சல்ஷா (மெக்சிகன் உணவு)

தேதி: December 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஹவ்வா அலியார் அவர்களின் சல்ஷா என்கின்ற மெக்சிகன் உணவுக் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஹவ்வா அலியார் அவர்களுக்கு நன்றிகள்.

 

தக்காளி - 2
குடைமிளகாய் - பாதி
கொத்தமல்லித் தழை - ஒரு தேக்கரண்டி
மிளகாய் - 5
வெங்காயம் - பாதி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
சீனி - அரை தேக்கரண்டி
எலுமிச்சை - ஒரு மூடி


 

தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லித் தழை, மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை மிகச் சிறியதாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி, சர்க்கரை சேர்த்து ஆறவிடவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்துவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யாரிந்த சல்சா... எப்படி இருப்பாங்கன்னு ரொம்ப ஆவலா இருந்தேன் ;) சாலட் போல தெரியறார். எனக்கு சல்சா டான்ஸ் தான் தெரியும், குறிப்பு தெரியாது. ஹஹஹா. கவிதா... அழகா கலர்ஃபுலா செய்து காட்டி இருக்கீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

mexican dishலாம் செய்து இருக்கீங்க‌. super. அந்த‌ கடைசி பவுல் அழகா இருக்கு. congrats kitchen queen.

எல்லாம் சில‌ காலம்.....

சல்சா ரொம்ப‌ அழகா இருக்கிறது சிஸ்!
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ரொம்ப‌ எளிமையான‌ குறிப்பு.ஆனால் வித்தியாசமான‌ குறிப்பு.

Expectation lead to Disappointment

எனக்கு மெக்ஸிகன் உணவுகள் அதிகம் பிடிக்கும் கவிதா. எளிதான சத்தான குறிப்பு. ஆறு குறிப்புகளின் படங்களும் அசத்தலா வந்திருக்கு. வாழ்த்துக்கள்

சூப்பரான‌ குறிப்பு. படங்கள் கொள்ளை அழகு!
ப்ரெசென்டேஷனும் அருமை... கலக்குங்க‌:)

இந்த சல்சா எப்படி இருப்பார்ன்னு பார்க்க நானும் ஆவலா இருந்தேன் கலர்ஃபுல்லா இருக்கார் பவுல் அழகு அதில் இருக்கும் மிளகாய் வாலு அதைவிட அழகு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது செய்முறை குறிப்பினை வெளியிட்ட அட்மின்,மற்றும் குழுவினருக்கு நன்றி
குறிப்பினை தந்த ஹவ்வா அலியார் அவர்களுக்கு நன்றிகள்.

வனி ,
:) :)
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

பாலநாயகி ,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.

மெர்சி ,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

மீனாள் ,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

வாணி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

விப்ஜி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

ஸ்வர்ணா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா