ஹலோ தேவா மேம்,
எப்படி இருக்கீங்க?, எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? ஷ்ட்ரைட்னிங் ஜெல்(அல்லது கிரிமா?) எந்த ப்ரான்ட் நல்லா இருக்கும், ஷ்ட்ரைட்னிங் செய்த பிறகு முடிய செட் செய்ய, எந்த ப்ரான்ட் ஜெல், அதுக்கு பின் அப்லை செய்யும் பாலிஷ் கிரீம், இதெல்லம் சொல்லுவீர்களா?. நான் சொல்லி இருக்கும் ஷ்டெப்ஷ் சரியா என்று தெரியவில்லை, தவறாக இருந்தால், மன்னித்து , சொல்லுங்கள்.
thank you, so much
indigo powder
Grey hair Ku indigo powder use pannalama...black color kidaikuma..idhu chemical kalandhadha...yepadi use pandradhu...yenna brand nalla irukum nu solunga...pakka vilaivugal irukuma..sorry Tamil la type panna theriyala...
Wella brand straighting cream
Wella brand straighting cream use pannuga
Indica use pannalam ma grey
Indica use pannalam ma grey hair black ayidum sideeffect erukkathu ma root la padama hair mattum apply pannu ma
Romba nandringa...
Romba nandringa...
Sruthy - ஸ்ட்ரெயிட்னிங் ஸ்ப்ரே & க்ரீம்
ஹாய் Sruthy,
தலை குளித்தப் பிறகு முடியை டவலால் நன்கு துவட்டி விட்டு, L'Oreal Elvive Anti Frizz Serum (With Argan Oil) or Garnier Miraculous oil(With 230 deg Heat Protection) ஐ இரண்டு பம்ப் (ஐம்பது காசு அளவு உள்ளங்கையில்) அளவு எடுத்து நன்றாக முடிகளில் தடவுங்கள். இந்த பிராண்டுகள் கிடைக்காவிட்டால் Schwarzkopf, Tigibed, Redken, John Freida, Matrix, Elnett Heat Protecting Sprays (இது ஸ்ட்ரெயிட்னிங் செய்யும் முன்பு ட்ரை ஹேரில் உபயோகியுங்கள்) அல்லது ஆர்கன் ஆயில் கலந்த எந்த ஹீட் புரொடெக்ஷன் சீரமும் உபயோகிக்கலாம். தேங்காய் எண்ணெய் கலந்து இருக்கும் சீரம் அத்தனை நல்லாயிருக்காது. பிறகு நார்மலாக ஸ்ட்ரெயிட்னிங் செய்யலாம்.
ஸ்ட்ரெயிட்னிங் முடித்து விட்டு ஹேர் ஸ்ப்ரே அல்லது பாலிஷ் க்ரீம் உப்யோகியுங்கள். Wella (System Professional -SP brand),L'Oreal Smooth & Polish மற்றும் மேற்சொன்ன பிராண்டுகளில் கிடைக்கும் பாலீஷ் க்ரீமும் உபயோகிக்கலாம். ஆனால் வேர்க்கால்களில் படுமாறு எந்த க்ரீமும் உபயோகிக்க வேண்டாம். Pearl Finish, Diamond Finish என்று பல வகைகளில் கிடைக்கும். நல்ல பலன் கிடைக்க தரமான ஸ்ட்ரெயிட்னர் மிக அவசியம்.
jaikarthi - இண்டிகோ ஹேர் கலர்
இண்டிகோ டை நரை முடிகளை வரவிடாமல் தடுக்காது. முழுக்க ஹெர்பலும் இல்லை. இயற்கையாக வேண்டிமென்றால் கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய், கருவேப்பிலை, மருதாணி சேர்த்து அரைத்து உருண்டைகளாக்கி காய வைத்து வீட்டில் உபயோகிக்கும் தேங்காய் எண்ணெயில் ஊற விட்டு அந்த எண்ணெய்யை உபயோகியுங்கள். எண்ணெய்யை காய்ச்ச வேண்டாம். நிச்சயம் பலன் கிடைக்கும். நரையை தடுத்தல் முடியாது. மங்கலாக தெரிய வைக்க முடியும். நல்ல தரமான ஹேர்டையை உபயோகியுங்கள். கார்னியர் ஹெர்பாஷைன் அல்லது Olia போன்ற ஹெர்பல் எக்ஸ்ட்ராக்டுகள் உள்ள டையை உபயோகியுங்கள். முதலில் ஸ்கின் அலர்ஜி போன்றவை வருகிறதா என்று patch test பண்ணூங்க. சிறிதளவு எடுத்து கொஞ்சமாக அப்ளை செய்து டெஸ்ட் பண்ணுங்க. உங்க ஸ்கின்னில் எந்த அலர்ஜியும் ஏற்படலைன்னா உபயோகிக்க ஆரம்பியுங்கள். சிலருக்கு டை அலர்ஜியில் கன்னம் கருப்பாகி விடும். அதனால் பேட்ச் டெஸ்ட் அவசியம். ஹெர்பல் எக்ஸ்ட்ராக்டுகள் உள்ள தரமான பிராண்டுகள் உபயோகியுங்கள், பார்லர் செல்லும்போதும் நீங்கள் உங்கள் பிராண்டையே எடுத்து சென்று போட சொல்லுங்கள்.
hai deva mam
தோழிகளே ஒரு சில பேருக்கு முடி லூஸ் கேர் விட ரெம்ப பிடிக்கும்.ஆனால் தலைக்கு குளித்த அன்னைக்கு மட்டும்தான் போட முடியும்.ஆனால் ஒரு சில பேர் பீரி கேர் விட்டு இருப்பாங்க பார்க்க எண்ணெய் தேய்ச்ச மாரியும் இருக்கும் அன்ட் சைனிங்காகவும் இருக்கும்.அந்த மாதிரி வேணும்னு நம்ம எந்த மாரி கேர் கீரிம் யூஸ் பன்னனும் சொல்லுங்க தோழி.
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
நன்றி தேவா மேம்
மிக்க மிக்க நன்றி தேவா மேம், நான் செய்து விட்டு எப்படி வந்தது என்று சொல்கிறேன் மேம்
நன்றி
ஃப்ரீ(லூஸ்) ஹேர் ஸ்டைல் - kanagamuthu
ரொம்ப சுலபமா லூஸ் ஹேர் ஸ்டைல் வெச்சுக்கலாம். முடி அடர்த்தி அதிகம் இல்லாதவங்க ப்ளோயரில் ஹேரை செட் செய்து (பார்லர் சென்றோ, வீடியோ பார்த்தோ கற்றுக் கொள்ளுங்கள்) கொள்ளலாம். அதிகமா அடர்த்தி, சுருட்டை முடி உள்ளவங்க ஸ்ட்ரெயிட்னிங் பண்ணிக் கொள்ளலாம். ரெண்டுக்குமே ஹேரை ட்ரீட் பண்றதுக்கு முன்னாடி மேலே சொன்ன ப்ரொடெக்ஷன் ஸ்ப்ரே, க்ரீம் அல்லது ஆயில் அப்ளை செய்யணும். இப்படி ஹேரை செட் பண்ணப் பிறகு, ஒரு நாளைக்கு மட்டும் இந்த ஸ்டைல் என்றால் ஹேர் ஸ்ப்ரே (தலைமுடியினை எப்படி வேண்டுமோ அப்படி வாரிவிட்டு) முடியில் அப்ளை செய்தால் முடி கலையாது. காற்றில் சென்றாலும் கலையாது. லேசாக ஒரு முறை பிரஷ் செய்தால் போதும். ஹேர் ஸ்ப்ரே உபயோகித்தால் 24 மணி நேரத்திறுகு மேல் முடியில் வைத்திருக்காமல் அலசி விடுங்கள். இல்லாவிட்டால் முடி உதிர்வு ஏற்படும். ஒரு வாரத்திற்கு செட் செய்ய வேண்டுமென்றால் ஹேர் செட் பண்ற பாலீஷ் அல்லது ஷைனிங் க்ரீம் போன்றவற்றை உபயோகிக்கலாம். இந்த முறையில் தினமுமே ப்ளோயரிலோ அல்லது ஸ்ட்ரெயிட்னரிலோ காலையில் ஒரு முறை டச்சப் செய்து லேசாக க்ரீம் அப்ளை செய்ய வேண்டும். இந்த வகை க்ரீம்கள் ஸ்ப்ரேயாகவும் கிடைக்கிறது. சீரம் போன்றும் கிடைக்கின்றது. பார்க்க ஆயில் லேசாக அப்ளை செய்த ஷைனிங் இருக்கும்.
நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால் சலோன் சென்று ஒரு முறை செய்து கொண்டு அவர்களிடமே ப்ராடக்ஸ் பற்றிக் கேளுங்கள். இந்தியா என்றால் ப்யூட்டி ப்ராடக்ட்ஸ் விற்கும் கடைகளுக்கு சென்று நீங்களே பார்த்து செலெக்ட் செய்யுங்கள். நம் ஊர் பார்லர்களில் (நேச்சுரல்ஸ் பார்லரில் கூட) எந்த ப்ரொடக்ஷன் ஸ்ப்ரேயும் இல்லாமல், சில சமயம் தவறான ஸ்ப்ரே அப்ளை செய்தும் ஸ்ட்ரெயிட்னிங் செய்கிறார்கள். முடி நிச்சயம் இதனால் பாதிப்படையும். ஃப்ரீ ஹேர் விட முன் பக்கம் லேசா லேயர் வர்ற மாதிரி ஹேர் கட் செய்தால் நன்றாக இருக்கும்.
gd mor mam
thank u mam
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!