அறுசுவை தோழிகளே எனக்கு 11/11/2014 அன்று கடவுள் அருளால் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்.அவளுக்கு பெயர் வைக்க வேண்டும்.கே,கோ,ஹ,ஹி என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர்கள் கூறுங்கள்.
அறுசுவை தோழிகளே எனக்கு 11/11/2014 அன்று கடவுள் அருளால் அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்.அவளுக்கு பெயர் வைக்க வேண்டும்.கே,கோ,ஹ,ஹி என்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர்கள் கூறுங்கள்.
ரெமு
ஹாய் எப்படி இருக்கிறீனங்க ரெண்டூ பேரும்? நார்மல் தானே? குழந்தைய பார்த்துகொங்க. உங்க உடம்பையும் கவனிச்சுகொங்க.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
remu
Valthukal remu,
Harshini, harini, harshitha, hasini, hema
ரம்யா ஜெயராமன்
கிருஷ்ணாமெர்ஸி
நானும்,பாப்பாவும் ரொம்ப நல்லா இருக்கோம்.சிஸேரியன் ஆச்சுப்பா.நான் உடம்பை பார்த்துக்கிறேன்.பாப்பாவையும் பார்த்துக்கிறேன்.
எல்லா புகழும் இறைவனுக்கே
ரம்யா
ரொம்ப நன்றி ரம்யா.
எல்லா புகழும் இறைவனுக்கே
ரேமு வாழ்த்துக்கள்.நல்லபடியா
ரேமு வாழ்த்துக்கள்.நல்லபடியா பாப்பாவ பாத்துக்கங்க ரொம்ப சந்தோஷம் நான் கானும்னு தேடினேன்.உங்க உடம்பையும்பாத்துக்குங்க உங்க பெயர்கள் எனக்கு ஏதும் தெரியாது தோழிகள் சொல்வாங்காம்மா அதுல பாருங்க
remu
வாழ்துக்கள் ரெமு :) நலமோடு வாழ பிராத்தனைகள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
குழந்தைக்கு பெயர்கள்
வாழ்த்துக்கள்.
குழந்தைக்கு நான் வைக்க விழையும் பெயர்கள்
கோதை மலர், கோதைச்செல்வி; கோதையரசி, கோலமுல்லை, கோலவாணி, கோலமலர் கோலப்பொழில்
Information is wealth
ரேமு
ஹாய், ரேமு வாழ்த்துகள். குட்டி பிரின்சஸ்-ஸுக்கும் என் பிராத்தனைகள், ஆசிகள்....
உன்னை போல் பிறரை நேசி.
ரெமு
ரெமு உங்களைதான் நினைத்து கொண்டிருந்தேன் நவம்பர் 21 வந்தால் டேட் முடியுதேன்னு......
ரொம்ப ரொம்ப சந்தோஷம். ......சந்தோஷமாக இருங்கள். ...
அழகான தேவதை வந்திருக்கிறாள் பத்திரமா பார்த்துகங்க. ......
வாழ்த்துக்கள். ........
அன்பு தோழி. தேவி
வாழ்த்துக்கள் ரெமு. குட்டி
வாழ்த்துக்கள் ரெமு. குட்டி தேவதைக்கு நான் ஹாய் சொன்னேன்னு சொல்லுங்க. கவனமா இருங்க.தண்ணியில அதிகம் புழங்காதிங்க.தையல் போட்ட இடத்தில் குளிக்கும்போது தண்ணீர் படாமல் பார்த்துக்கங்க.குளித்தப்பின் அந்த இடத்தில் தண்ணிர் இருந்தால் மெதுவாக துடைத்து எடுங்கள். டாக்டர் கொடுத்துள்ள பவுடரை தையல் போட்ட இடத்தில் போடவும்.உடம்பை பார்த்துக்கோங்க.