ஒயர் ரிப்பன் ஏஞ்சல்ஸ் - பாகம் 2

தேதி: December 4, 2014

5
Average: 5 (4 votes)

 

44 மி.மீ அகல ஆர்கன்ஸா ஒயர் ரிப்பன் (Organza Wire Ribbon) - 16 செ.மீ
3 மி.மீ அகல ரிப்பன் - 20 செ.மீ + 11 செ.மீ
வெள்ளை பைப் க்ளீனர் - 12 செ.மீ
கிஃப்ட் டாக் ஸ்ட்ரிங் (Gift Tag String) - 15 செ.மீ
அட்டை - 4 செ.மீ x 10 செ.மீ
வெள்ளை ஃபெல்ட் - 4 செ.மீ x 10 செ.மீ
உட்டன் பீட் (Wooden Bead) - ஒன்று (முகத்திற்கு)
க்ராஃப்ட் ஹேர் (Craft Hair)
அளவான காது வளையம் - ஒன்று
சிறிய மணிகள் - 2
லிபர்ட்டி பெல் (Liberty Bell) - ஒன்று
கம்பி - 15 செ.மீ
குறடு
கத்தரிக்கோல்
பேனா
ஹாட் க்ளூ கன்

 

ரிப்பனின் மேற்கரை வழியே ஓடும் கம்பி ஓரங்களிரண்டையும் பிடித்துக் கொண்டு ரிப்பனை நன்கு இறுக்கமாகச் சுருக்கிக் கொண்டு கம்பிகளைச் சேர்த்து முறுக்கி வைக்கவும்.
டாக் நூலை இரண்டாக மடித்து நுனியில் முடிச்சுப் போடவும்.
மணிகள் கோர்த்த ரிப்பன் துண்டையும் டாக் நூலையும் ஒன்றில் ஒன்றை சுருக்குப் போட்டு இணைக்கவும்.
இரண்டும் பொருந்தும் இடத்தில் பைப் க்ளீனரை இறுக்கமாகச் சுற்றி இணைக்கவும். சிறிது ஹாட் க்ளூ வைத்துவிட்டால் மூன்றும் விலகிப் போகாமலிருக்கும்.
ஆர்கன்ஸா ரிப்பனில் கைகளுக்காக வெட்டிய துளைகளினூடாக பைப் க்ளீனர் துண்டுகளை வெளியே எடுக்கவும்.
ரிப்பனிலிருந்து இழுத்து எடுத்த கம்பி வழியாகவும், டாக் நூல் வழியாகவும் முகம் வரைந்த மணியை நுழைத்து எடுக்கவும். முகம் சட்டையோடு இணையும் இடத்தில் ஹாட் க்ளூ வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
ஒட்டிய அடையாளம் தெரியாமலிருக்க, மேலும் சிறிது ஹாட் க்ளூ வைத்து போவை (bow) கழுத்தில் ஒட்டிவிடவும். பின்புறம் திருப்பி, கம்பியை சிறிதாக நறுக்கிக் கொண்டு தலையோடு சேர்த்து ஹாட் க்ளூவால் ஒட்டிக் கொள்ளவும்.
மணியைக் குறட்டால் பிடித்துக் கொள்ளவும். மணியின் கைப்பிடியில் ஹாட் க்ளூ வைத்து, க்ளூ இறுக ஆரம்பிக்கும் போது பைப் க்ளீனரோடு ஒட்டிவிடவும்.
வெட்டித் தயாராக வைத்திருக்கும் காது வளையத்தையும் (ஒளிவட்டத்திற்கு) தலைமுடிக்கான இழைச் சுருள்களையும் முகத்தின் பின்பக்கம் வைத்து ஒட்ட வேண்டும். இதற்கு க்ளூவை மணியில் வைத்து முதலில் வளையத்தைச் சரியான இடத்தில் பிடித்து இறுகும் வரை அசையாமல் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்பு மீண்டும் பரவலாக க்ளூ வைத்து இறுக ஆரம்பிக்கும் சமயம் இழைச் சுருள்களை வைத்து மெதுவாக அழுத்திவிட வேண்டும். அதிகமாக அழுத்தினால் க்ளூ விரலில் பட்டு இழையும் விரலில் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.
சட்டைப் பின் பக்கம் ஒன்றன் மேல் ஒன்றாக ரிப்பன் வரும் இடத்தில் ஹாட் க்ளூ வைத்து இரண்டையும் சேர்த்து ஒட்டவும். இறக்கையை ஒரு முறை நடுவில் மடித்து விரிக்கவும். பிறகு அதையும் ஹாட் க்ளூ கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.
ஹாட் க்ளூ இழைகள் நீண்டு தெரிந்தால் அவற்றை வெட்டி நீக்கவும். மணிகளின் ஓரங்களிலுள்ள முடிச்சுகளில் மேலதிகமாக இருக்கும் ரிப்பன் துண்டுகளை வெட்டி நீக்கவும். சட்டைச் சுருக்கத்தைச் சரி செய்யவும். முடியையும் சீராக்கி விட்டால் நத்தார் மரத்தை அலங்கரிக்க கடையில் வாங்கியது போலவே அழகான சம்மனசு தயார். ஒளிவட்டம் வைக்காமற் செய்தாலும் அழகாகவே இருக்கும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஒவ்வொரு பாகமும் அப்டேட்டாவதைப் கவனிச்சுட்டே இருந்தேன். :-) நிறைய படம்... ரொம்ப சிரமம் கொடுத்திருப்பேன் என்று தோணுது.
எடிட்டிங் சூப்பர். மிக்க நன்றி. :-)

‍- இமா க்றிஸ்

இமா,
வெள்ளை டிரெஸ் போட்டிருந்தால் தேவதை மாதிரி இருக்கும்.
சோ க்யூட்.
ரொம்ப‌ பொருட்கள் தேவைப்படுது. ரொம்ப‌ அழகா இருப்பதைப் போல‌....
விழிகளை ஏன் மூடி வைத்துவிட்டீங்க‌?

:-) //வெள்ளை டிரெஸ்// உண்மைதான், இன்னும் அழகாகத் தெரிந்திருக்கும் இல்லையா! என்னிடம் இருக்கும் வெள்ளை கம்பி ரிப்பன் சீத்ரூவாக இருக்கிறது. ஏஞ்சலுக்கு ஷேம் ஆக இருக்கும் என்று நினைத்தேன் ;)) மற்றது பேஜ்... அழுக்கு மாதிரி தெரிஞ்சுது. //விழிகளை ஏன் மூடி வைத்துவிட்டீங்க‌?// நான் மூடவில்லை. ;) நான் விரும்பியது... சிரிச்ச மாதிரி முகம். ஸ்மைலி வாய்.

நிகிலாவின் கமண்ட்... சுவாரசியமாக இருக்கிறது. ரசித்தேன். :-)

வீட்டில் இருந்த பொருட்களை வைத்துத்தான் செய்தேன் நிகிலா. இதற்கென்று எதுவுமே வாங்கவில்லை. இருக்கும் ஸ்டாக் எல்லாம் முடியும் வரை மிகவும் அவசியமானால் தவிர எதுவும் வாங்குவதில்லை என்கிற முடிவோடு இருக்கிறேன்.

ஐடியா கொடுக்கிறதுதான் என் நோக்கமா இருந்துது. கொடுத்தாச்சு. மீதி, செய்துகொள்ள நினைக்கிறவங்களைப் பொறுத்தது. அவங்கவங்களுக்குப் பிடிச்ச கலர் சட்டை & பிடிச்ச மாதிரி முகம் வைச்சு செய்துக்கங்க. செய்றவங்க மறக்காம க்ளோஸ்ட் க்ரூப்ல படம் போடுங்க. :-)

‍- இமா க்றிஸ்

தேவதைகள் அழகு... நேரமில்லை இப்ப எல்லாம் எதுவும் முயற்சி பண்ண, கிடைச்சா நிச்சயம் முயற்சி செய்து பார்க்கிறேன். கியூட். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//கிடைச்சா நிச்சயம் முயற்சி செய்து பார்க்கிறேன்.// ;) ட்ரீ வைக்கிறதானா ட்ரை பண்ணலாம். நன்றி வனி.

‍- இமா க்றிஸ்

simple and nice imma