தேதி: December 9, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. கீதா ஆச்சலின் இந்த நூல்கோல் கூட்டு குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கீதா ஆச்சல் அவர்களுக்கு நன்றிகள்.
நூல்கோல் - 100 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
நசுக்கிய பூண்டு - 4
கடலைப்பருப்பு - கால் கப்
எண்ணெய் - அரை தேக்கரண்டி
கடுகு,சீரகம் - தாளிக்க
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 3 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
வெங்காயம், தக்காளியை அரிந்து கொள்ளவும். நூல்கோலின் தோலைச் சீவிவிட்டு சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தேங்காயுடன் பொட்டுக்கடலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி ப்ரஷர் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், நசுக்கிய பூண்டு தாளித்து, வெங்காயம், நூல்கோல், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

வதக்கியவற்றை வேக வைத்த கடலைப்பருப்புடன் சேர்த்து வேகவிடவும்.

காய் வெந்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு முறை கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

சுவையான நூல்கோல் கூட்டு தயார். சாதம், இட்லி, தோசை, சாப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Comments
நூல்கோல் கூட்டு
நூல்கோல் கூட்டு அருமை கவிதா. செய்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன்..:) வாழ்த்துக்கள் கவிதா..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வாழ்த்துக்கள்
இன்று கிச்சன் குயினாக மகுடம் சூடிய கவிதாவுக்கு வாழ்த்துக்கள்.
எல்லா குறிப்புகளுமே பார்க்கவே நல்லாயிருக்குங்க! நூல்கோல், முள்ளங்கி, நெல்லிக்காய் மற்றும் சால்ஸான்னு எல்லாமே ஹெல்தியான குறிப்புகள்.சூப்பர்.
கவிதா
நூல்கோல் கூட்டு அருமையா இருக்கு.கவிதா என்றாலே ஹெல்தி குறிப்பு கொடுப்பவர் தானே.இன்றைக்கு சமையல் ராணியாக முடிசூடிய உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.
Expectation lead to Disappointment
கவி
நூல்கோல் கூட்டு அருமை :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி @நூல்கோல் கூட்டு
எனது செய்முறை குறிப்பினை வெளியிட்ட அட்மின்,மற்றும் குழுவினருக்கு நன்றி
குறிப்பினை தந்த கீதா ஆச்சல் அவர்களுக்கு நன்றிகள்.
சுமி,
கண்டிப்பா சொல்லுங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.
அனு ,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.
மீனா,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.
ஸ்வர்ணா,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.
என்றும் அன்புடன்,
கவிதா