ஸ்பூன் க்றிஸ்மஸ் ட்ரீ

தேதி: December 11, 2014

5
Average: 4.7 (3 votes)

 

சிறிய அளவிலான ஸ்பூன்
திக்கான அட்டை
பச்சை நிற பெயிண்ட்
ப்ரஷ்
க்ராஃப்ட் பன்ச்
ஃபோம் ஷீட்
தெர்மாகோல் பால்ஸ்
க்ளூ கன்

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். க்ராஃப்ட் பன்ச் கொண்டு ஃபோம் ஷீட்டில் டிசைன்ஸை பன்ச் செய்து எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் ஸ்பூனின் கைப்பிடி பகுதியை வெட்டி நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ளவும்.
அட்டையைக் கோன் போல செய்து, அதன் வாய்ப்பகுதி சமமாக இருக்கும்படி வெட்டிவிடவும்.
கோன் போல செய்து வைத்திருக்கும் அட்டையில் நுனியில் க்ளூ வைத்து, ஸ்பூனின் குழிவான பகுதி வெளியில் இருப்பது போல ஒட்டவும். முதலில் மூன்று ஸ்பூனைச் சுற்றிலும் ஒட்டவும்.
இதே போல் தொடர்ந்து அடுத்தடுத்து ஒட்டிக் கொண்டே வரவும்.
இடைவெளி எதுவும் இல்லாமல் சுற்றிலும் நெருக்கமாக ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு அட்டையின் மீது ஒட்டிய ஸ்பூன் முழுவதும் பச்சை நிற பெயிண்ட்டை அடிக்கவும்.
பெயிண்ட் காய்ந்ததும் ஒவ்வொரு ஸ்பூனின் மீதும் க்ளூ வைத்து பன்ச் செய்து வைத்துள்ள டிசைன்ஸ் மற்றும் தெர்மாகோல் பால்ஸை ஒட்டி அலங்கரிக்கவும்.
ஸ்பூனில் செய்த அழகான க்றிஸ்மஸ் ட்ரீ ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ்!!! ரொம்ப கியூட்டா இருக்கு :)

கீழே எதாவது வைக்க ட்ரை பண்ணிருக்கலாமோ?? பார்த்ததும் தோனுச்சு, கீழே மர கலரில் எதாவது... இன்னும் அழகு சேர்த்திருக்கும்னு நினைக்கிறேன்.... இதுவுமே ரொம்ப அழகு தான்... பெர்ஃபக்‌ஷன்னா அது செண்பகா & டீம் தான்... :) ஒன்னு போல இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Super a senji irukinga

ரொம்ப அழகா இருக்கு இந்த மரம். சூ..ப்பர் ஐடியா.

‍- இமா க்றிஸ்

//கீழே எதாவது வைக்க ட்ரை பண்ணிருக்கலாமோ??///நல்ல யோசனை எனக்கு இந்த ஐடியா தோணலையே:-) //பெர்ஃபக்‌ஷன்னா அது செண்பகா & டீம் தான்... :) ///என்ன தான் இருந்தாலும் உங்க அளவுக்கு இல்ல வனிதா. ரொம்ப நன்றி

நசிரா ரொம்ப நன்றி.

இமா அம்மா இது செய்யும் போது உங்களை நினைத்து தான் செய்தேன். கிறிஸ்மஸ்க்கு முன்னாடி போடனும்னு வெய்ட் பண்ணி இப்போ போட்டாச்சு. இது உங்களுக்காக (அட்வான்ஸ் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்):-)வாழ்த்துக்கு ரொம்ப நன்றி