வெஜிடபிள் சமோசா

தேதி: January 23, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (13 votes)

 

மைதா மாவு - ஒன்றரை கோப்பை
வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
உருகைக்கிழங்கு - அரைக் கிலோ
பச்சைபட்டாணி - முக்கால் கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - இரண்டு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - கால்தேக்கரண்டி
கரம்மசாலா - அரைத்தேக்கரண்டி
புதினா தூள் - அரைதேக்கரண்டி
அல்லது புதினா தழை - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு கோப்பை


 

இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும்.
அதன் பிறகு எல்லாத் தூளையும் போட்டு கிளறவும்.
பின்னர் மசித்த கிழங்கு கலவையை கொட்டி, கொத்தமல்லி, புதினாவை அத்துடன் சேர்க்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து, வேகவிட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும்.
பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 - 12 உருண்டைகள் செய்து வைக்கவும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல், ஆனால் மெல்லியதாக தேய்த்து, இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைகிழங்கு கலவையை வைத்து மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும்.
இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் சமோசக்களாக செய்து வைக்கவும். பிறகு ஒரு குழிவான சட்டியில் எண்ணெய்யை ஊற்றி, நன்கு காய வைத்து, பிறகு அடுப்பின் அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போடவும்.
அவை பொன்னிறமாக வேகும் வரை வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். பிறகு மீண்டும் அனலைக் கூட்டி, பின்பு குறைத்து மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும்.
சுவையான சமோசா தயார். குறைந்தது இருபது சமோசாக்களை இந்த அளவில் செய்யலாம். இதனுடன் இனிப்பு, காரம் கலந்த புளி சட்னி அல்லது புதினா கொத்தமல்லி சட்னியை பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.
அறுசுவையில் நூற்றைம்பதுக்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்துள்ள, இன்னமும் கொடுத்துக்கொண்டுள்ள திருமதி. மனோகரி ராஜேந்திரன் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர்.

தயாரித்த சமோசாக்களை உடனே செய்ய தேவை இல்லையென்றால் அதிகுளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்து, பிறகும் செய்யலாம். தயாரித்த, பொரிக்காத சமோசாக்களை ஒரு தட்டில் பரப்பி வைத்து ஃப்ரீசரில் பத்து நிமிடம் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இறுகி இருக்கும். அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் அல்லது டப்பாவில் வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து, பத்து நிமிடம் வெளியில் வைத்திருந்து பொரிக்கலாம். அல்லது மற்றொரு முறையில், அவனில் 300 டிகிரி Fல் பத்து நிமிடம் வைத்து அரைவேக்காடாக வேகவைத்து, பின்னர் நன்கு ஆறவைத்து,ஃபிரீசரில் எடுத்து வைத்தும் பிறகு பொரிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பின் மனோஹரி மேடம், சமோசா மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கும் இலகுவாக இருந்தது. உங்களுடைய இனிப்பு கார புளிச்சட்னியுடனும் திருமதி சுபா ஜெயபிரகாஷின் உடனடி கார சட்னியுடனும் சேர்த்து சாப்பிட நன்றாக இருந்தது. வாழ்த்துக்களும் நன்றியும்.
-நர்மதா :)

அன்பு தங்கை நர்மதா எப்படி இருக்கீங்க? இந்த சமோசா குறிப்பு மிகவும் சுலபமாக செய்யக்கூடியது தான்,இதை தாங்கள் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது,நன்றி.

அன்பு மனோஹரி மேடம்

உங்கள் vegetableசமோசா செய்து பார்த்தேன்.அருமையாக வந்தது.என் கணவர் என்னை மிகவும் பாராட்டினார்.மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

ஹலோ surthi எப்படி இருக்கீங்க?இந்த சமோசா குறிப்பை செய்து பார்த்து அனுப்பிய பின்னூட்டம், மிக்க மகிழ்ச்சியைத் தந்தது நன்றி. நேரம் கிடைக்கும் போது இதேப் போல் நிறைய்ய செய்து ஃபிரீசரில் வைத்துக் கொண்டால் உங்க வீட்டிற்கு வரும் திடீர் விருந்தினரிடம் கூட பாராட்டைப் பெறுவீர்கள் சரீங்களா.

திருமதி. ஜலிலா அவர்கள் இந்த செய்முறையின்படி தயாரித்த சமோசாவின் படம்

<img src="files/pictures/samosa.jpg" alt="Samosa" />

அன்பு சகோதரி ஜலீலா, இந்த சமோசா குறிப்பின் பின்னூட்டம் உங்கள் கை வண்ணத்தில் புகைப்படமாக வந்துள்ளதைப் பார்த்து மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. புகைப்படம் பார்க்க ரொம்ப அருமையாக இருக்கின்றது மிக்க நன்றி.

sudhasri
hi madam,i tried this dish,it turned out fantastic,my husband liked this very much,before using this i bought frozen one,my hus said it is exellent than frozen one,i like ur every dishes and tried one by one,i tried pepper chikken also,my husband said he didn't eat such a delicious chikken dish,thank u madam,i sent many feed backa,iwould like to talk with u...
sudhasri

sudhasri

உங்க பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியத் தந்தது, இந்த குறிப்பு உங்க கணவருக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சியே.நேரம் கிடைக்கும் போது குறிப்புகளை ஒவ்வொன்னா செய்துபாருங்க,செய்யவும் ரொம்ப சுலபமாய் இருக்கும். நிச்சயமாய் மன்றத்தில் என்னிடம் தாராளமாய் பேசலாம் மிக்க நன்றி.

வணக்கம் மேடம்
உடனே பதில் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,உங்களின் வெஜிடபிள் பிரிஞ்ஜியும் அருமை மேடம்,மீன் குழம்பும் சுவையாக இருந்தது,மிக்க நன்றி
சுதாஸ்ரீ

sudhasri

சமோசா

அட ஆமா நான் தான் பார்க்கல..

ஒகே ஒகே,,,மனோகரி அக்கா
சும்ம சொல்ல கூடாது நல்ல கிரிஸ்பியா இருந்தது.
என் பெரிய பையனுக்கு ரொம்ப பிடித்தது.
ஜலீலா

Jaleelakamal

veg samosa very nice.parkave romba attractiona iruku...