ஹைக்கூ கவிதை

பெண் ஓவியம்

தமிழ் மொழி உயர்வானது. உன்னதமானது. இலக்கியதில் தமிழுக்கு பல‌ சிறப்புப் பெயர்கள் உண்டு. முத்தமிழ், செம்மொழி, உயர் தனி செம்மொழி, தனித்தமிழ் என்று பல‌ அழகுப் பெயர்கள் உண்டு. ஆனால் நாமோ சென்னைத் தமிழ், நெல்லை தமிழ், கொங்குத் தமிழ், தூத்துக்குடி தமிழ் என்று எத்தனை வகைப்படுத்த‌ முடியுமோ அத்தனை வகைப்படுத்தி விட்டோம்.

தொல்காப்பியர்,அகத்தியர்,நக்கீரர்,திருவள்ளுவர்,பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகியோர் வளர்த்த‌ தமிழ் நம் தமிழ்மொழி. அவர்களால் படைக்கப் பட்ட‌ காப்பியங்கள் ஏராளம். வைரமுத்து, மேத்தா போன்றோர் படைத்த‌ ஹைக்கூ கவிதைகள் பாராட்டுக்கு உரியது. இந்த‌ அவசரக் காலத்தில் பொறுமையாக‌ படிப்பது குறைந்துவிட்டது. வேகமாக‌ படித்து, அதன் கருத்தை மட்டுமே தெரிந்துக்கொள்ள‌ ஆசைப்படுகிறார்கள். அதன் விளைவே ஹைக்கூ கவிதைகள்.

நான் படித்த‌, ரசித்த‌ கவிதைகள்,

''வீட்டைக் கூட்டிப் பெருக்கி சுத்தப் படுத்தினாள் இல்லத்தரசி
வீடு சுத்தமானது,
வீதி குப்பையானது.''

''நான் உன்னைப் பார்த்தேன்,என்னை மறந்தேன்
உன் தங்கையை பார்த்தேன், உன்னையே மறந்தேன்''

என்னுடைய‌ கவிதைகள்,

அபலைப் பெண்

உன் குடும்பத்தில் தேட‌ வேண்டிய‌ அன்பை
வெளியில் தேடுகிறாய்
காதலன் கள்ளத்தனமாய் வாங்கிக் கொடுத்த‌
ஐஸ் கீரிமில் கரைந்தும் விடுகிறாய்
உண்மை அன்பை நீ உணர்வதற்கு முன்
அழிந்தும் விடுகிறாய் அபலைப் பெண்ணே.

கல்வி

கற்றது கை மண் அளவு என்றனர் சிலர்
கற்ற அளவிற்கு மேல் சாதித்தும் காட்டினர் பலர்
கையளவு கல்வியே சாதிக்கும் போது
பை அளவு கல்வி பெற‌ முயற்சி செய்
அன்று சாதனை பட்டியலே உன் வசம் இருக்கும்.

பசி

தொழிலாளி கவலைப் படுவது உடல் வலிக்கு அல்ல‌
தன் வயிற்றுப் பசிக்கே.
முதலாளி கவலைப் படுவது வயிற்றுப் பசிக்கு அல்ல‌
தன் உடல் வலிக்கே.

பெண்

பெண்ணே நீ கூழாங்கல் அல்ல‌, வீதியில் வீசுவதற்கு
நீ ஒரு பொக்கீஷம், அதை தெரிந்துக் கொள்
அன்னை, தந்தை அன்பு வளையத்தில் இருக்கிறாய்
அண்ணன், தம்பி அன்பு கவசத்தில் இருக்கிறாய்
அதை நீ அறிந்தும், புரிந்தும், தெரிந்தும் கொண்டால்
உன் வாழ்க்கை உன் வசப்படும்.

5
Average: 4.5 (4 votes)

Comments

௧விதை ரொம்ப அழகா இருக்கு
பசி...பெண் என்ற 2 ௧விதையும் எனக்கு பிடித்துள்ளது

ML

அன்பு ரஜ்னி மேடம்,

நல்ல‌ கருத்துக்களை நயமான‌ கவிதைகளாக‌, பகிர்ந்து கொண்டிருக்கீங்க‌. பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

சின்னதாக ஒரு ஆக்கம். படிக்கச் சுலபமாக இருந்தது; சுவாரசியமாகவும் இருந்தது.

//நாமோ சென்னைத் தமிழ், நெல்லை தமிழ், கொங்குத் தமிழ், தூத்துக்குடி தமிழ் என்று எத்தனை வகைப்படுத்த‌ முடியுமோ அத்தனை வகைப்படுத்தி விட்டோம்.// இது எந்த மொழியானாலும் இருக்கவே செய்யும் என்று நினைக்கிறேன். தமிழ் வகைப்படுத்தப்படவில்லை. வாழிடத்தையும் கலாச்சாரத்தையும் ஒட்டி மாற்றம் பெற்றிருக்கிறது. (ஆங்கிலத்திலும் இது போல இருக்கிறது.)

சமீப காலத் தமிழ் பற்றிக் குறிப்பிடவில்லையே ரஜினி! :-) தமிங்கிலம் இருக்கிறது, என் போன்றோர் ;) தேவை கருதிப் பயன்படுத்தும் இலங்கை இந்தியக் கலப்புப் பேச்சுத் தமிழ் இருக்கிறது. :-))

//... --- ஆகியோர் வளர்த்த‌ தமிழ் நம் தமிழ்மொழி.// :-) ஆறுமுக நாவலரும் இன்னும் பலரும் கூட இருக்கிறார்கள். :-)

‍- இமா க்றிஸ்

நல்ல‌ பதிவு.. வாழ்த்துக்கள்.

////பசி‍‍‍‍‍==தொழிலாளி கவலைப் படுவது உடல் வலிக்கு அல்ல‌
தன் வயிற்றுப் பசிக்கே.
முதலாளி கவலைப் படுவது வயிற்றுப் பசிக்கு அல்ல‌
தன் உடல் வலிக்கே//// நல்ல‌ கவிதை.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வட்டார பாஷைகள் இங்கு ஆங்கிலேயர்களிடமும் உள்ளன. அதை பேசுவதை பெருமையாகவும் கருதுகிறார்கள்.

ஹைக்கு கவிதைகள் படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

அபலைப் பெண் - உண்மை வரிகள்.

//இந்த‌ அவசரக் காலத்தில் பொறுமையாக‌ படிப்பது குறைந்துவிட்டது. வேகமாக‌ படித்து, அதன் கருத்தை மட்டுமே தெரிந்துக்கொள்ள‌ ஆசைப்படுகிறார்கள்//.

அதனால் தான் உரை நடை வந்தது.
முன்னாடியெல்லாம் எல்லாமே செய்யுள் வடிவம் தானே. எதுகை, மோனை , உவமை இப்படி நயம்பட‌ கவி எழுதுவாங்க‌.

நல்ல‌ பதிவு ரஜினி

//கையளவு கல்வியே சாதிக்கும் போது
பை அளவு கல்வி பெற‌ முயற்சி செய்
அன்று சாதனை பட்டியலே உன் வசம் இருக்கும்//.

அருமையான‌ வரிகள் மா!!!

"Patience is the most beautiful prayer !!!"

ஹாய்,

//கவிதை ரொம்ப‌ அழகா இருக்கு///பாராட்டுக்கு நன்றிபா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,
நல்ல‌ கருத்துக்களை நயமான‌ கவிதையாய் பகிர்ந்துக்கொண்டீர்கள்////பாராட்டுக்கு நன்றிமா

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

இமா,
//தமிங்கலம் இருக்கிறது என் போன்றோர் தேவை கருதி பயன்படுத்தும் இலங்கை இந்தியக் கலப்புப் பேச்சுத் தமிழ்/// இது உண்மை தாங்க‌. நான் மறந்து விட்டேன்.என் பதிவு சுவார்சியமாக‌ இருந்தது என்று பாராட்டியமைக்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

///நல்ல‌ கவிதை///பாராட்டுக்கு நன்றி.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

ஹாய்,

//அபலைப் பெண்//உண்மை வரிகள்// பாராட்டுக்கு நன்றிமா.

கடல் அளவு ஆசை
கையளவு மனசு

நீங்க ஆணா பெண்ணா தெரியவில்லை. ஆனால் கவிதை superrrrr..

:-) சிவப்பு நிறத்தில் இருக்கும் பெயரை க்ளிக் பண்ணினால் ப்ரொஃபைல் தெரியும்.

‍- இமா க்றிஸ்

எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு ரஜனி .
//பை அளவு கல்வி பெற‌ முயற்சி செய்
அன்று சாதனை பட்டியலே உன் வசம் இருக்கும்.//தட்டி எழுப்பும் வரிகள். //பெண்ணே நீ கூழாங்கல் அல்ல // யெஸ் .பெண்கள் பெண்களின் அடக்குமுறைகளை யும் அல்லல்களையும் சொல்லிக்காட்டுவதை விட அதிகமாக இவ்வாறான வெளிப்பாடுகள் தான் பெண்களை மேலும் உயர்த்தும் என்பது சிறு வயது முதல் என்னுள் பதிந்தது . அதனால் இவ்வாறான வரிகளை விதைப்பவர்கள் மேல் ஒரு மதிப்பு வந்து விடுகிறது . பாராட்டுக்கள் .

மேலே அந்தப் படம்... அழ..கா இருக்கு.

‍- இமா க்றிஸ்