தேதி: November 22, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பீட்சா பேஸ் - ஒன்று
பனீர் - ஒரு பாக்கெட்
சீஸ் - 50 கிராம்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். சீஸை நன்கு துருவிக் கொள்ளவும். (விரும்பினால் கடைகளில் கிடைக்கும் சீஸ் ஸ்லைஸைப் பயன்படுத்தலாம். இன்னும் நன்றாக இருக்கும்). மற்ற தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பனீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

காய்ந்த மிளகாயிலுள்ள விதைகளை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பனீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும்.

பீட்சா பேஸில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

அதன் பிறகு பொரித்த பனீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, அரைத்து வைத்துள்ள மிளகாயைத் தூவவும்.

அதன் மீது சீஸைத் தூவவும்.

கடைசியாக மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்..

சுடச்சுட பனீர் பீட்சா ரெடி.

Comments
revathy
Supernga :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவ்
வாவ். வெரி சிம்பிள். ஆனா நான் செய்யமுடியாதே. ஓவன் இல்லயே. இருந்தாலும் உங்க வீட்டுக்கு வரும் போது எல்லாம் ரெடி பண்ணனும். ஒக்கேயா. சூப்பரப்பு..
Be simple be sample
ரே சூப்பர் உங்கள் பிட்சா
ரே சூப்பர் உங்கள் பிட்சா
ரேவதி
கலக்கல் பீட்ஸா மா... பார்க்கும் போதே பசியை தூண்டுது..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ரேவ்
சூப்பரப்பு கலக்கல் :) இதே முறையில் தான் நானும் செய்வேன் குடமிளகாய் சேர்ப்பேன் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி
நீண்ட இடைவெளிக்கு பிறகு அறுசுவையில் என் சமையல் குறிப்பை பார்க்க சந்தோஷமா இருக்கு. இதை வெளியிட்ட அட்மிண் குழுவிற்கும் பாபு அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவதி
பீட்சா அருமை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
ரேவ்ஸ் அக்கா, பீட்சா
ஆஹா கலர்புள்ளா இருக்கே,
சூப்பர் ரொம்ப ஈஸியா இருக்கு.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
சிரிப்பு
ம்ஹும்! சிரிப்பு மிஸ்ஸிங். ;) இந்த ரெசிபி ட்ரை பண்ண மாட்..டேன். ;)))
- இமா க்றிஸ்
இமா அம்மா
அம்மா சிரிக்கிற மாதிரி தான் போடனும்னு ட்ரை பண்ணேன். சாஸ் அதிகம் விழ போகுதுன்னு பயந்துக்கிட்டே போட்டேன் இப்படி மொறப்பா ஆய்டிச்சி.. மன்னிச்சுசுசுசுசுசுசுசு..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
வனி, ரேவா
மிக்க நன்றி வனி..
நிச்சயம் ரேவா வீட்டிற்கு வாங்க செய்து தரேன். வந்துட்டு உடனே ஓடினால் கிடையாது. ஒரு நாள் இருந்தால் தான் பீசா. என்ன டீல் ஒகேவா..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
சுமி, சுவா
சுமி, சுவா நீங்க ரெண்டு பேரும் சமையல் புலிங்க உங்களை பார்க்கும் போது நான் ரொம்ப சின்ன எலிதான்.. உங்கள் அன்பான வாழ்த்திற்கு மிக்க நன்றி..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
முசி மற்றும் சுபி
முசி ரொம்ப நன்றிங்க.
சுபி மிக்க நன்றிம்மா.. ரொம்ப ஈசிதான் செய்து பாருங்க..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவதி
ரேவதி,
குட்டீஸ்க்கு ஏற்ற குறிப்பு
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா