மட்டன்/சிக்கன் பிரியாணி

நான் இணையத்தளத்தில் சொன்னது போல் பல முறை பிரியாணி செய்து பார்த்தேன். ஆனால் சுவை மணம் கடைகளில் வாங்கும் பிரியாணி போல் வருவது இல்லை.
எப்படி சுவையான,மணமாண பிரியாணி மிகவும் எளிமையான முறையில் செய்வது?

எப்படி இருக்கின்றீர்கள் அருள்?கடையில் கிடைக்கும் பிரியாணியைப் போல் நம்மால் செய்யத்தான் முடியுமே ஒழிய அதன் ஒரிஜினலான சுவையை பெற முடியாது. கிட்டத்தட்ட தான் அதனைப் போன்ற சுவையுடன் செய்யலாம். நானும் பல முறையில் செய்துப் பார்த்து விட்டேன்.
இணைய தளத்தில் ஒராயிரம் பிரியாணி குறிப்புகள் இருக்கலாம். அவை அனைத்தும் அவரவர்களுக்கு பிடித்த குறிப்புகளே தவிர கடைகளில் உள்ளதுப் போன்று அமைய வேண்டும் என்று நாம் எதிர் பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். அதர்க்கு பதிலாக நாம் எங்கு எந்த உணவகத்தில் அதன் சுவையை சுவைத்தோமோ அங்கு அவர்களிடம் அந்த குறிப்பு கிடைத்தால் அப்பொழுதுக் கூட ஓரளவிற்க்கு தான் ரிசல்ட் கிடைக்கும் என்பது என் கருத்து. காரணம் பாட்டியம்மா செய்தது போல் அம்மாவால் செய்ய முடிவதில்லை.அம்மா செய்தது போல் மகளால் செய்ய முடியாது. என்ன தான் கூட இருந்து பார்த்தாலும் சுவையில் கட்டாயமாக மாற்றம் இருக்கும்.
ஆகவே தாங்கள் செய்து பார்த்த குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதை மீண்டும் மீண்டும் செய்து பார்த்தீர்களானால் பிறகு உங்கள் ருசிக்கு ஏற்ப்ப அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மாற்றி அதன் சுவையை மாற்றிக் கொள்ளலாம். நிச்சயமாக பலன் கிடைக்கும். என்னுடைய இந்த கருத்து தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்ன செய்வது பிரியாணியின் பவர் அப்படி. நாம் விரும்பும் எந்த பொருளும் கஷ்டப்படாமல் கிடைக்காது நண்பரே, நன்றி.

சுகமாக இருக்கின்றேன். தங்களின் பொறுமையான விளக்கத்திற்கு மிகவும் நன்றி. நீங்கள் எப்படி பிரியாணி செய்விர்கள்? உங்களது குறிப்பை விளக்குங்களேன்.

தங்களுடய ஆதங்கம் புரிகிறது, மனோகரி மேடம் சொன்னதுபோல் பல முறை செய்து பார்க்கும்போது தங்களுக்கு புரிபடும் சோர்ந்து போகாமல் திரும்பதிரும்ப முயற்ச்சிக்கவும்,இஸ்லாமிய வீடுகளில் தயார் செய்யும் பிரியாணி செய்முறையெய் எனது குறிப்பில் குடுத்துள்ளேன் முயற்சியுங்கள் !வாழ்த்துக்கள்!

நன்றி திருமதி ரஸியா அவர்களே, தங்களின் மட்டன் பிரியாணி - 3 குறிப்பை படித்து பார்த்தேன்.
வரும் வாரம் அதுபோல் செய்து பார்க்கிறேன்.
ஓரு சின்ன சந்தேகம். தம் போடுவது எப்படி? மற்றும் அடி பிடிக்காமல் இறுக்க என்ன செய்ய வேண்டும்?
இறைச்சி மசாலா கலவை கெட்டியாக இருக்க வேண்டுமா அல்லது சாம்பார் போல் தண்ணியாக இருக்க வேண்டுமா?

here i will post how i used to prepare..i will give u 100% garranty that it will b tatsty n definitely satify ur tastebuds....cud someone plz how u people are typing in tamil...cud u plz tell me that software.

ingredients
Basmati rice - 1 kg
Water - For 1 cup of rice, add 1 1/2 cups of water
Chicken - 1 kg
(can also make it with mutton and fish)
Garam masala powder - 2 tsp
Ginger paste- 100 gm (3 tsp)
Garlic paste - 100 gm (3 tsp)
Curd - 1 cup
Lemon - 1 no
Tomato - 1/4 kg
(sliced)
Onion - 1/2 kg
(sliced)
Small onions(Kunjulli) - 1/4 kg
Green chillies - 5 nos
Coriander leaves - A bunch
Mint leaves - A bunch
Ghee - 100 gm
Oil - 1/4 lt
Nutmeg(Jathikka) powder - 1/4 tsp(optional)

For curd chutney:
Curd - 1 cup
Onion - 1/2 of one
Tomato - 1/4 of one
Coriander leaves
Salt - As reqd

preparation method
1)Soak the rice in water for about 2 hrs.

2)Mix the cleaned chicken with 1 cup of curd and some salt. Keep it aside.

3)Heat some ghee and oil in a large vessel.

4)Saute small onions, onion and green chillies together.

5)When the colour of the onion turns brown, add the ginger-garlic paste and saute well.

6)Add the tomatoes, coriander leaves and mint leaves and saute well, until all the ingredients mix together and the oil starts to separate.

7)Add garam masala and nutmeg powder.

8)Add the chicken pieces mixed with curd.

9)Mix well and cover the pan with a lid.

10)Cook for about 10 mins.

11)Stir it once every 10 mins.

12)When the chicken is half cooked, add water and allow it to boil.

13)Drain off the water from the rice and add to the boiling water.

14)Allow it to boil and when the rice gets quarter cooked, add the lime juice and close with the lid.

15)Simmer the flame and keep it for approximately 45 min(until cooked).

16)Stir occasionally once every 15 mins.

:-Serve with curd chutney

Thanks. For typing in Tamil is very easy. arusuvai.com provides a tool in its page. please scroll down the (arusuvai.com) page, in the bottom there is a vertical menu. In that menu please click எழுத்துதவி. You will get a tamil help window. In this page, there are two text areas available. One is tamil and the other one is english. In the page beginning they provided the tamil letter for the equivalent english letter. You can use this page to type, and then copy the tamil text and paste it where ever you need.

For Example: if you want to type நன்றி, please type the following in the english text area:
n-anRi
the translated tamil word நன்றி gets displayed in Tamil text area.

இறைச்சி மசாலா குருமாவைப்போல்,கெட்டியாக இருக்கவேண்டும்.
தம் போடுவது என்பது ஆவி வெளியேராமல் இருக்கமாக மூடி அந்த ஆவியிலேயே புழுங்க வைப்பதுதான்,உங்கள் அடுப்பு கியாஸ் என்றால் லேசாக தீயை வைத்துக்கொள்ளவும் சட்டியின் மேல் ஒரு ஈரமான துணியால் மூடி மேலே சட்டியின் மூடியால் இருகமாக மூடவும்.துணி கவனம் தீயில் படாமல் மேல் புரம் சட்டியின் மேலாக போடவும்.

அருள் அவர்களுக்கு மிக்க நன்றி. அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல், கீழே எழுத்துதவி என்று கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பினை சொடுக்கி, அதற்கான பக்கத்திற்குச் சென்று, தமிழில் எளிதாக டைப் செய்யலாம். இது தமிழ் தட்டச்சு பழகுவதற்கு உதவும் பக்கம். எப்போதும் இதையே பயன்படுத்துதல் சற்று கடினமாக இருக்கும். தமிழில் டைப் செய்யக் கற்றுக் கொண்ட பிறகு, தங்களது கணினியில் இ-கலப்பை(e-kalappai) என்னும் சிறு மென்பொருளை நிறூவிவிட்டால், அதன்மூலம் தாங்கள் நேரிடையாகவே தமிழில் டைப் செய்யலாம்.

மேலும் உதவியை கீழ்கண்ட விக்கிபீடியா பக்கத்தில் பெற்றுக்கொள்ளவும்.

<a href="http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help" target="_blank">தமிழ் எழுத்துதவிப் பக்கம் (விக்கிபீடியா) </a>

<a href="http://www.desikan.com/blogcms/wiki/help" target="_blank">மற்றொரு பக்கம் </a>

அருள்
அடிப்பிடிக்கமல் இருக்க தீயை சிம்மில் வைத்து செய்யவேன்டும் நானுன் ஒரு வகை பிரியாணி அளவு தருகிறேன் முயற்ச்சி செய்து பாருங்கள்

மட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)

மட்டன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணை - 200 கிராம்
டால்டா - 50 கிராம்
நெய் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி - 3 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு - 2 டேபுல் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொ. மல்லி - ஒரு கட்டு
புதினா - 1/2 கட்டு
ப. மிள்காய் - 8
தயிர் - 225 கிராம்
சிகப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
மஞ்ஜள் - 1 பின்ச்
ரெட்கலர் பொடி - 1 பின்ச்
எலுமிச்சை பழம் - 1
செய்முறை:
முதலில் சட்டி காய்ந்ததும் ஒரு விரல் அளவு பட்டை இரண்டு,க் கிராம்பு 3, எலக்காய் 2 போடவும். பிறகு நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும் நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியேதான் வைக்க வேன்டும்.
அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும். பிறகு கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும். அதன் பின் தக்காளி ப.மிளகாய் போடவும். இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்ஜள் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வேகவிடவும். நல்ல எண்ணையில் எல்லா பொருட்களும் வதங்கியவுடன் மட்டனை போடவும். போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக முன்று நிமிடம் கிளறவும்.பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும்.
அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.
வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.
பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அரை எலுமிச்சை பழமும் ஊற்றவும்.
அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும்.
வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும்.

அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும் .உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், 1/2 எலுமிச்சை பழமும் பிழியவும்.வெந்ததும்
நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தல் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும். கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கிழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும் ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரன்டு டேபுள் ஸ்பூனில் கரைத்து துவிவிடவும்.அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.

ஜலீலா பானு

Jaleelakamal

தளிகா மேடம்,

நீங்கள் சிக்கன் பிரியாணியில் கொடுத்திருக்கும் ஒரு கப் தயிர் என்பது 100 கிராமா அல்லது 200 கிராமா.
மட்டன் அல்லது மீனில் செய்தாலும் அனைத்து தேவையான பொருட்களின் அளவுகளும் ஒன்று தானா.

ஜோயல்.

மேலும் சில பதிவுகள்