2 3/4 வயது பையன் சாப்பிட மாட்டிகிறான் என்ன பண்றது தோழிகளே. ஆலோசனை கூறுங்கள் ப்ளிஸ் ப்ளிஸ்

என் பையன் சாப்பிடவே மாட்டிகிறான். .பால்&பிஸ்கட் மட்டும் தான் சாப்பிடுறான்.சாதம் தோசை இட்லி எதுவுமே சாப்பிடமாட்டிகிறான்.

சாப்பிட சொன்னால் வேணாம்னு ரொம்ப அடம்பிடிக்கிறான்....பால் தோசை, பிரியாணி, இதுன்னா கொஞ்சம் சாப்பிடுறான். ..

என்ன பண்ணலாம்? தோழிகளே எப்படி சாப்பிட வைப்பது?

குழந்தை சாப்பிட‌ முதல்ல‌ பாலையும் பிஸ்கட்டையும் கண்ணில் படாம‌ பார்த்துக்கங்க‌. என் பிள்ளைகளும் பாலையே குடிச்சு சாப்பிடாம‌ இருந்தவங்க‌ தான். டாக்டர் ஒரு நாளைக்கு அதிக‌ பட்சம் இரண்டு முறை பால் கொடுங்க‌, அதுவும் குறைவா கொடுங்க‌. அப்ப‌ தான் சாப்பிடுவாங்கன்னு சொன்னார். பாலும் பிஸ்கட்டும் பசியை மந்தம் பண்ணிடும். பசி உணர்வே வராது. அதனால் கொஞ்ச‌ நாள் அதை கண்ணிலேயே காட்டாம‌ வைங்க‌. சாப்பாடு முதல்லன்னு சொல்லிடுங்க‌. மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வேளை சாப்பிடாம‌ அடம் பிடிப்பான்... பசிச்சா தன்னால‌ இருக்குறதை சாப்பிட‌ துவங்குவான். ஆரம்பிக்கும் போது அவனுக்கு பிடிச்ச‌ உணவுகளை கொடுங்க‌. கொஞ்சமா சாப்பிட்டாலும் பரவாயில்லை. மெதுவா மற்ற‌ உணவுகளை ஆரம்பிக்கலாம். பாவம் பார்த்தா கதை கந்தல் தான்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க சொல்றது //பாவம் பார்த்தா கதை கந்தல்தான் // கரெக்ட் தான் அக்கா. ..

நீங்க சொன்னதுபோல் செய்து பார்க்கிறேன் அக்கா. .ரொம்ப நன்றி அக்கா. ...

அக்கா ஒருவரே நிறைய தலைப்புகள் போட்டு கேள்வி கேட்கலாமா? ?? நானே நான்கு தலைப்புகளில் வெவ்வேறு சந்தேகங்கள் கேட்டு இருக்கேன். ...
பதில் கூறுங்கள் அக்கா. ...

அன்பு தோழி. தேவி

நீங்கள் கேட்க‌ நினைக்கும் கேள்வியை போல‌ ஏற்கனவே அருசுவையில் இருந்தால் அதிலேயே கீழ் உங்களது சந்தேகத்தையும் தொடரவும். இல்லையெனும் பட்சத்தில் புதிய‌ இழையை தொடங்கவும்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

அந்த மாதிரி நான் பார்க்கலைப்பா...நான் தொடங்கிய இழையெல்லாம் 10பக்கம் தாண்டியது அதன் புதிது ஓபன் பண்ணலாம்னு கேட்டேன். ..

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்