறாங்களான்னே நேக்கு புரியல ;) எப்படியோ கேக் வந்தா எனக்கும் பங்கு கொடுத்துடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா,

சிம்ப்லி சூப்பர்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி கவிதா & நிஷா.

ஆமாம் வனி. அவங்களும் குழம்பி எங்களையும் குழப்புறாங்க. ;))

‍- இமா க்றிஸ்

கேக் டெகரேஷன் சிம்ப்ளி சூப்பர் இமா

மிக்க நன்றி வாணி. :-) இது போன வருடம் புதுத்தளத்தோடு வந்திருக்க வேண்டியது. இந்தியாவில் இருந்த வரை நெட் கிடைக்கவில்லை. அனுப்ப இயலவில்லை. இந்த முறையும் விட்டால் படங்களைத் தொலைத்துவிடுவேன் என்னும் பயத்தில் முன்பாகவே அனுப்பிவிட்டேன். :-)

‍- இமா க்றிஸ்