aautism doubts

Autism patri therindhavargal details share panunga. idhu genitic problem ah.
Vaccine kooda autism ku oru reason nu solaranga. Idhu endha alalavuku unmai.plz reply friends..

ஆடிசம் அப்படினா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

in today's news paper its clearly mentioned about autism

Be happy

ஆடிசம் நோய் ஒவ்வொறு குழந்தைக்கும் மாறுபடும். குழந்தைக்கு நன்றாக காது கேட்டாலும் நம்முடைய கண்களை நேருக்கு நேர் பார்க்காது, மற்ற குழந்தைகளை போலில்லாமல் பேச்சில் தடுமாற்றம் காணப்படும். வயதிற்கேற்ற communication இருக்காது. ஏற்கனவே சொல்லிய சிறு சொற்களைக் கூட சொல்லாமல் நிறுத்தி விடும்.(உதாரணத்திற்கு ம்மா, ப்பா)
) 18 மாததில் நோய் தொடங்கினாலும் 24 மாதத்தில் நோயை கண்டரிய முடியும் சீக்கிரம் இந்நோய் கண்டுபிடிக்கப் பட்டால் குணப்படுத்துவது சுலபம்
குழந்தையைக்கு இந்நோய் இருப்பதை குழந்தை நல மருத்துவர் அறிந்தவுடன் அவர் சொல்லும் ஸ்பஷலிஸ்டை பார்த்து அவருடய ஆலோசனைப் படி நடந்து கொள்ள வேண்டும்.

(டாக்டருக்கு படிக்குக்கும் பல மாணவர்கள் சில நோய் களைப் படிக்கும்போது அந்நோய் தனக்கு இருப்பதாக எண்ணிக் கொள்வார்கள், இப்பதிலை கண்ணுறும் இளம் தாய்மார்கள் தயை செய்து அதுபோல் எண்ணிக் கொள்ள வேண்டாம். )

Information is wealth

இந்தக் கேள்வியை முன்பே பார்த்தேன். பதில் சொல்லத் தோன்றவில்லை. யாராவது பதில் சொன்னால் பார்க்கலாம் என்று விட்டிருந்தேன்.

ஆடிசம் நோய் என்பதை விட... ஒரு கண்டிஷன்... குறைபாடு என்பது பொருத்தமாக இருக்கும். குழந்தைக்குக் குழந்தை அளவு வேறுபடும். சில குழந்தைகளைப் பார்க்க அவர்கள் ஆட்டிசக் குறைபாடு உள்ள குழந்தைகள் என்று தோன்றவே தோன்றாது. ஒவ்வொருவருக்கு ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து ஊக்கம் கொடுக்க முடிந்தால் நல்லது

ஒரு சின்னவர் இருந்தார். பழனி ஐயா சொன்னது போல முகம் பார்த்துப் பேசத் தயங்குவார். பன்னிரண்டு வயதில்... சொல்லிச் சொல்லி முகம் பார்த்துப் பேச வைத்தோம். அவருக்கு அபார வரைதற் திறமை இருந்தது. எதைக் கேட்டாலும் அடித்து வரையாமல், ஒரே தடவையில் அளவுகள் கச்சிதமாக வர வரைந்து கொடுப்பார். அது போல புகையிரதங்கள் பற்றி எந்த விபரம் கேட்டாலும் பதில் விரல் நுனியில் இருக்கும். இப்போது இங்குள்ள பல்கலைக்கழகத்தில் ஓவியத் துறை கற்கிறார். மென்மையானவர். பயம் என்பது அறியாதவர். தன் மனம் நொந்தால் முகத்திற்கு நேரே சொல்லிவிடுவார். :-)

இன்னொரு சின்னவர்.. உண்மையில் பெரியவர்தான். சிந்தனைக்கு மட்டும் ஆறு வயதாக இருந்தது. வாரம் ஒரு மிட்டாய் லஞ்சம் கொடுத்து முழு வாரமும் வேலை வாங்குவோம். :-) ஸ்பஞ்ச் பாப் பிரியர். பாடங்களிலும் ஸ்பஞ்ச் பாப்பைப் புகுத்தி சொல்லிக் கொடுப்போம். பேச்சு மிகவும் சிரமமாக இருந்தது. இரைச்சல் கேட்டால் அழுவார். படங்களில் கூட வன்முறை ஆகாது. ஆனால் செஸ் விளையாட்டில் அவரை அடிக்க எங்கள் பாடசாலையில் ஆள் இல்லை. இவர் விளையாட ஆரம்பித்தால் பார்க்க ஒரு பெரிய கூட்டம் கூடிவிடும். அவரை விசேட பாடசாலைக்கு மாற்றிய பொழுது... மிகப் பெரிய இழப்பாக உணர்ந்தேன். மிகக் கனிவான குழந்தை. இப்போது பத்தொன்பதாவது பிறந்தநாள் வருகிறது. அண்ணா இன்னும் பாடசாலை போகிறார் என்றார் அவரது தம்பி.

இந்தத் தம்பிக்கும் ஆட்டிசம் இருக்கிறது. தமையன் போல இல்லாமல் சற்றுக் குறைந்த அளவில் இருக்கிறது. இவர் நோட்டுகளைப் பார்த்தால் சொல்ல முடியாத அளவு சுத்தமாக இருக்கும். அளவாக, அழகாக எழுதியிருப்பார். தப்பாக எதுவும் இராது. ஒன்றில் விடை தெரியும் அல்லது தெரியாது. பிழை என்பது இவருக்குத் தெரியாத விடயம். அதே போல வீட்டுவேலைகள் செய்யாமல் வர மாட்டார். எதையும் மறந்து விட்டு வர மாட்டார். ஆடை சுத்தம். மரியாதையான போக்கு. இவர் முகம் பார்த்துப் பேசுவார். நகைச்சுவைப் பேச்சுப் பிடிக்கும். இன்று காலை ஒன்றுகூடலில் அதிக சான்றிதழ்கள் இவருக்குத்தான் கிடைத்தது.

இன்னொருவர் இருந்தார். அவருக்குத் தான் தன் வயதொத்த மற்றவர்கள் போல இல்லை என்பது புரிந்திருந்தது. அதைக் கவலையாக வெளிப்படுத்துவார். எதிர்காலத்தில் மற்றவர்களில் தங்கியில்லாது ஓரளவு சுயமாக இருப்பதற்குத் தயார் செய்யும் விதமாக இவருக்கான கற்றல் முறைகள் அமைந்திருந்தன. சில வருடங்கள் இசைக்கருவிகள் விற்கும் கடையில் வேலை செய்தார். இவருக்கேற்றது போல சுலபமான வேலைகளாகக் கொடுப்பார்கள். அவர் அடிக்கடி சொல்லுவார்... தன்னால் அதிக காலம் எதையும் நினைவில் வைத்திருக்க முடிவதில்லையாம். அதனால் என்னையும் விரைவில் மறந்துவிடுவாராம். :-)

எத்தனை விரைவில் கண்டறிய முடியுமோ அத்தனை விரைவில் கண்டறிந்து சிகிச்சைகளை, பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டும். கூடவே குடும்பத்தார், கூடக் கற்போர் ஆதரவும் இருக்க வேண்டும். முன்னேற்றம்... ஆள் ஆளுக்கு வித்தியாசமாகத்தான் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

Autism என்பது நோயல்ல என்பது உண்மைதான் அது ஒரு குறைபாடே.Thank you Mrs Imma for the correction.

Information is wealth

Autisam kulanthikalukku sirappu pallikal irukkinrathu. Avarkalukku enru oru tani ulgam , tani thramai irukkum. Kadavul intha pillaikalai mikavum alakaka padaithu vitukirar. 6varudakal en payanukku nan delay development tharapy eduthan. Appothu kuraipadu ulla pillaikali parthu vrathanai adaithan . Intha varthaikattala en iranthu pona makan patta vathanakal ennai vattum. kadavul sirupillkalai vathanai paduthuvathu sakika mudiyala

Idhu genitic problem ah.
Coceive ah irukkum pothu vara problem ah. Ila baby pirandha aparam vara problem ah. Baby kubpodara thaduppu oosi kooda idhukku reason nu solaranga. Unmaiya. Please details venum.

--

//kubpodara thaduppu oosi// இது என்ன ஊசின்னு புரியலயே!

//genitic problem// வரலாம். முன்பு இப்படியான ஒரு தாயையும் மகனையும் சந்தித்திருக்கிறேன். ஆட்டிசக் குறைபாடுள்ள இரண்டு சகோதரர்களைக் கற்பித்திருக்கிறேன். இருவரும் வேறு வேறு குணாதியசயங்களைக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு குறைபாட்டின் சாயல் துளியும் இல்லாத மூத்த சகோதரி இருக்கிறார். கட்டாயம் குடும்பத்தில் எலோருக்கும் இருக்க வேண்டும் என்பது இல்லை.

//Coceive ah irukkum pothu// வரலாம். //baby pirandha aparam // கூட தெரிய வரலாம்.

‍- இமா க்றிஸ்

//sirappu pallikal irukkinrathu.// ஆமாம். ஆனால் கட்டாயம் எல்லோரையும் அங்கு சேர்த்துத்தான் கற்பிக்க வேண்டும் என்பது இல்லை. மெய்ன்ஸ்ட்ரீமிலேயே கூட கற்கவைக்கலாம்.

//Avarkalukku enru oru tani ulgam// வாழ்க்கையில் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் அந்தத் தனி உலகிலிருந்து வெளியே வரத்தானே வேண்டும்! அவர்களும் சமுதாயத்தின் ஒரு பகுதி அல்லவா! எத்தனை காலத்திற்குப் பெற்றோரின் ஆதரவு இருக்கப் போகிறது!

எந்தக் குழந்தைக்கு எது நல்லது என்பது குழந்தையின் தேவையைப் பொறுத்தது. கூடுமானவரை சமுதாயத்தோடு இயைந்து போகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

Enoda friend odo akka ku twins. Adhula oru payanuku autism. Ipo ava conceive aaka payapadaraa. Avalukum pirakara baby kum adhe problem varumo nu. Vaccine podaradhu naalayum autism vara chance irukku nu net la padichadha sonna

--

மேலும் சில பதிவுகள்