தேதி: November 25, 2014
பரிமாறும் அளவு: 15 - 20 சிறிய சமோசாக்கள்
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதா மாவு - 200 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி மசாலாவைத் தயார் செய்து வைக்கவும்.

மைதா மாவில் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பிசைந்து, சப்பாத்திக்கு திரட்டுவது போல் திரட்டி அரை வட்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய துண்டில் ஒன்றை எடுத்து, அதன் ஒரு பாதி விளிம்பில் தண்ணீர் தொட்டுக் கொண்டு, மறுபாதி விளிம்பின் மேல் வைத்து ஒட்டி கூம்பு போல் செய்து கொள்ளவும்.

அதனுள்ளே தயாரித்த உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும்.

பிறகு ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டிக் கொள்ளவும்.

இதே போல் மீதமுள்ள மாவிலும் மசாலாவை வைத்து தண்ணீர் தொட்டு ஒட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு சமோசா தயார்.

Comments
vidhya
Mudhal kurippukku vaazthukkal. Super. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Vidhya
செய்முறை விளக்கங்கள் அழகு. செய்து பார்க்கிறேன்!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
வித்யா,
என்னோட பேவரிட் சமோசா தான்,
நாங்க இன்னும் வெஜிடேபிள்ஸ் சேர்த்து செய்வோம்,
நீங்க ரொம்ப ஈசியா செய்து இருக்கீங்க...... அப்படியே எனக்கு தான்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
வனிதா
நன்றி வனி... :)
சுபி
என் வீட்டுக்கு வாங்க... அப்புடியே உங்களுக்கு தான்..
கிருஷ்ணா மெர்சி
செய்து பார்த்து சொல்லுங்கள் :)
ஹாய் அக்கா
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மை பேவரட் உருளைக்கிழங்கு வேக வைத்து பொடி பொடியாக நறுக்கி வதக்கனுமா.இல்ல அப்படியே பொடி பொடியாக நறுக்கி வதக்கனுமா சீரகம் போட்டு தாளிச்சா போதுமா கடுகு அப்புறம் மஞ்சள்தூள் வேண்டாமா
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
கனகமுத்து
வேக வைத்து நறுக்கி வதக்க வேண்டும்.. கடுகு,மஞ்சள்தூள்,கறிவேப்பிலை,சோம்பு,பட்டை எல்லாம் விருப்பத்திற்கு ஏற்றாற் போல போடலாம்.
வித்யா அக்கா
நான் இப்பொழுது தான் செய்து பார்த்தேன்.. சூப்பர்.. எல்லார்கிட்டயும் பாராட்டு வாங்கிக் கொண்டு இருக்கிரேன்.. நான் பாராட்டு வாங்க காரணம் தாங்கள் தான்.. அதற்கு நன்றி.. :) நான் அருசுவைக்கு புதிது இப்பகுதியில் பல உணவுகள் பார்த்து இருக்கிரேன்.. அனைத்தும் நன்றாக இருக்கும். ஆனால் பார்த்ததில் முதல் முதலாக செய்து பார்த்தது தங்களின் உணவே..
அன்பு வித்யா
முதல் குறிப்புக்கு வாழ்த்துகள்!
குறிப்பும், படங்களும் அருமை...
ஒரு நாள் அவசியம் செய்து பார்க்கிறேன்.
ஹாய் அக்கா
நானும் நேத்து செய்து பார்த்தேன்.உங்க அளவுக்கு வரவில்லை மாவு முக்கோண சேப் வரவில்லை பட் ஓரளவுக்கு வந்து இருந்தது
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
வித்யா
சமோசா பார்த்ததும் சின்ன பிள்ளங்கள்ல ஸ்கூல் கேன்டீன்ல சாப்பிடறது நினைவுக்கு வந்துட்டுது
முதல் குறிப்பிற்க்கு வாழ்த்துக்கள்
ஷபானா
நன்றி தங்கச்சி :) நான் அறுசுவைக்கும் புதிது , சமையலுக்கும் புதிது.. சும்மா ட்ரை பண்ணேன்.. :)
வாணி
நன்றி வாணி :)
கனக முத்து
நன்றி கனக முத்து :)
விப்ஜி
நன்றி விப்ஜி :)
samosa
Neengal seithathu polave try pannen. . Masala taste super.... but mel ulla maida maavu porithavudan hard ah irukku.... pls y nu sollunga ..... pls....