பிறந்தநாள் கேக்

தேதி: November 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சதுர வடிவ கேக்
பட்டர் க்ரீம் ஐஸிங் - 3 கப்
சாக்லேட் சிப்ஸ் - ஒன்றரை மேசைக்கரண்டி
வெந்நீர் - சிறிது
ரிப்பன்
ஃபாண்டன்ட் - 2 கைப்பிடி அளவு
பைப்பிங் பாக்
ஸ்டார் நொஸில் (No. 27)
பாலட் நைஃப்
டூத் பிக்
பேப்பர் டவல்


 

கேக்கை ஃபோர்டில் வைத்து சுற்றிலும் ஐஸிங் பூசிக் கொள்ளவும். (நிறத்திற்காக ஐஸிங்குக்கு சிறிது சாக்லேட் கலந்திருக்கிறேன்). மீதி ஐஸிங்கில் அரைக் கப் அளவு தனியாக எடுத்து வைக்கவும்.
சாக்லேட் சிப்ஸை 30 நொடிகளுக்கு சூடாக்கி (ப்ளாஸ்டிக் பாத்திரம் பயன்படுத்த வேண்டாம்) ஐஸிங்கோடு கலந்து குழைக்கவும். முழுவதாகக் கலக்கத் தேவையில்லை. இந்த ஐஸிங் கலவையைக் கொண்டு கேக் முழுவதையும் ஐஸ் செய்து கொள்ளவும். பாலட் நைஃபால் ஐஸிங்கைத் தேய்த்து சீராக்கவும். கேக் போர்டைச் சுத்தம் செய்துவிட்டு ரிப்பனை கேக்கின் கீழ் ஓரம் சுற்றி ஒட்டிவிடவும். ரிப்பன் ஒட்ட ஆரம்பிக்கும் இடத்திலும் முடிவிடத்திலும் சிறிது ஐஸிங் தடவி ஒட்டவும்.
தனியாக எடுத்து வைத்த ஐஸிங்கைக் கொண்டு மேல் விளிம்புகளிலும், ஓரங்களிலும் ஸ்டார் நொஸில் (No. 27) கொண்டு பைப் செய்து கொள்ளவும்.
ஃபாண்டன்டில் சிறிதளவு எடுத்து உருட்டி, ஸ்க்ரூ ட்ரைவர் கைப்பிடி போலவும், தண்டு போலவும் தனித்தனியாக செய்து எடுக்கவும்.
பிறகு கைப்பிடியையும், தண்டையும் இணைத்து ஒட்டிக் கொள்ளவும். (இரண்டும் பொருந்தும் இடத்தில் சிறிது ஈரம் தொட்டு ஒட்டினால் ஒட்டிக் கொள்ளும்).
ஸ்க்ரூவின் தலைகளுக்கு மூன்று சிறு துண்டுகளை வட்டமாக உருட்டி, தட்டையாக்கி விட்டு, நடுவே கத்தியால் அழுத்திவிடவும்.
மேலும் சிறிது ஃபாண்டன்ட் எடுத்து உருட்டி, தட்டையாக்கி, பாலட் நைஃபால் வாளின் தகடு போல வடிவமைத்துக் கொள்ளவும். பற்களை வெட்டி சீராக்கிவிடவும்.
வாளுக்குப் பொருத்தமான அளவில் பிடியையும் வடிவமைத்து எடுக்கவும்.
ஈரம் தொட்டு வாளுடன் கைப்பிடியை இணைத்து ஒட்டிக் காயவிடவும்.
சிறிது ஃபாண்டன்டை உருட்டி சுத்தியலின் தலை போல செய்து, முன்பக்கம் தட்டையாக்கி வளைத்துக் கொண்டு கெவர் போல வெட்டிப் பிரிக்கவும்.
அதற்கு ஏற்ற அளவில் தண்டும் கைப்பிடியும் செய்து கொள்ளவும்.
சிறிது நீர் தொட்டு மூன்று துண்டுகளையும் ஒட்டிக் காயவிடவும். விரும்பினால் டூத் பிக் கொண்டும் இணைக்கலாம்.
இரண்டு பக்கமும் கூராக வருவது போல சிறியதும் பெரியதுமாக சில துண்டுகள் உருட்டி எடுக்கவும்.
அவற்றைப் பாதியாக நறுக்கிக் கொண்டு ஒவ்வொரு துண்டுக்கும் ஏற்ற அளவில் தலைகளைச் செய்து ஒட்டிக் கொண்டால் ஆணிகள் கிடைக்கும்.
நீளமாக உருட்டியதை U வடிவத்தில் வளைத்தால் அள்ளுகள் கிடைக்கும்.
கேக்கில் மேல் பரவலாக அனைத்தையும் வைத்து அலங்கரிக்கவும். தேவையானால் சிறியதும், பெரியதுமாக ஸ்க்ரூ தலைகள் செய்து வெற்றிடங்களை நிரப்பலாம்.

தச்சுவேலையில் அதிக ஈடுபாடுள்ள என் தந்தையாரின் பிறந்தநாளுக்காக செய்த கேக் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிறந்தநாள் கேக் ...

//தச்சுவேலையில் அதிக ஈடுபாடுள்ள என் தந்தையாரின் பிறந்தநாளுக்காக செய்த கேக் இது.///

அவ்வளவு நேர்த்தியா பொறுமையா செய்து இருகீங்க‌.. கிரியேட்விட்டி குயூன் இமாம்மா வேலை எப்பொதும் போல‌ வெகு அழகு...

சூப்பர் ரெசிபி ..

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கேக் மிக‌ அருமை . எலலா திரமயும் உஙகலிடதில் இருகிரது இமாமா. ஏனகு பொராமையாக இருகிரது உனக்ல் தி ரமையை நினைது

இம்மா ஒரு பேக்கரி ஒப்பன் பன்னலாமே ஒஹோனு போகும்.அருமை உங்க திரமையை இன்னும் நிரைய பன்ன வாழ்த்துக்கள்

கேக் ரொம்பவே சூப்பர், அதுவும் நீங்க‌ டூல்ஸ் செய்து அலங்கரித்துள்ளது இன்னும் சூப்பர். எல்லா டூல்ஸ்யையும் ரொம்ப‌ நேர்த்தியா செய்துருக்கீங்க‌, அதிலும் ரம்பம் அழகா வந்துருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

என்னோட‌ அப்பாவும் தச்சு வேலை தான் நீங்க‌ செஞ்சு வைச்சு இருக்குறா அந்த‌ திங்கஸ் எல்லாம் ரம்பம் மற்றும் சுத்தியல் பாக்கும்போது அழகா இருக்கு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

கருத்துக்கு என் அன்பு நன்றிகள் கனி & ஹசீனா. :-)

//ஒரு பேக்கரி ஒப்பன் பன்னலாமே ஒஹோனு போகும்.// அவ்வ்! ;) நான் ரெடி. அசிஸ்டண்ட்டா நீங்க வரீங்களா! நன்றி நிஷா. :-)

//ரம்பம் அழகா வந்துருக்கு.// ;) இமா அதுதானே சுபி! அதான் அழகா வந்து இருக்கு. ;))

//என்னோட‌ அப்பாவும் தச்சு வேலை தான்// அப்போ அடுத்த பிறந்தநாளைக்கு நீங்க இதே கேக் பண்ணிக் கொடுக்கறீங்க, அப்படித்தானே கனகமுத்து! ட்ரை பண்ணுங்க. :-) என் அப்பா ஓய்வுபெற்ற ஆசிரியர். தச்சுவேலை அவருக்கு பொழுதுபோக்கு. என் கணவர் & பையனுக்கும் ஈடுபாடு இருக்கு.

‍- இமா க்றிஸ்

சரி இமாம்மா எனக்கு அவ்வளவு சமையல் தெரியாது.கேக் எல்லாம் என்ன‌ பொறுத்தவரை செய்வது அபூர்வம்.இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக‌ கத்துகிட்டு வரேன்.கணவர் வெளிநாட்டில் இருப்பதால் நான் அம்மா வீட்டில் தான் இருக்கேன்.இப்பதான் உங்க‌ சமையல் மற்ற‌ தோழிகள் எல்லாம் பாத்து சின்னசின்ன டிஸ் கத்துக்கிட்டு இருக்கேன்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!