கோழி கொத்தமல்லி மசாலா

தேதி: December 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கோழிக்கறி - முக்கால் கிலோ
நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு கப்
நறுக்கிய புதினா - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5 பற்கள்
சீரகம் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். கோழிக்கறியைச் சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயைத் தண்ணீரில் அலசி எடுத்து, கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பூண்டின் தோலை உரித்துவிட்டுப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், நறுக்கிய பூண்டு போட்டு வதக்கவும்.
அத்துடன் கொத்தமல்லி விழுதையும், தயிரையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும்.
பிறகு சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, தேவையெனில் மேலும் சிறிது உப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும்.
கோழி நன்றாக வெந்தவுடன் கரம் மசாலாத் தூள் தூவிக் கிளறிவிட்டு இறக்கவும்.
கொத்தமல்லியின் மணத்துடன் வித்தியாசமான, சுவையான கோழி கொத்தமல்லி மசாலா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப‌ அழகா செய்து காட்டியிருக்கீங்க‌...
படங்களும் அழகா இருக்கு.
வாழ்த்துகள்!

ஆஹா பார்க்காவே நாவூறுது கண்டிப்பா செய்து பார்த்து சொல்றேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

chance illa. sema superana dish. kandipa ippo try panna mudiyadhu. once bird flue pona udane indha dish tha first try pannuva. thanks revs and congrats kitchen queen.

எல்லாம் சில‌ காலம்.....

பார்க்கும் போதே சாப்பிடத்தோனுது சூப்பர் ;)

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்