தேதி: November 20, 2014
சிறிய சங்குகள் மற்றும் சோழிகள்
ஐஸ்க்ரீம் ஸ்டிக்
கனமான அட்டை
ஃபெவிக்கால்
ஃபேர்ல் பேப்பரிக் பெயிண்ட்
ப்ரஷ்
படத்திலுள்ளவாறு அட்டையை பெரிய ஒரு ரூபாய் நாணய அளவுக்கு வெட்டி வைக்கவும். (எத்தனை பூக்கள் தேவையோ அதே எண்ணிக்கையில் அட்டையையும் வெட்டி வைத்துக் கொள்ளவும்).

வெட்டி வைத்துள்ள அட்டையின் நடுவில் ஃபெவிக்கால் தடவி சோழியை ஒட்டவும்.

அதனைச் சுற்றிலும் 6 சோழிகளை ஒட்டவும். பிறகு வெளிப்பக்கம் தெரியும் அட்டையை மறைத்து சுற்றிலும் சங்குகளை ஒட்டி நன்றாகக் காயவிடவும்.

இதே போல் உங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் ஒட்டி தயார் செய்து கொள்ளவும்.

ஐஸ்க்ரீம் ஸ்டிக்கை நீளவாட்டில் இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதனை படத்திலுள்ளவாறு பூவின் பின் பக்கத்தில் வைத்து காம்பு போல ஒட்டி காயவிடவும்.

காய்ந்ததும் உங்கள் விருப்பத்திற்கேற்ற நிறத்தில் ஃபேர்ல் பேப்பரிக் பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.

அழகான சீ ஷெல் ஃப்ளவர்ஸ் ரெடி.

Comments
பூக்கள்
யார் யோசனை இது? சூப்பர்! நீலநிறப் பூ அருமையாக இருக்கிறது.
- இமா க்றிஸ்
ரொம்ப அழகா இருக்கு
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு கலரும் ரொம்ப அருமையா இருக்கு சீ ஷெல் கிடைத்தால் கண்டிப்பா ட்ரை பண்ணிடுவேன் வாழ்த்துக்கள் By Elaya.G
ரொம்ப அழகா இருக்கு:)
ரொம்ப அழகா இருக்கு:)
டீம்
எனக்கு இந்த ஐடியா ரொம்ப பிடிச்சிருக்கு :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கிட்ஸ் க்ராஃப்ட்
அன்பு அறுசுவை டீம்,
அழகாக செய்திருக்கீங்க.
சில நாட்களுக்கு முன்னால, டி.வி.யில் - ஜெமினி கணேசன், ஜெயலலிதா நடிச்ச ‘கங்கா கௌரி’ திரைப்படம் பார்த்தேன். அதில் ஜெயலலிதா மீனவப் பெண்ணாக நடிச்சிருப்பார். அவருடைய தோடு, தொங்கட்டான், கழுத்து சங்கிலி, கை வளை என்று எல்லாமே சிப்பி, சங்கு - அதுவும் வித விதமான வடிவங்களில் இருக்கும் சங்குகளால் ஆன ஜுவல்லரி போட்டுக் கொண்டு வருவார்.
அது பார்த்ததுமே, நம்முடைய அறுசுவைத் தோழிகள் இதைப் பாத்தாங்கன்னா, சூப்பராக இதே போல செய்து விடுவாங்க என்று தோன்றியது.
யூ ட்யூபில் இந்தப் படம் பார்த்தால், அல்லது டி.வி.யில் பார்த்தால் ட்ரை பண்ணி, இங்கே போடுங்களேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
sea shell flowers
ரொம்ப அழ௧ா இ௫௧்கு வித்தியாசமா இ௫க்கு