சோயா கத்தரிக்காய் பிரட்டல்

தேதி: November 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

சோயா - 100 கிராம்
கத்தரிக்காய் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 4 பற்கள்
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க


 

சோயாவை சுடுநீரில் ஊற வைக்கவும். ஊறியதும் நீரைப் பிழிந்துவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கத்தரிக்காயை நீரில் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சோயா துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். 2 நிமிடங்கள் கழித்து தீயைக் குறைத்து விட்டு, நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் மிளகாய்த் தூளைச் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு நீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் வற்றியதும் பொரித்த கத்தரிக்காயைச் சேர்த்துக் கிளறிவிட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
சுவையான சோயா கத்தரிக்காய் பிரட்டல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ரெசிபி, ரொம்ப‌ டேஸ்டியா இருக்கும் போல‌ ...
வித்தியாசமான‌ டிஸ்ஸா இருக்கு, விருப்ப‌ பட்டியல்ல‌ சேர்த்தாச்சு...

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி.....

நன்றி சுமி . டேஸ்ட் ஆ இருக்கும் செய்து பாருங்க...

சோயா கத்தரிக்காய் பிரட்டல் செய்தாச்சு, டேஸ்ட் சூப்பர். படம் அறுசுவை முகப்பக்கத்தில் இணைத்துள்ளேன். நல்ல‌ சுவையான‌ ஈசியான‌ குறிப்புக்கு வாழ்த்துக்கள் தர்ஷா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

செய்து பார்த்து கருத்து கூறியதற்கு நன்றி. படம் பாத்தேன் மேலே எழுதி இருந்ததை வாசிக்க இல்லை. இப்போ தான் பார்த்தேன். சந்தோசமா இருக்கு.

தர்சா,
வித்தியாசமான காம்போ
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

சோயா ரெசிபி எதாவது தேடனும்னு நினைத்து வந்தேன். முகப்புலேயே பார்த்துவிட்டேன். எளிமையான‌ செய்முறை.
வாழ்த்துக்கள் செய்த‌ உங்களுக்கும் செய்யப்போகிற‌ எனக்கும்!
நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

கலக்குறீங்க தர்ஷா. இரண்டுமே பிடிக்கும். அதனால் தனித்தனியாகவே தான் சமைத்திருக்கிறென். கட்டாயம் முயற்சி செய்து பார்ப்பேன்.

‍- இமா க்றிஸ்

அன்பு தர்ஷா,

வித்தியாசமான‌ குறிப்பு. பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

KavithaUdayakumar, பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

Krishnamercy, பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி. செய்து பார்த்துட்டு சொல்லுங்கள் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி இம்மாம்மா. செய்து பாருங்க. நல்லா இருக்கும்.

பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சீதாம்மா..