அண்டா புர்ஜி

தேதி: December 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுகன்யா பிரகாஷ் அவர்களின் வித்தியாசமான அண்டா புர்ஜி குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுகன்யா பிரகாஷ் அவர்களுக்கு நன்றிகள்.

 

வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
முட்டை - 2
மிளகாய் - 2
குடைமிளகாய் - பாதி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு, சீரகம் - தலா கால் தேக்கரண்டி (பொடித்துக் கொள்ளவும்)
உப்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - அரை ஸ்பூன்
கடுகு - கால் தேக்கரண்டி
பால் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு


 

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித் தழை, மிளகாய் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும். முட்டையுடன் பால் மற்றும் உப்பு சேர்த்து நுரைக்க அடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன், வெங்காயம், மிளகாய், குடைமிளகாய் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.
வதங்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் பொடித்த மிளகு, சீரகம் போட்டு நன்கு வதக்கவும்
அத்துடன் அடித்த முட்டைக் கலவையை ஊற்றி, நன்கு கிளறி தனித்தனியே உதிர்ந்து வந்ததும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.
சுவையான அண்டா புர்ஜி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hi kavi akka unga anda purji super.yummmmmmyyyy.valthukal kitchen queen madam.....
Hi.inniki than na first comment paniruken.

வாழ்த்துக்கள் கவிதா.அழகான படங்களும் குறிப்பும்.

நாளைக்கே அண்டா புர்ஜி செய்துட‌ வேண்டியது தான்.குடைமிளகாய் தான் மிஸ்ஸிங்.

Expectation lead to Disappointment

நீங்க செலக்ட் பன்ன குறிப்புகள் ஒவ்வொன்றும் கலர் & பெயரும் வித்யாசமானவையா இருக்கு :) அண்டா புர்ஜி சூப்பரா இருக்கு படங்கள் பளிச் வாழ்த்துக்கள் கவி

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது செய்முறை குறிப்பினை வெளியிட்ட அட்மின்,மற்றும் குழுவினருக்கு நன்றி
குறிப்பினை தந்த சுகன்யா பிரகாஷ் அவர்களுக்கு நன்றிகள்.

வந்தனா ,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

தர்சா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

மீனாள் ,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

ஸ்வர்ணா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா