ஹாய் தோழிகளே

நான் கண்ணாடி போட்டு இருப்பேன்.என்னோடது பவர் கிளாஸ் இதுக்கு நிரந்தராமாக லேசர் ட்ரீட்மென்ட் அல்லது கிளாஸ் போடாமா வேற‌ ஏதாவது வழி இருக்கா தோழிகளே

நான் கண்ணாடி போட்டு இருப்பேன்.என்னோடது பவர் கிளாஸ் இதுக்கு நிரந்தராமாக லேசர் ட்ரீட்மென்ட் அல்லது கிளாஸ் போடாமா வேற‌ ஏதாவது வழி இருக்கா தோழிகளே

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

கிளாஸ் போட விருப்பம் இல்லை என்ரால் contact lenses try பண்ணி பார்கலாம்.

லேசர் ட்ரீட்மண்ட் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உங்கள் பவர் மாறாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படி இருந்தால் செய்து கொண்டு கண்ணாடி இல்லாமல் இருக்கலாம். எனக்கு தெரிந்த ஒருவர் செய்து கொண்டார். இல்ல எனில் தோழி சொன்னது போல காண்டாக்ட் லென்ஸ் போடலாம். அதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். கண்ணை தேய்த்து விட கூடாது, சரியாக பொருந்த வேண்டும், சுத்தமாக பயன்படுத்த வேண்டும்... இன்னும் நிறையவே. தோழி ஒருவர் ஒரு முறை தொலைந்தே போயிற்று ஒரு கண் சரியாக தெரியவில்லை, என கீழே விழுந்து விட்டது என்று தேடிக்கொண்டிருந்தார்... கடைசியில் அது அவர் கண்களிலேயே முன்னால் இல்லாமல் உழண்டு எங்கோ போயிருந்தது... சில மணி நேரம் கழித்து இப்போது தெரிகிறது, என தடவி பார்த்து லென்ஸை கண்ணிலேயே கண்டு பிடித்தார். எனக்கு பார்க்கவே பயமாக இருந்தது. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கு உள்ள கேள்வி - லென்ஸ்சுக்குப் பதில் லேசர் சிகிச்சையைப் பற்றியது. அப்படித் திருத்த முடிந்தாலும் அது 'நிரந்தரத்' தீர்வாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது. 'நிரந்தரமாக' சரியாக இருப்பதும் மீண்டும் பார்வையில் மாற்றம் வருவதும் ஒருவரது பரம்பரை, அவர் செய்யும் வேலை, உணவு, மூப்பு என்று பலதிலும் தங்கியிருக்கிறது அல்லவா! சிலருக்கு வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் கண்ணாடி அணியும் தேவை வருவதில்லை. சிலருக்கு குழந்தைப் பருவத்திலேயே தேவைப்படுகிறது.

முப்பது வருடங்களுக்கு முன்பு கண்ணாடி அணிய ஆரம்பித்தேன். அதன் பிறகு எத்தனையோ தடவைகள் கண்ணாடி மாற்றியாகி விட்டது. ரீடிங் மாறி இருக்கவில்லை. இப்போதுதான் முதல் முறையாக மாற்றம் பிரச்சினையாகத் தெரிகிறது. வயதுதான் காரணம் என்பது சந்தேகமில்லாமல் புரிகிறது. முன்பு போல நுணுக்கமான வேலைகளைத் திருத்தமாகச் செய்ய இயலவில்லை. கண்ணாடி மாற்றியாயிற்று. ஆனாலும்... இப்படி ஒரு 'நிரந்தரத் தீர்வு' இருக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று என்னால் நினைக்காமலிருக்க முடியவில்லை. :-) பேராசை!! ;)) அப்படி ஏதாவது. இருக்குமானால் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். யாராவது கண்மருத்துவர்கள் இதைப் படித்தால் கருத்துச் சொல்லுங்களேன்.
~~~~~~~~~
லேசர் சிகிச்சை பற்றிக் கொஞ்சம் தெரியும். செபாவும் லேசர் சிகிச்சை செய்திருக்கிறார் - வேறு பிரச்சினைக்கு. காட்டராக்ட் ஆப்பரேஷன் முடிந்த சில வருடங்களின் பின் திரும்ப பார்வை தெளிவில்லாமல் போயிற்று. அப்போது, காட்டராக்ட் செய்த பின் அவ்வாறு ஆகலாம் என்றார்கள். லேசர் சிகிச்சையின் முன் கண் எப்படி இருந்தது என்பதை பரிசோதிக்கும் போது அவர்களது மெஷின் வழியாக என்னையும் பார்க்க வைத்தார்கள். சிகிச்சை முடிந்து வெளியே வந்ததுமே அவர் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருந்ததை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ட்ரீட்மண்ட் முடிந்த சில வாரங்கள் கழித்து அவர்கள் சொன்னபடி செபா கண்ணாடியை மாற்றினார்.

‍- இமா க்றிஸ்

ரெம்ப‌ நன்றி பதில் அளித்தமைக்கு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நான் இப்பொழுது தான் 2 வருடங்களாக தான் கண்ணாடி போட்டு இருக்கேன். நான் பார்க்கும் வேலையும் அப்படிதான் கம்யூட்டர்லா வேலை பார்க்குறேன்.அதான் கேட்டேன்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

கனகமுத்து

Zyoptix ட்ரீட்மன்ட் பர்மனன்ட் என்கிறார்கள். அனேகமானவர்களுக்கு மீண்டும் சிகிச்சை வேண்டியிருப்பதில்லையாம். ஐந்து முதல் பத்து சதவீதமாவர்களுக்கு மட்டும் மீண்டும் சின்னதாக திருத்தம் செய்யவேண்டியிருக்கும் என்கிறார்கள். சிகிச்சைக்குப் போவீர்களாக இருந்தால் அதனோடு தொடர்பான உங்கள் அனுபவங்களை இங்கு பதிவு செய்யுங்கள். மற்றவர்களுக்குப் பயன்படும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்