எனது நோயாளி ஒருவருக்கு இரண்டு கால் பாதம் அடியில் கட்டை விரலில் இருந்து குதிகால் வரை வரும் நரம்பு பிடித்து கொள்கிறது அந்த நேரத்தில் விரல்கள் விறைப்பாக ஆகி வலியை ஏற்படுத்துகிறது, அதே போல் கை விரல்களும் சில சமயம் விறைப்பாக உள்ளது ஆனால் வலி இல்லை. அவரது உயரம் 180, எடை 54kg பத்து வருடங்களாக இதை விட்டு தாண்ட முடியவில்லையாம், அவருக்கு தூரப் பார்வை , தலை முடி கொட்டுகிறது அளவுக்கு அதிகமாக, அவ்வபோது மலச்சிக்கலும் உள்ளது. அவர் சாப்ட்வேர் துறையில் பணிபுரிகிறார். இதற்கு இயற்கை உணவு மருத்துவத்தில் மருந்து உள்ளதா?
நரம்பு தளர்ச்சி
நீங்கள் ஒரு acupuncture டாக்டர். உங்களுக்கு நரம்பு சம்பத்தமாக எல்லா விபரமும் தெரிந்திருக்கும்.
அவருடைய சக்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறாதா என்று பார்க்கச் சொல்லுங்கள்.
எனக்கு கிட்டதட்ட இது போல் பிரச்சனை உள்ளது, ஆனால் சக்கரையின் அளவு கட்டுப்பாட்டில் உள்ள போதும் இப்பிரச்சனை உள்ளதால் டாக்டர்களுக்கு வியப்பாக உள்ளது.
சீரகம், மிளகு, தனிய தூள் , சுக்கு, கொத்த மல்லி, புதின. இஞ்சி, வெள்ளை பூண்டு, வெந்தாயம், துளசி இவைகளையெல்லாம் ஒரு தேக்கரண்டி வைத்து குடிக்கும் நாள்களில் எனக்கு வலி குறைகிற்றது. இரண்டு கோப்பை தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காலையில் குடித்து பார்க்கச் சொல்லுங்கள். இதை குடிக்கும் நாட்களில் எனக்கு வலி அதிகமாகத் தெரிவதில்லை. நன்றாகும் என நம்புகிறேன்,
உங்கள் நோயாளிக்காக நீங்கள் காட்டும் அக்கரை மனதை நெகிழ வைக்கிறது.
Information is wealth
நன்றி தோழரே
நன்றி தோழரே.
நரம்பு தொடர்பாக
திரு.ஆனந்தன் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் கூறியுள்ள அனைத்தும் கால் பிடிப்பு விறைப்பு வலி இதெல்லாமே எனக்கும் அவ்வப்போது வரும்.போகும்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆசிரியப்பணியில் இருந்ததால் என்று நானும் அதைப்பற்றி அவ்வளவாக சிந்திக்காது விதியே என்று தான் விட்டுவிட்டேன், ஆனால் மருத்துவத்தைப் பொறுத்த வரை முழுக்க ஓமியோபதி என்பதால் எனக்கு அவ்வளவாக தொல்லை தெரியவில்லை.(நான் உண்ட ஓமியோபதி மருந்தில் ஏதோ ஒன்று அதைக் குணப்படுத்தி இருக்கலாம் ) உங்கள் நண்பர் சாப்ட்வேர் துறை என்பதால் அதன் விளைவாகக் கூட இருக்கலாம்,
மலச்சிக்கல் தீர்ந்தாலேயே எல்லாத்தொல்லையும் தீரும் என்று நினைக்கிறேன். இரவில் கடுக்காய் லேகியம் (சித்தா, ஆயுர்வேதத்தில் கிடைக்கும்) அதில் கொடுத்த அளவு இரவில் மட்டும் சாப்பிட சிக்கல் தீரும். இல்லையானால் பொடியாகக் கிடைத்தாலும் மூன்று சிட்டிகை அளவு இரவில் படுக்கும் போது தேன் அல்லது வெல்லத்தில் கலந்து சாப்பிடலாம். வெறும் தண்ணீரில் கலந்து குடித்தாலும் நல்லதே. காலைக்கடனை தொல்லையில்லாமல் முடிக்கலாம்.
இதிலேயும் நாட்டு மருத்துவம் சன் டி வி அதையும் பார்க்கலாம் என்பது எனது
தாழ்மையான கருத்து.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.