உல்லன் ப்ரேஸ்லெட்

தேதி: December 1, 2014

5
Average: 4.3 (3 votes)

 

ப்ளாஸ்டிக் ப்ரேஸ்லெட்
உல்லன் நூல் - விரும்பிய இரண்டு நிறங்களில்
ஸ்டோன்
ஃபெவிக்கால்
கத்தரிக்கோல்

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ப்ளாஸ்டிக் ப்ரேஸ்லெட்டின் உட்புற முனையில் சிறிது ஃபெவிக்கால் வைத்து விரும்பிய நிற உல்லன் நூலை ஒட்டிவிட்டு, 3 அல்லது 4 சுற்றுகள் நூலைச் சுற்றவும்.
4 சுற்றுகள் சுற்றியதும் நடுவில் ஸ்டோன் வைத்து ஒட்டிவிட்டு, தொடர்ந்து நூலைச் சுற்றவும். (ஸ்டோனின் இடைவெளியில் ப்ரேஸ்லெட் தெரியாதவாறு சுற்றவும்).
குறிப்பிட்ட அளவு வரை நூலைச் சுற்றிவிட்டு நறுக்கிவிடவும். பிறகு நூலைப் பின்புறமாக நன்கு இறுக்கமாக இழுத்து ஃபெவிக்கால் வைத்து பிரியாதவாறு ஒட்டிவிடவும்.
அந்த நூலை ஒட்டிய இடத்தில் மற்றொரு நிற நூலின் முனையை ஒட்டி, ஏற்கனவே சுற்றியது போல குறிப்பிட்ட அளவு வரை சுற்றிவிட்டு, நூலை நறுக்கிவிட்டு பின்புறமாக இழுத்து ஃபெவிக்கால் வைத்து ஒட்டிவிடவும்.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே சுற்றிய நூலை ஒட்டி மீண்டும் சுற்றவும்.
ப்ரேஸ்லெட்டின் மற்றொரு முனை வந்ததும் ஆரம்பிக்கும் போது சுற்றியது போல ஸ்டோன் இல்லாமல் 3 அல்லது 4 சுற்று நூலைச் சுற்றி நூலை நறுக்கிவிட்டு பின்புறமாக இழுத்து ஃபெவிக்கால் வைத்து ஒட்டிவிடவும்.
எளிதில் செய்யக்கூடிய அழகான உல்லன் ப்ரேஸ்லெட் தயார். நம் உடையின் நிறத்திற்கேற்ப ஸ்டோன் மற்றும் நூலைத் தேர்ந்தெடுத்து சுற்றிக் கொள்ளலாம். பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு செண்பகா. விடுமுறையில் முயற்சி செய்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்

அழகான இருக்கு.பிடிச்சிக்கு நானும் முயற்ச்சி செய்தேன்.ஸ்டோன் கிடைக்கல உங்க ஐடியாவிற்கு ரொம்ப நன்றி. Facebook ல
படம் போடுறேன்