ஆந்திரா தக்காளித் தொக்கு

தேதி: December 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரோஜா கணபதி அவர்களின் ஆந்திரா தக்காளித் தொக்கு குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரோஜா கணபதி அவர்களுக்கு நன்றிகள்.

 

தக்காளி - 100 கிராம்
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 50 மில்லி
கடுகு - 50 மில்லி + ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
புளி - ஒரு எலுமிச்சை அளவு
எண்ணெய் - 25 மில்லி


 

தக்காளியுடன் புளியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
கடுகு மற்றும் வெந்தயத்தைத் தனித்தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், ஒரு தேக்கரண்டி கடுகு போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து, அடுப்பின் தீயைக் குறைத்து வைத்து கொதிக்கவிடவும்.
5 நிமிடங்கள் கொதித்தவுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
ஒட்டாமல் திரண்டு வரும் போது கடுகு, வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
ஆந்திரா தக்காளித் தொக்கு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆகா ஆகா... வருசையா நம்ம மக்கள் குறிப்பை முகப்பில் மகுடம் சூடி பார்க்கும் போது மனசு பறக்குது... மகிழ்ச்சியில். :) வாழ்த்துக்கள் மறூம் பாராட்டுக்கள் சுவா. இந்த வாரம் உங்க குறிப்பை மிஸ் பண்ணுவனேனு வருத்தமா இருக்கு... ஆனா நிச்சயம் அடுத்த பகுதியில் வருவீர்கள் என்று நம்பிக்கை இருக்கு.

படங்கள் எல்லாம் அழகா வந்திருக்கு. வித்தியாசமான குறிப்புகள்... எது எதுக்கு காம்பினெஷன், எல்லாம் சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க :) நாங்களும் செய்து பார்க்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான‌ தொக்கு.செய்துட்டு சொல்றேன்.

Expectation lead to Disappointment

இன்றைய‌ கிச்சன் குயின் எங்கள் சொர்ணாக்காவுக்கு வாழ்த்துக்கள்..:) குறிப்புகள் அனைத்தும் அருமை...:) படங்கள் பளிச்.. முகப்பு கலக்கல். வாழ்த்துக்கள் சுவா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அனைத்து குறிப்புகளையும் அழகா வெளியிட்ட அறுசுவை & டீம்க்கு நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி முதல் வாழ்த்திற்கு மிக்க நன்றி :)
தக்காளி தொக்கு அருமையாக இருந்தது சுவை சூப்பர் இது இட்லி,தோசை,தயிர்சாதம்,சாம்பார் சாதம் ,சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும். இந்த தொக்கு செய்துதான் உங்க ஃபுல்கா செய்தேன் செம காம்போ :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி கண்டிப்பா செய்ங்க மீனா இது ஒண்ணு செய்து வச்சிக்கிட்டா எல்லாத்துக்கும் தொட்டுக்கலாம் ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சுமி :)

/இன்றைய‌ கிச்சன் குயின் எங்கள் சொர்ணாக்காவுக்கு வாழ்த்துக்கள்..:)/
எத்தனை பேர்யா கிளம்பிருக்கீங்க இப்புடி ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருமையான‌ ரெசிபி.
இந்த‌ வாரத்தில் செய்துட்டு மீண்டும் பதிவிடுகிறேன்...
கிச்சன் குயினுக்கு வாழ்த்துகள்!

வாழ்த்துக்கள். சுவா..எச்சில் ஊறுது பார்க்கும்போதே.

Be simple be sample

ஓ... அப்படின்னா இன்னைக்கு இரவே பண்ணிடுவோம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பான வாழ்த்திற்க்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரேவா மிக்க நன்றி :) அடங்கவே மாட்டீங்க கர்ர்ர்ர் ;)

வனி செய்து பாருங்க நீங்களும் சொல்வீங்க சூப்பர்ன்னு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் சுவா சூப்பரா இருக்கு.. நீ செய்திருக்கும் விதம் பாரம்பரிய முறைபடி செய்ற மாதிரி இருக்கு. படங்கள் எல்லாம் சூப்பர்.. வாழ்த்துகள் செல்லம்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாழ்த்துக்கள் ஸ்வர்னா. உங்க‌ குறிப்பு அனைத்தும் அருமை. கங்ராட்ஸ் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

ரேவ் வாழ்த்திற்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றிங்க உங்க வாழ்த்திற்கு :)

//குறிப்பு அனைத்தும் அருமை// எல்லாம் அறுசுவை குறிப்புகள் இந்த பாராட்டெல்லாம் குறிப்பு கொடுத்தவங்களை சேரனும் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கள் கிச்சன் குயின் ஸ்வர்ணா.
எல்லா குறிப்புகளுமே கலக்கல், போட்டோஸும் நல்லா இருக்கு.
இந்த வாரம் கலந்துக்கலயா ஸ்வர்ணா?

வாழ்த்துக்கள் சுவர்னா.குறிப்புகள் அனைத்தும் அருமை..

ஆஹா...ஓஹோ...ம்... ரொம்ப‌ சுவையாக‌ இருக்கு.
ஆமாங்க‌, சாப்பிட்டுக்கிட்டே தான் பதிவிடுகிறேன். இனி எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த‌ தொக்கு தான்.
தேங்க்யூ...

வாழ்த்திற்கு மிக்க நன்றி :) உடம்பு சரியில்ல செண்பகா அதான் கலந்துக்கல :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆஹா செய்து சுவைத்தாச்சா சூப்பர்ங்க நன்றி நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.