பேக்டு ஹெர்ப் பொட்டேட்டோஸ்

தேதி: December 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் பேக்ட் ஹெர்ப் பொட்டேட்டோஸ் என்கின்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - 2
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
புதினா மற்றும் கொத்தமல்லித் தழை - தலா ஒரு கப்
பூண்டு - 5 பற்கள்
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கில் வெண்ணெய், புதினா, கொத்தமல்லி விழுது, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ஊறியவுடன் 300 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைத்து, 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
டேஸ்டி பேக்டு ஹெர்ப் பொட்டேட்டோஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஒவ்வொறு ரெசிப்பியும் கலக்கலா இருக்கு ரே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.